தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திடுக
3 Jul 2026, 1:20 am
<p><strong>தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திடுக</strong></p><p>கோவை, ஜூலை 2- தங்க நகை தொழிலாளர் கோரிக்கை தினத்தையொட்டி, தங்க நகை தொழிலாளர்களின் வாழ்வுரி மையை பாதுகாக்க வலியுறுத்தி கோயம்புத்தூர் தங்கநகை தொழிலா ளர் யூனியன் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரம்பரிய தங்க நகை தொழி லாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும். அரசாங்கம் விதித்துள்ள குறைந்தபட்ச ஊதிய முறையை அனைத்து நிறுவனங்களி லும் உடனடியாக அமுலாக்க வேண் டும். பொற்கொல்லர் நல வாரியத்தில் எளிதாகப் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க் கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன் (சிஐ டியு) சார்பில் கோவை காந்தி பார்க் ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் என்.எம்.கண்ணன் தலைமை ஏற் றார். சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சந்திரன், பொருளாளர் பி.மருதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர். வேலுசாமி, மாவட்ட துணைச் செய லாளர் எம்.கே.முத்துக்குமார் ஆகி யோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில், தங்க நகை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எம்.கோபால், ஏ.செந் தில், எம்.ஞானசேகர் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். நிறை வாக, துணைச்செயலாளர் எஸ்.சம் பத்குமார் நன்றி கூறினார்.</p>
