தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்லூரிகளில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை தேடும் மாணவிகள்!

9 May 2026, 1:58 am
கல்லூரிகளில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை தேடும் மாணவிகள்!
<p><strong>கல்லூரிகளில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை தேடும் மாணவிகள்!</strong></p><p>கோவை, மே 8- தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கோவையில் உள்ள அரசு மற்றும் தனி யார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 36,558 மாணவ, மாண விகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் 34,264பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முடிவுகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே கல் லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. தற்போது மாணவர்கள் இணையதளம் வாயிலாகவும், நேரடி யாகவும் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் கோவையில் உள்ள முக்கிய கல்லூரி களில் மாணவர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. வழக்கமாக மாணவர்கள் பி.காம், பி.ஏ போன்ற பாரம்பரியப் படிப்புகளை தேர்வு செய்வார்கள். ஆனால், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் தேர்வு மாறியிருப்பதை காண முடிகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சைபர் செக்யூரிட்டி (Cyber Security), தரவு அறிவியல் (Data Science), போன்ற அடுத்த தலை முறை தொழில்நுட்பப் பாடப்பிரிவு களில் சேர மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்கால வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, கணினி சார்ந்த புதிய துறைகளை மாணவிகள் முதன்மையாகத் தேர்ந்தெடுத்து விண் ணப்பித்து வருவது கல்வித்துறை வட் டாரங்களில் வரவேற்பைப் பெற்றுள் ளது. கல்லூரி சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் தயார் செய்யும் பணி கள் விரைவில் தொடங்க உள்ள நிலை யில், இந்த ஆண்டு முன்னணி கல்லூரி களில் கடும் போட்டி நிலவும் என எதிர் பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.