முந்தய பக்கம்

குப்பை மேலாண்மை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு

3 Jul 2026, 1:22 am
குப்பை மேலாண்மை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு
<p><strong>குப்பை மேலாண்மை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு</strong></p><p>கோவை, ஜூலை 2- கோவை மாநகராட்சி, கணபதி பகுதியில் நுண்குப்பை உர மாக்கும் மையம் மற்றும் திடக்கழிவு பிரித்தல் மையம் அமைக் கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் மாநகராட்சி ஆணை யர் உள்ளிட்டோருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. அம்மனுவில், சுமார் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் 24 லட்சம் லிட்டர் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் மேல்நிலை தொட்டிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இங்கு குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்சிப்பது மக்களுக்கு உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். திட்ட மிடப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் தனியார் மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் மற்றும் ஆயிரக் கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளதால், இத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். குடியிருப்புக ளுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்தில் மட்டுமே அமைக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று கண பதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குடியிருப் போர் நலச்சங்க தலைவர் எம்.ஏழுமலை, சிபிஎம் எஸ்.எஸ். குளம் கிழக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயகாந்தன், குட்டி, கிளைச் செயலாளர் மணி, மாமன்ற உறுப்பினர்கள் மரியராஜ், சிவா பழனிச்சாமி, பூங்கொடி சோமசுந்தரம், தவம ணி, அம்பிகா தனபால், சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram