தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 Aug 2026, 8:18 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தருமபுரி, ஆக.10-மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஏ.சிங்காரம் (எ) சிங்காரவேல் (61).

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 17 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறு

மிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக புகார் வந்தது. அதன்பேரில், தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டப்பிரி

வின்கீழ் வழக்கு தொடர்ந்தனர். தருமபுரி போக்சோ

சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இருதரப்பு விசாரணை முடிந்த நிலை

யில் குற்றம் உறுதியானது. இதையடுத்து, சிங்கார

வேலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அசின்பானு

உத்தரவிட்டார்.

உள்நாட்டு பனியன் ஆடைகள் 90 கிலோ வரை மட்டுமே பண்டல் எடுக்க முடிவு

திருப்பூர், ஆக.10-திருப்பூரில் உள்நாட்டு பனியன் ஆடைகளை அதிக எடைகளில் பண்டல் கட்டுவதை கட்டுப்படுத்துவதற்காக, 90 கிலோ வரை மட்டுமே பண்டல் எடுப்பது என்று பார்சல் சரக்கு கையாளும் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவை செப்டம்பர்1ஆம் தேதி முதல் அமல்படுத்தவும் தீர்மானித்துள்ளன.

திருப்பூர் பார்சல் பார்வர்டிங் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன், அமைப்புசாரா டிரான்ஸ்போர்ட்டர்கள், சிஐடியு, ஏஐடியுசி, ஏடிபி மற்றும் அமைப்பு சாராதொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர்ஓடக்காடு கேரள சமாஜம் அரங்கத்தில் திங்களன்றுநடைபெற்றது. இதில் உள்நாட்டு பனியன் ஆடைகளை பார்சல் செய்யும் போது அதிக எடையில் பண்டல் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பண்டல் எடை 90 கிலோ கிராம் வரை மட்டும் பண்டல் ஏஜெண்டுகள் எடுக்க வேண்டும். டிரான்ஸ்போர்ட்டர்கள் 90 கிலோ வரை மட்டுமே பண்டல் புக் செய்ய வேண்டும். லோடு ஏற்றும் சுமைப்பணி கூலித் தொழிலாளர்கள் 90 கிலோ வரை மட்டுமே லோடிங் செய்வார்கள். ஒரு டிரான்ஸ்போர்ட்டிற்கு வரும் பண்டல்களை வேறு ட்ரான்ஸ்போர்ட்டிற்கு புக்கிங் செய்யும்நபர்களை கண்டிக்க வேண்டும். சிபிஎம் (காட்டன்பாக்ஸ் மெசர்மென்ட்) அட்டைப்பெட்டி கொள்ளளவுபொறுத்தவரை எடை குறைத்தாலும் சிபிஎம் அளவுஅதிகமாக இருந்தால் அதற்கான தொகையை டிரான்ஸ்போர்ட்டர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைவரிடமும் கொண்டு செல்வது என்றும் முடிவு

செய்யப்பட்டது. கேரளா சமாஜத்தில் திங்களன்று பிற்பகல் சுமைப்பணி தொழிலாளர்கள் கூட்டம் நடத்தி இந்த முடிவுகளை தெளிவுபடுத்தி கூறியதாக திருப்பூர் பார்சல் பார்வர்டிங் அசோசியேசன் தலைவர் சிராஜுதீன் தெரிவித்தார்.

ஓராண்டுக்கு பிறகு மீண்டும் ஒளிர்ந்த ஐ-மாஸ் விளக்கு

கோவை, ஆக.10-வால்பாறை அண்ணா சிலை பகுதியில் உள்ள நகராட்சொந்தமான உயர் கோபுர மின் விளக்கு (ஐ-மாஸ் விளக்கு) ஒரு வருடத்திற்கு பின்பசீரமைக்கப்பட்டது.கோவை மாவட்டம், வால்பாறை புதிய பேருந்து நிலையம், ஸ்டாண்மோர் சந்திப்பு, காந்தி சிலை, அண்ணா சிலை, புதுமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உயர் கோபுரமின் விளக்கு (ஐ-மாஸ் விளக்கு) நகராட்சி நிர்வாகம் சார்பில்அமைக்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் செலவில் பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இந்த விளக்குகள் பல இடங்களில் நீண்ட நாட்களாக செயல்படாமல்உள்ளது. குறிப்பாக, அண்ணா சிலை பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவில் பகுதி முக்கியமான வீதியாக உள்ளது.

மேலும், இப்பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், மக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்தமின் விளக்கு கடந்த ஒரு ஆண்டாக செயல்படாமல் காணப்பட்டது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் விளக்குபழுது நீக்கப்பட்டு, தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள்நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல், வால்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்துஇருப்பதாகவும், சில இடங்களில் பகல் நேரங்களில் விளக்குகள் எரிந்தாலும் இரவு நேரங்களில் எரிவதில்லை என்றும்பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வால்பாறை வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்

கும் நிலையில், தெருவிளக்குகள் முறையாக செயல்படாதது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே, வால்பாறை நகரின் முக்கியவீதிகளில் பழுதடைந்துள்ள அனைத்து தெருவிளக்குகளையும் உடனடியாக சீரமைத்து, இரவு நேரங்களில் முறையாக எரிவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தெருவிளக்கு பராமரிப்புக்கு நகராட்சி நிர்வாகம் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடு கட்டி தராமல் ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் ரூ.4.15 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

உதகை, ஆக.10-வீடு கட்டி தராமல் ஏமாற்றிய ரியல்எஸ்டேட் அதிபர், உதகையை சேர்ந்த விவசாயிக்கு ரூ.4.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீலகிரி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள பார்சன்ஸ் வேலி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. விவசாயி-யான இவர், கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் என்பவரிடம், மேட்டுபாளையம் அருகே சிக்காரம்பாளையத்தில் உள்ள 2 சென்ட் நிலத்தில் வீடு கட்ட உடன்படிக்கை செய்தார்.

நிலத்திற்கும், அங்கு வீடு கட்டி தரவும்ரூ.30 லட்சம் பேசி, ரூ.20 லட்சம் வழங்கிய நிலையில், ராதாகிருஷ்ணன் கட்டுமானப் பணியை பாதியில் நிறுத்தி விட்டார். பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட தண்டபாணி, குன்னூர் நுகர்வோர் பாதுகாப்புசங்க செயலாளர் ஆல்துரை மூலமாக உதகையிலுள்ள நீலகிரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குதொடர்ந்தார்.

அநத வழக்கில், விவசாயி-யான தண்டபாணி நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வீடு கட்ட முயன்ற நிலையில், பணத்தை பெற்று கொண்டுகட்டுமானப் பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கட்டுமானம் பாதியில் நின்றதால் மனுதாரர்தனது சொந்த செலவில் கட்டுமானத்தை முடித்தார். நிலத்தின் மதிப்பு ரூ.8லட்சம் போக கூடுதலாக ரூ.8 லட்சம் மட்டும் கட்டுமானத்திற்கு ரியல்எஸ்டேட் அதிபர் செலவிட்டார்.

மனுதாரர் அளித்த பணத்தில் பாக்கி ரூ.4 லட்சத்தை திருப்பித்தர உத்தரவிட கோரிமனுவில் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீலகிரி நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர் சசிராஜா திங்களன்று தீர்ப்பளித்தனர். அதில், பாதிக்கப்பட்ட விவசாயிதண்டபாணிக்கு, ரியல் எஸ்டேட் அதிபர்ராதாகிருஷ்ணன் பாக்கி தொகை ரூ.4 லட்சம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.5000 என மொத்தம் ரூ.4.15 வழங்க உத்தரவிட்டனர். ஒரு மாதத்தில் கொடுக்கத் தவறினால் 9 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.