கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
23 Jul 2026, 11:45 pm

குண்டர் தடுப்புச்சட்டத்தில் இருவர் கைது

தருமபுரி, ஜூலை 23- தருமபுரி மாவட்டம், பருவதனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (25). இவர் கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று, அதேபகு தியை சேர்ந்த லட்சுமி (50), என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக பென்னா கரம் போலீஸார் கொலை வழக்கில் குழந்தைவேலை கைது செய்தனர். இதே போன்று, அரூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (45) என்ப வர், 17 வயது சிறுமியை கடந் தாண்டு நவம்பர் மாதம் பாலி யல் வன்கொடுமை செய்துள் ளார். இதுதொடர்பான புகா ரின் பேரில் அரூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவியை கைதுசெய்தனர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஏ.கேஅருன் கபிலன் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் வே.சர வணன் புதனன்று உத்தர விட்டார்.

பராமரிப்பில்லாத சுகாதார வளாகம்

உதகை, ஜூலை 23- நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் பல் வேறு வார்டுகளிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட் டன. முறையாக பராமரிக்கா ததாலும், தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் இல் லாத நிலையிலும், இவை பய னின்றி கிடக்கின்றன. இவை கள் தற்போது சமூக விரோதி களின் கூடாரமாக மாறி வரு கின்றன. மேலும், இந்த சுகா தார வளாகங்களை சுற்றிலும் சிலர் குப்பைகளை கொட்டு வது, பொது கழிப்பிடமாக பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரு கின்றனர். காந்தல் ரோகினி பகுதியிலும் இதுபோன்று ஒரு சுகாதார வளாகம் பய னின்றி உள்ளது. இதனை நக ராட்சி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது.ஈட்டிவீரம்பாளையத்தில் ஜூலை 27-இல் பெ.சண்முகம் தலைமையில் குடியேறும் போராட்டம் – சிபிஎம் அறிவிப்பு!

திருப்பூர், ஜூலை 23 - ஈட்டிவீரம்பாளையம் மக்களுக்கு பட்டா இடத்தை அளந்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலா ளர் பெ.சண்முகம் தலைமையில் ஜூலை 27 ஆம் தேதியன்று குடியேறும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப் பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.எப். நம்பர் 544/1-ல் உள்ள அரசு நிலத்தில் கடந்த 12.06.1994ஆம் ஆண்டு 122 ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. எனினும் பட்டாவுக்குரிய நிலத்தை அளந்து தரவில்லை. 30 ஆண்டு காலமாக பட்டா நிலத்தை அளந்து கொடுக்காததால், அந்த மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைமையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு எண் 4408/2025-ஐ விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி எம்.தண்டபாணி, கடந்த 10.10.2025 அன்று ஏற்கெனவே அந்த நிலத்தில் ஏழை மக்களுக்கு பட்டா கொடுக்கப் பட்டு இருந்தால், அதை எந்த இடை யூறும் செய்யக் கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து, பட்டா பெற்ற மக்கள் நிலத்தை அளந்து தர வரு வாய்த் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு 27854/2025-ன் மீது 17.10.2025 அன்று நீதிபதி ஜி.கே.இளந் திரையன் உத்தரவு பிறப்பித்தார். இதில் அவிநாசி வட்டாட்சியர், மனு தாரர்களின் பட்டா இடத்தை ஆறு வார காலத்திற்குள் அளந்து தர வேண்டும். இதில் மூன்றாம் தரப்பினரால் ஏதே னும் இடையூறு ஏற்பட்டால், காவல் துறை பாதுகாப்பைப் பெற்று நட வடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அவிநாசி வட்டாட்சியர் சந்திர சேகர் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள், காவல் துறை பாதுகாப்பு டன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். எனி னும் பட்டா பெற்ற மக்களுக்கு பட்டா இடத்தை அளந்து தரவில்லை. எனவே, ஜூலை 27 ஆம்தேதியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை யில், பட்டா பெற்ற மக்கள் அந்த இடத் தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படு கிறது. இந்தப் போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயிரக் கணக்கில் பங்கேற்க உள்ளனர் என தெரி விக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிவு மணல் மூட்டைகளை அடுக்கி நீரேற்றும் பணி

தருமபுரி, ஜூலை 23- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி நீரேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள் ளது. இதனால் காவிரி ஆறு வறண்டு, சிற்றோடையாக மாறி, பாறைத்திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 100 கனஅடியாக சரிந்துள் ளது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட நிலையத்தில் இருந்து நீரேற் றம் செய்ய முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நாளொன்றுக்கு கிருஷ்ணகிரி, தரும புரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 145 எம்எல்டி நீரை வழக்கம்போல நீரேற்றம் செய்து விநியோகப்பதில் தடை ஏதும் ஏற்படாது. காவிரி ஆற்றில் மணல் தடுப்புகள் அமைக் கப்பட்டுள்ள இடத்தில் தரையில் இருந்து சுமார் 2 அடி உயரத் திற்கு மட்டுமே மணல் மூட்டைகள் அடுக்கி, நாள்தோறும் தேவையான தண்ணீரை மட்டுமே நீரேற்றம் செய்வதற்கான பணி நடைபெறுகிறது. இதில் அருவிக்கு செல்லக்கூடிய நீரின் அளவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. தொடர்ந்து, அரு விக்கு நீர் செல்லும் வகையிலும், தேவையான தண்ணீரை நீரேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் மட்டுமே செய்யப் பட்டுள்ளன என்றும் கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரி வித்தனர்.

பூச்சிகளை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகம் மக்கள் பாதிப்பு: வியாபாரிகள் கடையடைப்பு

உதகை, ஜூலை 23- குன்னூர் அருகே பூச்சிகளை கட்டுப்படுத்த தவறிய பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அப் பகுதி வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் காரண மாக பல்வேறு கிராமப்பகுதிகளில் ஈசல் வகையை சேர்ந்த பூச்சிகள் லட்சக்கணக்கில் படையெடுத்து வருகின்றன. கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் லட்சக்கணக்கான பூச்சிகள் வீடு களிலும், வணிக நிறுவனங்களிலும் படையெடுத்த தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தற்போது பூச்சிகள் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் அருகே இருக்கக் கூடிய சேலாஸ் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பூச்சிகள் படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வீடுகளிலும், வணிக நிறு வனங்களிலும் சுற்றித்திரியும் பூச்சிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பூச்சி களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள வியாபாரிகள் புதனன்று கடையடைப் பில் ஈடுபட்டனர். வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் மின் விளக்கை பயன்படுத்தினால் ஏராளமான பூச்சி கள் மொய்த்துக் கொள்கின்றன எனவும், வீடுகளில் உணவகங்களில் உணவு தயார் செய்யும் பகுதி களிலும், பூச்சிகள் அதிகமாக படையெடுப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள் ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சிறிய வகை பூச்சிகள் அதிக ஈரம் உள்ள பகுதிகளிலும், மலர்த்தொட்டிகள் அடியிலும் மஞ்சள் நிறத்தில் முட்டைகளை இட்டு, அதிலிருந்து லட்சக்கணக்கான பூச்சிகள் உருவாகின்றன. இதனை கட்டுப்படுத்த, அதன் முட்டைகளை எடுத்துச்சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும், விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

விதிகளுக்குப் புறம்பாக பதவி உயர்வு

பொள்ளாச்சி, ஜூலை 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத இருவருக்கு, விதிகளை மீறித் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிய முறைகேட்டை கண்டித்து, பொள்ளாச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பெருந்திரள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவ லகம் (தொடக்கக் கல்வி) முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் தங்கபாசு, மாவட்டச் செயலா ளர் வீராசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் பா.மகேஸ்வரி நடத்திய பேச்சு வார்த்தையில், ஆசிரியர்களின் கோரிக் கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மூன்று மாத அவகாசம் கோரப்பட்டது. இதை யேற்று ஆசிரியர்கள் போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.