தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

29 Oct 2026, 12:32 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கழிவுநீர் கால்வாயை சீரமைக்கக்கோரி மனு

கோவை, அக்.28-சவுரிபாளையம், சாமியார் வீதி-2 பகுதியில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைக்கக்கோரி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி கிழக்கு மண்டல ஆணையரிடம் புதனன்று மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட சௌரியபாளையம் 51 ஆவது வார்டு, சாமியார் வீதி-2 பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணியின்போது கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து இடிக்கப்பட்டுள்ளது. இதனால்,அப்பகுதியில் வசிக்கும் மக்கள்சென்று வருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும்,தற்போது மழைக்காலம் என்பதால் சாக்கடை நீர் சாலையில் தேங்கி நிற்பதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைத்து, இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் நகரக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், பிஜு மேரி ஆகியோர் அப்பகுதிமக்களுடன் இணைந்து வழங்கினர்.

இலக்கிய பயிற்சிப் பாசறை!

தருமபுரி, அக்.28-அரூர் அரசு கலைக்கல்லூரியில், இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், கல்லூரி மாணவர்களிடையே தமிழ் இலக்கியங்களை படிக்கும் ஆர்வத்தையும், இலக்கிய படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான இளையோர் இலக்கிய பயிற்சிப் பாசறை அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பெ.ராஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் கு.மங்கையர்க்கரசி, துணை முதல்வர் க.குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரூர் வருவாய் கோட்டாட்சியர் சி.செம்மலை சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், பல்வேறு தலைப்புகளில் இலக்கியம் மற்றும் மொழி சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முனைவர் கு.சிவப்பிரகாசம், “சங்க இலக்கியம் போற்றும் ஈகை மற்றும் சமூக அறம்” என்ற தலைப்பிலும், முனைவர்க.சிவகாமி, “ஔவையும் காக்கை பாடினியாரும்: சங்க காலப் பெண்பாற் புலவர்களின் ஆளுமையும் சமத்துவமும்” என்றதலைப்பிலும் உரையாற்றினர். முனைவர் பெ.சுகனேஸ்வரன், “தமிழ் வளர்த்த தகடூர்” என்ற தலைப்பிலும், முனைவர் பா.குப்புசாமி, “சங்க கால வீரமும் தாய்மையும்”என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தனர். சி.முருகன், “செய்யறிவும் நூலகங்களின் புதிய பரிமாணமும்” என்ற தலைப்பிலும், தகடூர் ப.அறிவொளி, “காணொலி யுகத்தில் தமிழ்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

கால்நடை வளர்ப்பு பயிற்சிப் பட்டறை!

உடுமலை, அக்.28–உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காலநிலைமாற்றங்களை தாங்கும் கால்நடை மற்றும் கோழிப்பண்ணை வளர்ப்புக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிப் பட்டறை செவ்வாயன்று நடைபெற்றது.

ஹாரிகேன் வெட்ஸ் சர்டிஃபிகேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இப்பட்டறைக்கு, கல்லூரி முதல்வர் சி.மணிவண்ணன் தலைமை வகித்தார். கால்நடை மற்றும் கோழிப்பண்ணை வளர்ப்பில்நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். பண்ணைகளை கண்காணித்தல், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக, கால்நடை உற்பத்தி மேலாண்மைத்துறை இணை பேராசிரியரும் தலைவருமான முனைவர் அ. கிளெமென்ட் எபினேசர் ஹென்றி வரவேற்றார். கால்நடை உடல்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறைப் பேராசிரியரும் தலைவருமான முனைவர் ஏ. தவசியப்பன் நன்றி கூறினார். இதில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ரயில் பயனாளிகள் சங்கம் வலியுறுத்தல்

உடுமலை, அக்.28 -தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களை இணைக்கும் வழித்தடங்களில் உடனடியாக சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு தமிழ்நாடு ரயில் பயனாளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் என். சுப்பிரமணியன் அனுப்பியுள்ள கடிதத்தில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் இதுவரை சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகாதது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். சென்னை மட்டுமின்றி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களையும், அண்டை மாநிலங்களையும் இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

அதன்படி, சென்னை – கோவை, திருநெல்வேலி, போடிநாயக்கனூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களிலும், கோவை – ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கொல்லம், போடிநாயக்கனூர், திருவனந்தபுரம், திருச்செந்தூர், தாம்பரம் ஆகிய வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். மதுரை – நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

மேலும், சென்னை – மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம், எர்ணாகுளம், மங்களூரு ஆகிய வழித்தடங்களிலும், மைசூரு – காரைக்குடி, திருநெல்வேலி – மும்பை, தூத்துக்குடி – மும்பை ஆகிய வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

உடுமலையில் குரூப்-4 இலவச பயிற்சி வகுப்பு

உடுமலை, அக்.28-உடுமலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசபயிற்சிமையம் உடுமலையில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 மற்றும் வனத்துறை சார்ந்த 6,574 காலிப்பிடங்களுக்கான தேர்வு 2027 ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், உடுமலைப்பேட்டை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள கூடுதல் பயிற்சி மையத்தில் குரூப்-4தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவ.3ஆம் தேதி காலை 10:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.இதில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோஅல்லது 0421-2999152, 94990 55944 என்ற எண்களை தொடர்புகொண்டோ தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம், அக்.28-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.சென்னைசென்ட்ரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (எண்: 06023) நவம்பர் 6-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சந்திப்பை சென்றடையும். மறுமார்க்கத்தில் போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (எண்: 06024) நவம்பர் 9 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும்திருப்பூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 29 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்பறிமுதல் செய்யப்படும்” - அமைச்சர் பேட்டி

சேலம், அக்.28-அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநில அளவிலான 67 ஆவது குடியரசு தின தடகளப் போட்டியை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்களை சார்ந்த பல லட்சம் பேர் பயன்பெறுவார்கள். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க, அனைத்து பேருந்துகளையும் இணைத்து முன்பதிவு செய்யும் வகையில் அரசின் சார்பில் தனி செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பேருந்துகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விழாக்காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: போக்சோவில் வழக்கு

உடுமலை, அக். 28திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா ருத்ராபாளையத்தில், இரு சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரில் செல்வராஜ் (48) என்பவர் மீது போலீசார் போக்சோசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த அக். 23-ம் தேதி இரவு, தின்பண்டங்கள் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.