கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
19 Jun 2026, 10:35 pm

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ராஜிநாமா கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

உதகை, ஜூன் 19- ஆட்சி மாற்றத்தால் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை உத கையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், நீதிபதி முரளிதரன் முன்னி லையில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, சதீசன் ஆகியோர் ஆஜராகினர். இதனி டையே, இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக ஆஜ ராகி வந்த ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர், ஆட்சி மாற்றம் காரணமாக தங்களது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பத வியை ராஜிநாமா செய்தனர். இதைத்தொடர்ந்து, புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்ய கால அவகா சம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

மார்க்ஸ் சிலை: சிபிஎம் வரவேற்பு

உடுமலை, ஜூன் 19- உடுமலை நகரத்தில் மாமேதை காரல் மார்க்சின் முழு உருவச்சிலை நிறுவ நகரமன்றக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்த நகர் மன்ற உறுப்பினர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தை முன்மொழிந்து, காரல் மார்க்சின் சிலை யின் வடிவமைப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அனைத் தையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட 31-ஆவது வார்டு உறுப்பினர் சி.வேலுச்சாமிக்கும், இதற்கு ஆதரவளித்த நகர மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை நகரக்குழு சார்பில் வாழ்த்து களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இத் தீர்மானத்தை கொண்டுவந்த நகரமன்ற உறுப்பினர் சி.வேலுச்சாமியை நேரில் சந்தித்த, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ்கே .தண்டபாணி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.பஞ்சலிங்கம் மற்றும் நகரக்குழு, கிளைச் செயலாளர்கள், சால்வை அணி வித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

உலக சாதனை: மாணவிகளுக்கு பாராட்டு

உதகை, ஜூன் 19- உலக சாதனை படைத்த நீலகிரி மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் புனித பிரான்சிஸ் சேவியர் கான்வென்ட் பள்ளி மாணவிகள் இருவர், சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த் துள்ளனர். அப்பள்ளியை சேர்ந்த மாணவி நிஷானி, திருக் குறள் ஒப்புவித்தல் பிரிவிலும், மற்றொரு மாணவியான ஏ.ஜனனி, ஏ4 அளவு காகிதத்தில் இந்தியாவின் முன்னாள் குடி யரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவப் படத்தை தலைகீழாக வரைந்தும் இந்த அசாத்திய உலக சாதனைகளை புரிந்துள்ளனர். இவர்களில் 13 வயதான மாணவி ஜனனி, தனது அசாத்திய திறமையால் மிக குறைந்த வயதிலேயே இச்சாதனையை நிகழ்த்தி சர்வதேச சான்றி தழை பெற்றுள்ளார். மாணவிகளின் இந்த வரலாற்று சாத னையை பாராட்டி, பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாணவிகளின் பயிற்சியா ளர் கிருஷ்ணகுமார், கூடலூர் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் மகேஷ்வரன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டு, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கல்குவாரியால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆட்சியரிடம் புகார்

தருமபுரி, ஜூன் 19- சி.பள்ளிபட்டியில் இயங்கும் கல்குவாரியால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியில் வசிக்கும் பழங்குடி உட்பட பல்வேறு சமூக மக்கள், விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் தனி யாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்குவதால் பொது மக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப் பாக, கல்குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசா யம் செய்வதற்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகி யுள்ளது. மேலும், வெடி வைப்பதன் மூலம் கிராமத்திலுள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும், வெடி வைப்பதன் மூலம் வெளிவரும் கல், வீட்டின் கூரைகளின் மீதும், தோட்ட வேலை செய்பவர்கள் மீதும் விழுகிறது, குவாரியிலிருந்து வெளிவரும் தூசியால் மக்களுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்படு கிறது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதியும், கிராம மக்களின் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி யும், கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உட னடியாக அதிகாரிகளை களத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

குடிநீர் தட்டுப்பாடு: சாலை மறியல்!

திருப்பூர், ஜூன் 19- கொடுவாய் பகுதியில் பல மாதங்களாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வெள்ளியன்று தாராபுரம் சாலை யில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், கொடுவாய் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மாதக்கணக்கில் குடிநீர் விநியோகம் சீர்குலைந்துள்ளது. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நிலுவையி லுள்ள முறைகேடான குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கக் கோரியும், சீரான விநியோகத்தை வலியுறுத்தியும் பொது மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் அலட்சி யம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தக வல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செய லாளர் மற்றும் அவிநாசிபாளையம் போலீசாரிடம் பொது மக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில், இரண்டு நாட்களில் குடிநீர் விநியோகம் சீரமைக்கப் படும்; முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆர்டிஓ அலுவலகங்களில் உயர் அலுவலர்கள் நியமிக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 19- திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காலியாக உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று சிஐடியு மோட்டார் ஆட்டோமொபைல் லேபர் யூனி யன் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன், செயலா ளர் அன்பு ஆகியோர் தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, முக்கிய தொழில் நகரமான திருப்பூரில் புதிய வாகனப் பதிவு, ஓட்டு நர் உரிமம், எஃப்சி தரச்சான்று, பெயர் மாற்றம் போன்ற பணிகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் வந்து செல்கின்ற னர். ஆனால், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆர்டிஓ அலுவ லகங்களில் பல மாதங்களாக அதிகாரிகள் இல்லாததால், தாராபுரம் ஆர்டிஓ கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதனால் தாராபுரத்திலும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. போதிய ஊழியர்கள் இல்லாததால் வாகனப் போக்கு வரத்து தொடர்புடைய பணிகள் கடும் சுணக்கமடைந்து, பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், சான்றி தழ்களை அஞ்சல் மூலம் அனுப்பும் நடைமுறையிலும் பல் வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்க ளின் நலன் கருதி திருப்பூர் வடக்கு, தெற்கு அலுவலகங்க ளுக்கு உடனடியாக நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலு வலர்களையும், தேவையான கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

கார் மோதி முதியவர் உயிரிழப்பு

தருமபுரி, ஜூன் 19- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஏழுகுண்டுர் கிராமத்தை சேர்ந்தவர் எம்.முனு சாமி (70). இவர் நாள்தோறும் அதிகாலை நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், புதனன்று அதிகாலை நப்பயிற்சிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். அப்போது, அவரது மனைவி சாலம்மாள் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். பஞ்சப்பள்ளி - மாரண்ட அள்ளி சாலையில் அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தம்பதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முனுசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சாலம்மாள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.