கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
25 May 2026, 11:20 pm

இளம்பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு

கோவை, மே 25- தொண்டாமுத்தூர் அருகே இளம்பெண்ணின் வீட் டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசிச்சென்ற 4 பேரை காவல் துறையினர் தேடி வரு கின்றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கல்லூரி யில் படிக்கும் போது சென்னையை சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகி றது. கார்த்திக் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 31க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்ததால், இளம்பெண் அவருடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்கள் மூவருடன் இருசக்கர வாக னங்களில் ஞாயிறன்று மாலை இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இளம்பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து, மண்ணெண் ணெய் நிரப்பிய பாட்டில்களை வீட்டின் மீது வீசியுள்ள னர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து தொண் டாமுத்தூர் காவல் துறையினர் கார்த்திக் மற்றும் அவ ரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு விரைவில் அரசாணை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல் ஈரோடு, மே 25- இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தார். ஈரோடு, அசோகபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் அமைச்சர் எம்.விஜய் பாலாஜி, ஞாயிறன்று ஆய்வு மேற் கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைக்காக 130 லட்சம் மீட்டர் துணி, ஈரோடு துணி நூல் பதனிடும் ஆலைக்கு வந்துள்ளது. இதில், 110 லட்சம் மீட்டர் துணி சாயமேற்றப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு 3 கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. மீத முள்ள துணி இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்படும். பொங்கலுக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் இல வச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளி யிடுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், விரைவில் அதற்கான அர சாணை வெளியிடப்படும். கைத்தறி விசைத்தறிக ளுக்கு இலவச மின்சார யூனிட் அளவு உயர்வு தொடர் பாக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார், என்றார். இந் நிகழ்வில், ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.கே.ஆனந்த் மோகன் மற்றும் கைத்தறித்துறை அதி காரிகள் உடனிருந்தனர்.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

சேலம், மே 25- ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதை யில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பேர் உயிரி ழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த செம் மாண்டப்பட்டி அருகே உள்ள ஏனாதி என்கிற கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக் கப்பட்டுள்ளது. பாலத்தின் மேல் பகுதியில் ரயில் செல்லக்கூடிய வகையிலும், அந்த பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை வழியாக வாக னங்கள் செல்லக்கூடிய வகையிலும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. மழை பெய் கின்ற நேரமெல்லாம் இந்த ரயில்வே சுரங் கப்பாதையில் மழைநீர் தேங்கியிருப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலை யில், ஞாயிறன்று சேலம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் கன மழை கொட்டி தீர்த்தது. மழையின் காரண மாக ஏனாதி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து, திங்க ளன்று அதிகாலை அந்த வழியாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டினை இழந்து சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. இதில், காரிலிருந்த கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்த னர். இதுகுறித்த தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையி னர், உயிரிழந்தவர்களுடைய உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

கூடலூர் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

உதகை, மே 25- கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, வாக்க ளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு மு.திராவிடமணி வெற்றிபெற் றார். இதையடுத்து, கூடலூர் நகரில் உள்ள கடைகளுக்கு சென்ற அவர், தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மைக்கு நன்றி என்றும், வணிகர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்நிகழ் வில், திமுக நகரச் செயலாளர் இளஞ்செழியன், மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் வெண்ணிலா சேகர், மாணவ ரணி துணை அமைப்பாளர் கிஷோர்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யோகா மற்றும் சிலம்பம் சுற்றி உலக சாதனை!

கோவை, மே 25- கோவையில் நடைபெற்ற சிறப்பு யோகா மற்றும் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சியில், 8 முதல் 18 வயது வரை உள்ள 21 மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் உடல் நெகிழ்வு திறன்களை வெளிப்படுத்தி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள பார்க் கல்லூரி வளாகத்தில் யோகா மற்றும் சிலம்பம் செய்த படி பன்முகத்திறன்களை வெளிப்படுத்தும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யோவா யோகா அகாடமியில் பயிற்சி பெறும் 8 முதல் 18 வயது வரையிலான மாணவர் கள் யோகாவில் பல்வேறு செயல்களை செய்து வியக்க வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் சக்ராசனம், உஸ்த் ராசனம், அர்த்த சக்ராசனம், யோகநித்ரா, திம்பாசனம், சிர்ச பாதாசனம் உள்ளிட்ட கடினமான யோகாசனங்களை நீண்ட நேரம் செய்து அசத்தினர். மேலும் சிலம்பம், உடல் சமநிலை திறன், நெகிழ்வு திறன் மற்றும் வேக திறனை வெளிப்படுத் தும் பல்வேறு சாதனைகளும் இடம்பெற்றன. கடினமான ஆச னங்களை விரைந்து செய்தும், சிலம்பம் மற்றும் உடல் கட்டுப்பாட்டு பயிற்சிகளிலும் மாணவர்கள் சிறப்பான திற மையை வெளிப்படுத்தினர். சாதனை படைத்த மாணவர் களின் திறமைகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் சாதனையை பாராட்டிய பெற்றோர்கள் மற் றும் பொதுமக்கள், இளம் தலைமுறையினரின் திறமை களை உலக அரங்கில் வெளிப்படுத்தும் வகையில் இத் தகைய நிகழ்ச்சிகள் மேலும் நடைபெற வேண்டும், என்ற னர்.

லாரி பறிமுதல்

அவிநாசி, மே 25- அவிநாசி அருகே புளி யம்பட்டி சாலையில் உரிய அனுமதியின்றி ஜல்லி கற் கள் கொண்டு செல்வதாக சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையினருக்கு ஞாயிறன்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதிக்கு சென்ற அலுவலர்கள் உரிய அனு மதியின்றி ஜல்லி கற்கள் கொண்டு வந்த லாரியை பிடித் தனர். தொடர்ந்து அலுவலர் கள் அளித்த புகாரின் பேரில், சேவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜல்லி கற்களு டன் லாரியை பறிமுதல் செய் தனர்.