அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மேற்கூரையில் தேங்கிய மழைநீர்: பயணிகள் அச்சம்
2 Nov 2026, 12:36 am
<p><strong>அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மேற்கூரையில் தேங்கிய மழைநீர்: பயணிகள் அச்சம்</strong></p><p>கோவை, நவ.1-கோவை அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை திரை கிழிந்து, மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், அங்குகாத்திருக்கும் பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்தனர்.</p><p>கோவை நகரின் மிக முக்கிய மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக கோயம்முத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதி விளங்குகிறது. புறநோயாளிகள், உள்நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகரில் பெய்த கனமழையின் காரணமாக, இந்த பேருந்து நிறுத்த மேற்கூரையின் தார்ப்பாய் திரை கிழிந்து தொங்குகிறது. கிழிந்த அந்த இடைவெளியில் வடிந்து வெளியேற வழியின்றி பெருமளவில்மழைநீர் தேங்கி நிற்கிறது. பலத்த காற்று வீசும்போதோ அல்லது கூடுதல் மழை பெய்யும்போதோ, தேங்கியுள்ள தண்ணீரின் அதிக பாரம் தாங்காமல் மேற்கூரை ஒட்டுமொத்தமாக அறுந்து கீழே விழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன்பாக, மாநகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையினரும் உடனடியாக தலையிட்டு, சேதமடைந்த மேற்கூரையை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
