கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
3 Jun 2026, 10:33 pm

மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கல்

நாமக்கல், ஜூன் 3- காவிரி ஆற்றில் குளித்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரி ழந்த நிலையில், ரூ.4 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் விஜய லட்சுமி குடும்பத்தினரிடம் வழங்கினார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரகாரம் பகு தியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (26), செவ்வாயன்று நண்பரின் தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார். நண்பர் கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த பள்ளிபாளையம் போலீ சார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந் நிலையில், புதனன்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்த வரின் குடும்பத்தினரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தமிழக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உத விக்கான ஆணையை கோபாலகிருஷ்ணனின் மனைவி தேவகியிடம் வழங்கினார். 3 வயது மற்றும் 5 மாத பெண் குழந்தைகளுடன் வாழும் தேவகிக்கு, அவரது கல்வி தகுதிக் கேற்ப அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் உறுதியளித்தார்.

விபத்தில் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

சேலம், ஜூன் 3- மகுடஞ்சாவடி அருகே இருசக்கர வாகனத்தை தள்ளி சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் மீது சரக்கு லாரி மோதி உயிரிழந்தனர். கேரளம் மாநிலத்தை சேர்ந்த அட்சய துளசி (18) மற்றும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (25) ஆகியோர், சேலம் மாவட்டம், சீரகாபாடி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி யில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று சங்ககிரியை அடுத்த மகுடஞ்சாவடி அருகே காக்காபாளை யம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தபோது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாததால் சாலையோரம் வாகனத்தை நடந்து தள்ளி சென்றுள்ளனர். அப்போது அதே திசையில் பின்புறமாக வந்த சரக்கு லாரி, அவர்கள் மீது மோதியது. இதில், கல்லூரி மாணவர்கள் இரு வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சரக்கு லாரி ஓட்டுநர் ஏழுமலையை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார சீர்கேடு: நோய் பரவும் அபாயம்!

தருமபுரி, ஜூன் 3- நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, கால் வாயில் கழிவுநீர் தேங்கி காணப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவ லகம் நல்லம்பள்ளி - இலளிகம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை பராமரிப்பு செய்து பல வருடங்கள் ஆகின்றன. அதன் காரணமாக கால் வாயில் அதிக சகதிகள் தேங்கி நிற்பதால், கழிவுநீர் செல்வ தற்கு போதிய வழி இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள், முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. அலுவலக சுற்றுச்சுவர் ஒட்டியே கழிவுநீர் கால்வாய் தேங்கு வதால், சுவர் ஊறி சாய்ந்து கீழே விழும் நிலையும் உருவாகி யுள்ளது. எனவே, தேங்கி இருக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்தி, கீழே விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவரை மறு சீர மைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.2.11 கோடி அபராதம் வசூல்

சேலம், ஜூன் 3- சேலம் ரயில்வே கோட்டத்தில் முறைகேடாக பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.2.11 கோடி அபராதம் வசூ லிக்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட் டங்களை உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்டத்தில், பய ணச்சீட்டு பரிசோதகர்கள் மேற்கொண்ட தீவிர சோதனை யில் 26,886 பேர் விதிமுறைகளை மீறி பயணம் செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.2.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே வருவாயை பாதுகாக்கவும், முறைகேடான பய ணங்களை தடுக்கவும் தொடர்ந்து சிறப்பு சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியிருப்புக்குள் மழைநீருடன் புகும் கழிவுநீர் வடிகால்களை தூர்வார சிபிஎம் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 3- தருமபுரி நகராட்சியில் மழைநீரோடு கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க, கால்வாய்களை தூர்வார வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்மையில் பெய்த மழையால், தருமபுரி நகரின் முகமது அலி கிளப் சாலை, செங்கொடிபுரம், குமாரசாமிப்பேட்டை பகுதி களில் மழைநீரோடு கலந்து கழிவுநீர் தெரு வில் ஓடி, வீடுகளுக்குள் புகுந்தது. கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், வடி காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளி யேறாமல் வீடுகளில் புகுந்ததால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில், தருமபுரி மற்றும் அரூர் நகராட்சி, பேரூராட்சி பகுதிக ளில் வடிகால் வசதி ஏற்படுத்தி, கழிவுநீர் தேங் காமல் முறையாக தூர்வார வேண்டும். கூடு தல் தூய்மைப் பணியாளர்களை பணிய மர்த்தி, பராமரிப்புப் பணிகளை மேற் கொண்டு, சுகாதாரத்தை பேணி காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், கர்நாடகா மாநில அரசு காவிரி யின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி னால், தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் ஆதார மாக உள்ள ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் கேள்விக்குறியாகும். எனவே, அணைக்கட் டும் முயற்சியை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.