கால்பந்துகால்பந்து திருவிழாவைக் கொண்டாடிய கோவை இளைஞர்கள்! திருவிழாவைக் கொண்டாடிய கோவை இளைஞர்கள்! - அ.ர.பாபு
20 Jul 2026, 8:56 pm

கால்பந்துகால்பந்து திருவிழாவைக் கொண்டாடிய கோவை இளைஞர்கள்! திருவிழாவைக் கொண்டாடிய கோவை இளைஞர்கள்! - அ.ர.பாபு

விளையாட்டு என்பது பொழுது போக்கு மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த மனிதக் கூட்டத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் பேரன் பின் பெருவெள்ளம் என்பதை கோவை மாநகரம் மீண்டும் ஒருமுறை நிரூ பித்துக் காட்டியிருக்கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், கோவை எஸ்.என்.ஆர் அரங்கத்தில் கடந்த இருபது நாட்களாக உலக கால்பந்து போட்டி கள் பிரம்மாண்டத் திரையில் ஒளிபரப்பப் பட்டன. இறுதிப்போட்டி என்றதும் கோவை மாவட்டத்தின் மூலைமுடுக்கி லிருந்தெல்லாம் கால்பந்து காதலர்கள் படையெடுத்தனர்.

நள்ளிரவுச் சோதனையும், ‘ப்ரோக்களின்’ விவேகமும்!

இறுதிப்போட்டி நள்ளிரவு 12.30 மணிக்குத் துவங்கியது. ஆனால், ஞாயிறு பிற்பகல் 2 மணி முதலே எஸ்.என்.ஆர் அரங்கம் திருவிழாக் கோலம் பூண்டது. ஜெர்சி விற்பனைக் கடைகள், விசில்கள், பதாகைகள் விற்கும் கடைகள் திடீரென முளைத் தன. காவல்துறை வந்து ஒழுங்கு படுத்துவதற்குள் அத்தனை பொருட் களும் விற்றுத் தீர்ந்த வேகம், ரசி கர்களின் ஈர்ப்பைக் காட்டியது. அதிகபட்சம் மூவாயிரம் பேர் வரு வார்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்த்த நிலையில், இரவு 8 மணிக்கே சுமார் 7 ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அரங்கத்திற்கு வெளியே மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. “இதற்கு மேல் இடமில்லை” என நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்ட பின்னரும், காட்டா ற்று வெள்ளமாய் வந்த ரசிகர்கள் சுற்றுச்சுவரை எட்டிக்குதித்து உள்ளே நுழைந்தனர். வாலிபர் சங்க ஊழி யர்கள் கூட்டத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தினர். நள்ளிரவு 12 மணி. ரசிகர்கள் எழுப்பிய உற்சாகக் குரல் ஆவாரம்பா ளையம் பகுதியையே அதிரச் செய்தது. ஆனால், சரியாக ஆட்டம் தொடங்கு வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அந்தப் பேரிடி விழுந்தது! பத்தாயி ரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் இணையச் சேவை முற்றிலும் முடங்கி யது. திரையில் ஒளிபரப்ப இயலாத நிலை ஏற்பட்டதும் ரசிகர்களிடம் பதற்றம் தொற்றியது. அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. கூட்டத்தில் இருந்த தொழில்நுட்ப ‘ப்ரோக்கள்’ சவாலைத் தங்களின் கைகளில் எடுத்தனர். பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, ஒரு இளைஞரின் ஐடியா ‘கிளிக்கானது’. போட்டி ஆரம்பிக்க சில நொடிகள் இருக்கும்போது திரை உயிர்பெற்றது! அந்த நள்ளிரவில் ஒட்டுமொத்த கோவையுமே பெருமூச்சு விட்டு ஆர்ப்பரித்தது.

ஸ்பெயினின் தந்திரமும் அர்ஜெண்டினாவின் வீழ்ச்சியும்

2024 மார்ச் முதல் தோல்வியே அறியாமல் 37 போட்டிகளில் வெற்றிச் சாதனையுடன் இறுதிப் போட்டிக்கு வந்த ஸ்பெயின், ஆட்டம் தொடங்கிய முதல் நொடியிலிருந்தே பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 5-ஆவது நிமிடத்திலேயே ஸ்பெயி னின் இளம் நட்சத்திரம் லாமினே யமல் அடித்த ஷாட்டை அர்ஜெண்டினா கீப்பர் மார்டினெஸ் அற்புதமாகத் தடுத்தார். அடுத்த நிமிடமே மெஸ்ஸி அனுப்பிய அழகான பாஸை ஸ்பெயின் கீப்பர் சைமன் முறியடித்தார். துரதிர்ஷ்ட வசமாக, ஒரு ஆக்ரோஷமான ஸ்லைடிங் டேக்கிளின் போது மார்டினெ ஸிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு வெளி யேறினார். அவருக்குப் பதிலாக ஒட்ட மெண்டி களம் கண்டாலும், அந்த இடை வெளியை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை. 82-வது நிமிடத்தில் ஸ்பெயினின் கோல் வாய்ப்பைத் தடுக்க அர்ஜெண்டி னாவின் பெர்னாண்டஸ் செய்த ஃபவுலால் மஞ்சள் அட்டை வழங்கப் பட்டது. கூடுதல் நேரத்தில், மீண்டும் குபர்சியை ஆபத்தான முறையில் தடுத்ததால் பெர்னாண்டஸிற்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டு, சிவப்பு அட்டையாக மாறி வெளியேற்றப்பட்டார். 10 வீரர்களுடன் அர்ஜெண்டினா நிலைகுலைந்தது.

106-வது நிமிட மின்னல் கோல்!

ஆட்டம் கூடுதல் நேரத்திலும் 0-0 என சமநிலையில் இருந்தபோது, பெனால்டி ஷூட்-அவுட்டை நோக்கி நகர்வதாகவே அனைவரும் கருதினர். ஆனால், அந்த இக்கட்டான 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு மின்னல் வேகத் தாக்குதலைத் தொடுத்தது. வலது பக்கத்திலிருந்து வில்லி யம்ஸ் தலையால் முட்டி அனுப்பிய பந்தை, பாக்ஸின் நடுவில் நின்றிருந்த டோரெஸ் தனது இடது காலால் மிகத் துல்லியமாக கோல் போஸ்ட்டிற்குள் திணித்தார்! அரங்கம் உறைந்தது. ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. கடைசி நிமிடங்களில் சமநிலை பெற அர்ஜெண்டினா செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இத்தொடரில் 19 கோல்களை அடித்து, ஆகச்சிறந்த அட்டாக் அணி யாக வலம் வந்த அர்ஜெண்டினாவை, ஸ்பானியர்கள் தங்களது துல்லிய மான பாஸ்கள் மூலம் மூச்சுத் திணற வைத்தனர். இந்தத் தொடரில் 6 போட்டிகளில் ‘கிளீன் ஷீட்’ சாதனை படைத்த ஸ்பெயின், இறுதிப் போட்டியிலும் கோல் ஏதும் வாங்காமல் கோப்பையைத் தட்டித் தூக்கியது.

மனிதநேயத்தின் குரலாய் ஒலித்த வெற்றி!

போட்டி முடிந்ததும் ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் பேசுகையில், “10 வீரர்களுடன் 115 நிமிடங்கள் வரை எங்களை கோல் அடிக்க விடாமல் தடுத்த மார்டினெஸ் ஒரு விதிவிலக் கான கோல்கீப்பர்” என அர்ஜெண்டி னாவுக்கு உயரிய மரியாதை செலுத்தினார். வென்றது ஸ்பெயின் என்றாலும், ஒட்டுமொத்த கோவை ரசிகர்களும் ஸ்பெயினின் வெற்றியைத் தங்களின் வெற்றியாகக் கொண்டாடினர். அப்போது, ஸ்பெயின் அணியினர் மைதானத்தில் பாலஸ்தீனக் கொடியை ஏந்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் துய ரத்தை உலகம் மறந்துவிடக் கூடாது என்ற செய்தியை உரக்கச் சொன்ன நொடிகள் கோவையின் திரையிலும் எதிரொலித்தன. கோவையில் கூடி யிருந்த ரசிகர்களின் வாயில் இருந்தும் “சுதந்திர பாலஸ்தீனம்” என்கிற முழக்கம் உணர்ச்சிப் பிழம்பாக வெடித்தது. எல்லா வெற்றிகளும் வரலாற்றில் நிலைத்து நிற்பதில்லை. ஆனால், அநீதிக்கு எதிராக மனிதநேயத்தின் பக்கம் துணிவுடன் நிற்கும் வெற்றிகளே என்றும் நினைவில் வாழ்கின்றன. கோப்பையை வென்றதற்காக மட்டு மல்ல, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த துணிச்சலுக்காகவும் ஸ்பெயின் அணிக்கு கோவையின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஏனெனில், அநீதிக்கு எதிரான வெற்றிதான் உண்மையான வெற்றி!