தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

21 Jul 2026, 10:48 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

எம்எல்ஏ, எம்பிகளிடம் ஆதரவு சேகரித்த மாதர் சங்கத்தினர்!

ஈரோடு, ஜூலை 21- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக் கீட்டை உடனடியாக அமல்படுத்தக்கோரி ஈரோடு எம்.பி., எம்எல்ஏக்களிடம் ஆதரவு கேட்கப்பட்டது. மகளிர் இடஒதுக்கீக்கான சட்டத்தை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரை யறையுடன் இணைக்கும் நிபந்தனைகளை நீக்கு வதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். 2026 ஏப்ரல் மாதத்தில், கொண்டு வரப் பட்ட 131 ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அந்த மசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் புதிய நிபந்தனைகளை இணைத்ததுடன், மொத்த சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளின் எண் ணிக்கையை சர்ச்சைக்குரிய வகையில் அதிகரிக் கும் ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. எனினும், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஒன் றிய அரசு மீண்டும் இத்தகைய இணைப்புகளைக் கொண்ட மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடரில் கொண்டு வரத் திட்ட மிட்டுள்ளது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையிலிருந்து இந்த சட்டத்தைப் பிரிக்கும் வகையில் ஒரு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களி லும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும் என ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர் கே.இ.பிரகாஷ் மற்றும் எம்எல்ஏ அலுவலகங்க ளில் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். இந்நி கழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ.அருந் ததி, துணைத்தலைவர் பி.லலிதா, தாலுகா செயலா ளர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிஏபி திட்டத்தில் முன்னுரிமை பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 21- பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) மேற்கொள்ள வேண்டிய முன்னுரிமைப் பணிகளுக்கு தமிழக அரசு வரக்கூடிய பட்ஜெட் டில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜிடம் பிஏபி வெள்ளகோவில் கிளைக் கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க விவசாயிகள் கோரியுள்ளனர். செவ்வாயன்று அமைச்சரை சந்தித்து பேசிய பிஏபி விவசாயிகள், பாசனப் பகுதிக்கு தேவையான கால்வாய் தூர் வாரும் பணிகளுக்கும், பிஏபி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், விவசாயிகளின் போது மான பிரதிநிதித் துவத்துடன் கூடிய பிஏபி 2.0 உயர் மட்டக்குழுவை அமைப்பது, ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்டுமானத் திட்டம், குழாய் வழி பாசன அமைப்பு, கான்டூர் கால்வாய் நீர் கொண்டு செல்லும் திறனை 2,500 கன அடியாக உயர்த்துவது பாசனத் திறனை மேம்படுத்துவதற்கும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்க வேண்டும், சமமான நீர் பகிர்வை உறுதி செய்வதற்கும், பிஏபி பாசன அமைப்பின் நீண்ட கால நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் இம்முயற்சிகள் மிக அவசியம். எனவே, இப்பணிகளை விரைவாக தொடங்குவ தற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை இந்த பட்ஜெட் டில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இன்று மின்தடை

திருப்பூர், ஜூலை 21– திருப்பூர், குமார் நகர் துணை மின்நிலையத்தில் புதனன்று (இன்று) பராமரிப் புப் பணிகள் நடைபெறவுள் ளது. இதனால் ராமமூர்த்தி நகர், பிஎன் ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், அப் பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்ட புரம், வஉசி நகர், டிஎஸ்ஆர் லே அவுட், முத்துநகர், குத் தூஸ்புரம், என்ஆர்கேபுரம், வெங்கடேசபுரம், குமரா னந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திரு மலை நகர், முருகானந்த புரம், புதிய பேருந்து நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் புதனன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநி யோகம் இருக்காது.

கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு சேவை குறைப்பு

கோவை, ஜூலை 21- கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப் படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 28-லிருந்து 22-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், சர்வதேச அளவில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் வரையிலான கோடைகால சீசனின் போது, கோவையில் இருந்து தினமும் 28 உள்நாட்டு விமானங் கள் மற்றும் 2 சர்வதேச விமானங்கள் என தினமும் 30 முதல் 31 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. அப்போது நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில், ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ளதால், விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் நிதி இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு, விமான நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்களது சேவைகளை கணிசமாக குறைத்துள் ளன. இதன் காரணமாகவே, கோவை விமான நிலையத் திலிருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை 22-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இண்டிகோ நிறுவனம் சார்பில் கோவை - அபுதாபி இடையே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சர்வதேச விமான சேவை, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையிலிருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிக்கும். தற்போதைய இந்த சூழல் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என்றும், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தற்காலிக மாக நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் விமான நிலைய அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

மசினகுடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை

உதகை, ஜூலை 21- உயர்நீதிமன்ற உத்தரவுபடி, மசினகுடி பகுதியில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், மசினகுடியில் உள்ள சுற்றுலாத் தலங் களை காண தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றலாப் பயணிகள் வந்து செல் கின்றனர். இந்நிலையில், மாயாறு, சிங்காரா, பொக்காபுரம், செம்மநத்தம் சாலைகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால், அப்பகுதியில் நாள்தோறும் செல்லும் ஏராளமான வாகனங்களால் விலங்குகளுக்கு பாது காப்பற்ற சூழல் உள்ளது. மேலும், வாகனங்கள் மோதி விலங்குகள் உயிரிழப்பதும், வாகனங்களில் செல்வோர் விலங்குகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்வதும் அதிகரித்து வந்தது. இந்நிலையில், இந்த சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் செல்ல உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திங்களன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக் கப்பட்ட உள்ளூர் வாகனங்கள், வனத்துறை வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணி களின் வருகை இல்லாததால், அப்பகுதியில் கடை வைத் திருப்பவர்கள் மற்றும் சவாரி வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தடுப்பணைகள் அமைக்க வலியுறுத்தல்

உதகை, ஜூலை 21- ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஓடையை மீட்டு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தடுப்பணைகள் அமைக்கக்கோரி தும்மனட்டி, கப்பச்சி கிராம மக்கள் ஆட்சியரி டம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உதகை அருகே உள்ள கப்பச்சி மற்றும் தும் மனட்டி கிராம மக்கள் மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமங்களின் பிரதான குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக விளங்கும் பட்டர்கொம்பை இயற்கை ஓடை, சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக பட்டர்கொம்பை இயற்கை ஓடை யின் மிக அருகில் விதிகளுக்கு புறம்பாக தார், மண் சாலைகள் அமைக்கப்பட்டு, அனுமதி யற்ற கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின் றன. நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாக சுரண் டும் நோக்கில், ஏராளமான போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஓடை நீரை சட்டவிரோதமாக தடுத்து தங்களின் சொந்த கிணறுகளுக்கு திருப்பி வருகின்ற னர். மலையிட பாதுகாப்பு குழுவின் விதிக ளுக்கு மாறாக தடையை மீறி ஜேசிபி பயன் படுத்தப்பட்டு, ஓடை சிதைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சொந்தமான இயற்கை ஓடையை, தனிநபர்கள் தனது சுய லாபத்திற் காக ஆக்கிரமிப்பதால், இப்பகுதியின் ஒட்டு மொத்த சுற்றுசூழல் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, ஓடை ஆக்கிர மிப்பை அகற்றி, ஓடை நீர் இயல்பாக செல் வதை உறுதி செய்ய வேண்டும். கார்ப்பரேட் விவசாய நிலங்களிலிருந்து வெளியேறும் ரசாயனங்கள், உரக்கழிவுகள் ஓடையில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பட்டர்கொம்பை ஓடையில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டுள்ளது.

பெண் சிசுவை கொலை செய்த பெண் கைது

ஈரோடு, ஜூலை 21- பிறந்து ஒரே நாளான பெண் சிசுவை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த வர் செல்வகுமார் என்பவரின் மனைவி பிரியதர் ஷினி (25). நிறைமாத கர்ப்பிணியான இவர், ஈரோடு மாவட்டம், பவானியிலுள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளியன்று பிரசவத் துக்கு சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு சனியன்று அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பெண் குழந்தை உயிரிழந்ததாக பவானி காவல் துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் ஞாயிறன்று புகாரளித்தது. அதன்பேரில், குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்த னர். அதில், பெண் குழந்தை கழுத்தை நெரித் துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. குழந்தையின் பாட்டியான எடப்பாடி, செட்டிமாங்குறிச்சியை சேர்ந்த தங்கமணி (47) இச்செயலில் ஈடுபட்டதும் விசாரணை யில் தெரியவந்தது. ஏற்கெனவே 4 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், பிரியதர் ஷினிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என நம்பி யிருந்த நிலையில், மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. மருமகன் செல்வ குமாருக்கு மதுப்பழக்கம் உள்ளதால், குடும் பத்தை கவனிப்பதில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தனது மகளால் வளர்க்க முடி யாது எனக்கருதி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம், தங்கமணி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி தடை செய்யக் கோரி முற்போக்கு அமைப்பினர் மனு

கோவை, ஜூலை 21- இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சிக்கு தடை செய்ய வலியுறுத்தி முற் போக்கு அமைப்பினர், முதன்மை கல்வி அலு வலர் மற்றும் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதி யில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதா னத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், சிறு வர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்கனவே இதே போல கோவை மாநகராட்சி பள்ளி மைதானத் தில் சாகா பயிற்சி வழங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இம்மாதிரியான நிகழ்வு களுக்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் கோவையில் மீண்டும் அரசு பள்ளி மைதானத்தில் சாகா பயிற்சி வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந் நிலையில் இதனை கண்டித்து முற்போக்கு அமைப்புகள் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் செவ்வாயன்று புகார் மனு அளித்தனர். இதில், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலக் குழு உறுப்பினர் பெரோஸ் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.