கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
8 Jul 2026, 10:15 pm

யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் எச்சரிக்கை

தருமபுரி, ஜூலை 8- பாலக்கோடு அருகே 3 யானைகள் முகா மிட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 யானை கள் முகாமிட்டுள்ளன. இதனால் தூள்செட்டி ஏரி, கூலிகானூர், சூடானூர், பாலப்பன அள்ளி, தண்டேகுப்பம், எல்லப்பன்பாறை, சின்னேகவுண்டனஅள்ளி, சாதன்கொட் டாய், காமராஜபுரம், நீலாஞ்சனூர், கிட்டம் பட்டி உள்ளிட்ட கிராம மக்கள், மாலை 8 மணி முதல் காலை 7 மணி வரை வனத்தை ஒட்டி யுள்ள பகுதிகள் மற்றும் மாந்தோப்புகளில் தேவையின்றி நடமாட வேண்டாம். வீடுக ளுக்கு வெளியே அல்லது வயல்வெளிகள் மற்றும் கொட்டகைகளில் தங்காமல், வீட்டிற் குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். யானைகளின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

செண்பகபுதூரில் இன்று மின்தடை

ஈரோடு, ஜூலை 8- ஈரோடு மாவட்டம், சத் தியமங்கலம் மின் கோட்டம், செண்பகபுதூர் துணை மின் நிலையத்தில் வியாழனன்று (இன்று) மாதாந்திர பராம ரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் செண்ப கபுதூர், காந்தி நகர், ரங்க சமுத்திரம், கோணமூலை, விஐபி நகர், அரசூர், உக்க ரம், அரியப்பம்பாளையம், மாக்கினாம்கோம்பை, இண் டியம்பாளையம், சிக்கர சம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாலை, தாண்டாம் பாளையம் உள்ளிட்ட பகு திகளில் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோ கம் இருக்காதென செயற் பொறியாளர் எஸ்.மாரி யப்பன் தெரிவித்துள்ளார்.

பிஏபி மண்டல கால்வாய்களை தூர்வார அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 8 - பிஏபி திட்டத்தில் இரண்டு மற்றும் மூன்றாவது மண்டல கால்வாய்களை தூர் வார வேண்டும் என சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில மக்கள் நல்வாழ்வு சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜை செவ்வாயன்று சந்தித்த திரு மூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு விவசாயிகள் முறையிட்ட னர். இரண்டு மற்றும் மூன்றாம் மண்டலக் கால்வாய்களை தூர் வார நிதி ஒதுக்க வேண்டும், ரூ.4500 கோடியில் தயாரிக்கப் பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி ஒட்டு மொத்த கால் வாய்களையும் மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் மற்றும் ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை செயல்படுத்த நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் ஆயக் கட்டு அல்லாத துணைப் பாசனங்களுக்கு சட்டப்படியும், நீதி மன்றத் தீர்ப்புகளின்படியும் மட்டுமே தண்ணீர் திறக்க வேண்டும், பிஏபி திட்டத்தில் புதிய நடைமுறைகளை செயல் படுத்த முயற்சிக்கும்போது பாசன சங்கங்கள், பகிர்மானக் குழு, திட்டக்குழு ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்டு அதன் படி நிறைவேற்ற வேண்டும். மேலும் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் ஆகிய கோரிக்கைகளை அமைச்சர் அருண்ராஜிடம் திட்டக்குழு விவசாயிகள் வலியுறுத்தினர்.