சிறுமி பாலியல் வன்கொலை: நீதி கேட்டு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
25 May 2026, 1:29 am
<p><strong>சிறுமி பாலியல் வன்கொலை: நீதி கேட்டு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, மே 24– கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப் பட்ட சம்பவத்தை கண்டித்தும், சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட் டும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதி யில் 10 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, படு கொலை செய்யப்பட்ட சம்பவத் தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரச் செயலை கண்டித்தும், சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஞாயிறன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சூலூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தாலுகா தலைவர் ஏ. பிரவீன்குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்டச் செயலாளர் எம்.தினேஷ் ராஜா, தாலுகா செயலாளர் எஸ். குருசாரதி, மாணவர் சங்க மாவட் டத் தலைவர் பாவெல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டி ருப்பது ஆறுதல் அளித்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான இத்தகைய வன்முறைகள் மீண்டும் நிகழாத வண்ணம், அரசு நிர்வாகம் கண்காணிப்பை பலப்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. முடிவில், சங்கத்தின் தாலுகா பொருளாளர் ஜி.உதய பாரதி நன்றி கூறினார்.</p>
