கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
11 Jun 2026, 11:21 pm

குப்பைகளை கொட்ட எதிர்ப்பு

ஈரோடு, ஜூன் 11- கெட்டிசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் குப்பை களை கொட்டி, மறுசுழற்சி செய்யும் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி நிர்வா கம் சார்பில் கெட்டிசமுத்திரம் ஊராட்சி, ஜெ.ஜெ. நகரில் 1.50 ஏக்கர் பரப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டது. பேரூராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் இங்கு கொண்டு வரப் பட்டு, உரம் உற்பத்தி உள்ளிட்ட பணிகள் செய்ய திட்ட மிடப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வட்டாட்சியரிடம் மனு அளித்த னர். இந்நிலையில், கெட்டிசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை புத னன்று நடைபெற்றது. அப்போது, இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத் துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

இளைஞர்கள் கடத்தல்: போலீசார் உட்பட 4 பேர் கைது

கோவை, ஜூன் 11- கோவையை சேர்ந்த ஆன்லைன் வர்த்தகர்களான நவீன் (29), நிர்மல் குமார் (29) ஆகியோரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், திருப்பூரை சேர்ந்த இரண்டு காவலர்கள் உட்பட 4 பேரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி கடத்தப்பட்ட நவீ னின் குடும்பத்தினரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட கும்பல், ரூ.50 லட்சம் தராவிட்டால் இருவரை யும் கொலை செய்து விடுவதாக மிரட்டி யுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி னர். இதற்கிடையே, போலீசாரின் வியூ கப்படி பணத்தைத் தயார் செய்தது போல காட்டி, கடத்தல்காரர்களின் அறிவுறுத்தலின்படி நவீனின் குடும்பத் தினர் திருப்பூர் சென்றனர். அங்கு சாதா ரண உடையில் பின்தொடர்ந்த தனிப் படை போலீசார், புதனன்று பணத்தை பெற வந்த இருவரை மடக்கிப் பிடித்த னர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் நல்லூர் காவல் நிலைய காவலர்களான மோகன் (37), ஆனந்த் (38) என்பது அம்பலமானது. அவர்கள் கொடுத்த தக வலின்படி, திருப்பூரின் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நவீன், நிர்மல்குமாரை போலீசார் மீட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட காளிதாஸ் (31), ராம்குமார் (31) ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வர்களிடம் நடத்திய முதற்கட்ட விசார ணையில், பணப் பரிவர்த்தனை தகராறு காரணமாகவே இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு திருப்பூர் காவலர்கள் இருவ ரும் உடந்தையாக இருந்துள்ளனர். பணப் பரிவர்த்தனை தகராறில் இக் கடத்தல் நடந்துள்ளது. இதில் அதிரடி திருப்பமாக, மீட்கப்பட்ட நவீன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் தடை செய்யப் பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை யில் ஈடுபட்டு மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனால், அவர்கள் இரு வர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீ சார் திட்டமிட்டுள்ளனர்.

தற்கொலை

நாமக்கல், ஜூன் 11- நாமக்கல் மாவட்டம், வையப்பமலையை சேர்ந்த வர் கைலாசகுமார் (40). பங்குசந்தையில் திடீரென பங்குகள் சரிவடைந்த நிலை யில், இவருக்கு ரூ.20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பணத்தை இழந்ததால் மனமுடைந்த கைலாசகுமார், வீட்டில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தார். குடும்பத் தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோ தித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரி வித்தனர்.

அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க சிபிஎம் கவுன்சிலர் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 11 – ஊத்துக்குளி பேரூராட்சியில் நிலவும் மக்கள் பிரச் சினைகள் மீது உடனடி நடவடிக்கை கோரி 7-ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரஸ்வதி குமார், புதனன்று நடைபெற்ற ஊத் துக்குளி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினார். இதுகுறித்து, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தலை வர் பழனியம்மாள் ராசுக்குட்டி, செயல் அலுவலர் சுந்த ரம் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்து பேசுகை யில், திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் கொட்டப் படும் கோழிக் கழிவுகளால், அருகில் உள்ள வாரிக் குளம் குட்டையின் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, அப் பகுதி வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கடுமையான துர் நாற்றம் வீசுகிறது. எனவே, இறைச்சிக் கழிவுகளை கையாள மாற்று இடம் ஒதுக்க வேண்டும். மேலும், தெற்கு வீதியில் 50 ஆண்டுகள் பழமையான, இடிந்து விழும் நிலையிலுள்ள 5,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட வேண் டும். வெள்ளையன் தோட்டம் பகுதியில் 1,000 லிட்டர் சின் டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும். பாரதி நகர் பகுதி யில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். கிழக்கு வீதி பொதுக் கழிப்பிடத்தை முழுமையாக சீர மைத்து, உடைந்த கதவுகளை மாற்றி, மாற்றுத்திறனா ளிகளுக்கான கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதியும், பெண்கள் பகுதியில் நாப்கின் எரிக்கும் இயந்திரமும் பொருத்த வேண்டும். ஈஸ்வரன் கோவில் முதல் அரசு மருத்துவமனை வரை குடிநீர் குழாய்க்காக வெட்டப் பட்டு, விபத்தை ஏற்படுத்தும் வகையில் பழுதடைந் துள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினார். மேலும், கோரிக்கைகளின் மீது பேரூராட்சி நிர் வாகம் காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊத்துக்குளி மக்கள் எதிர் பார்ப்பை சரஸ்வதி வலியுறுத்தினார்.

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 18 பேர் காயம்

உதகை, ஜூன் 11- குன்னூர் அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் காயமடைந்த னர். ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம், அக்கையார் பள்ளம் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர், மைசூரு, உதகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு சுற்றுலாப் பேருந்தில் திரும்பிக் கொண்டி ருந்தனர். பேருந்தை சின்னு (23) என்பவர் ஓட்டி வந்தார். நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப்பாதையில் கே.எம்.எஸ். நந்த கோபால் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர் பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம், தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. படுகாய மடைந்த 14 பேரும் லேசான காயமடைந்த 4 பேரும் உடனடி யாக மீட்கப்பட்டு, குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எம்.ராஜூ, சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு: 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை, ஜூன் 11- சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை போலீசார் கோவை போக்சோ நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ளனர். கடந்த மே 21 ஆம் தேதி கடத்திச் செல்லப் பட்ட சிறுமி கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர் பாக நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் மோகன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். வழக்கில் விரைவாக நீதி கிடைக்கச் செய் வதற்காக கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கரிகாலன் தலைமையி லான போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். குற்றம் நடைபெற்ற இடத்தில் குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டதுடன், முக் கிய ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து 108 சாட்சிகள், 215 ஆவ ணங்கள், தடயவியல் சான்றுகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங் கள் அடங்கிய 819 பக்க குற்றப்பத்திரிகை, கைது செய்யப்பட்ட 18 நாட்களுக்குள் போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. தொடர்ந்து கார்த்திக் மற்றும் மோகன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு, குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப் பத்திரிகை விரைவாக தாக்கல் செய்யப்பட் டுள்ளதால், வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று குறுகிய காலத்தில் தீர்ப்பு கிடைக் கும் வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆளானவரை தலைவராக தேர்வு செய்வதா?

திருப்பூர், ஜுன் 11 – நத்தக்காடையூர் அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வரை நியமிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சிபிஎம் காங் கேயம் தாலுகாக் குழு உறுப்பினர் செல்வ ராஜ் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், முறை யாக பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி, நேர்மையான ஒருவரை தலைவ ராகத் தேர்வு செய்ய வேண்டும். முன்னாள் தலைவர் மீது பள்ளி மரங்களை வெட்டியது, கேமரா பொருத்த முறைகேடாக வசூல் செய்தது உள்ளிட்ட புகார்கள் உள்ளன. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தி மிரட்டும் குழுவினரின் தலையீடு நத்தக்காடையூரில் அதிகரித்து வரும் நிலையில், குற்றச்சாட்டு களுக்கு உள்ளான நபர்களை பள்ளி நிர்வா கத்தில் அனுமதிக்கக் கூடாது என அரசுக்கும் கல்வித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த போக்சோ குற்றவாளி

தருமபுரி, ஜூன் 11- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறைக்கு சென்ற குற்றவாளி ஜாமீ னில் வெளிவந்து பாதிக்கப்பட்டவரின் குடும் பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வருவ தால், அவரின் ஜாமீனை ரத்து செய்ய வலியு றுத்தி மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். தருமபுரியில் 13 வயது பள்ளி சிறுமியை, பழைய இரும்பு வாங்கும் வியாபாரம் செய்து வந்த பழனிமுருகன் (51) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் போலீசார் கடந் தாண்டு ஜூன் 9 ஆம் தேதியன்று பழனி முரு கன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்த னர். தற்போது ஜாமீனில் வந்துள்ள பழனி முரு கன், அடியாட்களுடன் பாதிக்கப்பட்ட சிறுமி யின் வீட்டிற்கு சென்று, வழக்கை திரும்பப் பெற வேண்டும் என பெற்றோரை மிரட்டி வரு கிறார். வழக்கை வாபஸ் பெறவில்லை என் றால், கொலை செய்வோம் என மிரட்டி வரு கிறார். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி யுள்ளது. எனவே, போக்சோ குற்றவாளி பழனி முருகனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறுமி யின் பெற்றோர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்த னர். இந்நிகழ்வில், மாதர் சங்க தருமபுரி நகரச் செயலாளர் நிர்மலாராணி, ஒன்றியச் செயலாளர் தமிழ்மணி, நிர்வாகிகள் பூபதி, ஓ.கே.சுசிலா ஆகியோர் உடனிருந்தனர்.