கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
1 Oct 2026, 12:09 am

சாலை விபத்தில் தாய் உயிரிழப்பு; மகள் படுகாயம்

ஈரோடு, செப்.30-பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தாய் உயிரிழந்த நிலையில், அவரது மகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், பகலாயூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி மீனா (33). இவர்களது மகள் நிரூபா (13). சண்முகத்தின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உணவு கொடுப்பதற்காக தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் மீனா திங்களன்று மாலை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். பெருந்துறையை அடுத்த சனடோரியம் அருகே சென்றபோது,பின்னால் வந்த கார், மீனாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில், மீனா, நிரூபா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மீனாவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நிரூபாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து பெருந்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொல்லிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

நாமக்கல், செப்.30-கொல்லிமலையில் அக்.2 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கவும் மற்றும் விற்பனை செய்யவும் முற்றிலும் தடை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொது சுகாதாரக்கேட்டை தடுக்க ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை அக்.2 முதல் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொல்லிமலைக்கு செல்லும் சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்

தருமபுரி, செப்.30-மாணவி பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், பாலவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் தங்கவேல் (48). இவர் மாணவி ஒருவரின் கைப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், பென்னாகரம் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை அண்மையில் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

தருமபுரி, செப்.30-16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, எச்சனஅள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் திருமணம் செய்துகொண்டு, ஈரோடு பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கருவுற்ற சிறுமி பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் இளம்வயது திருமணம் குறித்து ஈரோட்டில் அவர் தங்கியிருந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பின் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுமியை திருமணம் செய்த விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் சடலம் மீட்பு

சேலம், செப்.30-தங்கமாபுரி பட்டினத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலக்கரி கொட்டப்படும் பகுதியில் கடும் துர்நாற்றம்வீசியது.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்கமாபுரி பட்டினம் பகுதியை சேர்ந்த டெய்லர் வேலை செய்து வரும் சங்கர்(62) என்பது தெரிய வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சங்கர் வீடு திரும்பாத நிலையில், புதனன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் செல்போன்கள் பறிப்பு திருப்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திருப்பூர், செப்.30 -திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடர்பான நிகழ்வு ஒன்றின் போது, அமைச்சர் ஆனந்த் காலில் த.வெ.க நிர்வாகிகள் விழுந்த காட்சிகளை படம் பிடித்த ’நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தொலைக்காட்சி செய்தியாளரின் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளை வலுக்கட்டாயமாக நீக்கி அராஜகம் செய்துள்ளனர். அதேபோல், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் பகுதியில் பிரச்சார நிகழ்வுகளை படம் பிடித்த செய்தியாளர்களின் செல்போன்களை பறித்தும்அத்துமீறலில்ஈடுபட்டுள்ளனர். இது ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அரசின் மற்றும் ஆளும் கட்சி சார்ந்த நிகழ்வுகளிலேயே ஊடகவியலாளர்களுக்கு எதிராக இதுபோன்ற அத்துமீறல்களும் அச்சுறுத்தல்களும் தொடர்ச்சியாக நடைபெறுவது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இச்சம்பவங்களுக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் ராமசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர், செப்.30 –நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதிய விதிகள் (சரிபார்ப்பு சட்டம் 2025) திரும்ப பெறப்பட்டு, டி.எஸ்.நகரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். 8 ஆவது ஊதிய திருத்த ஆணையத்தின் பரிசீலனை வரம்பில் ஓய்வூதியத் திருத்தம் சேர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வாயன்று முழு நாள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழு நாள் தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் கி.மேகவர்ணன் தலைமை ஏற்றார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.துரைராஜ் வரவேற்றார். தர்ணாவை துவக்கி வைத்து அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார்அகமது உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் நா.பாஸ்கரன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட துணைத்தலைவர் க.சண்முகம், உடுமலை வட்ட கிளைத் தலைவர் தா.ஈ.தாசன், தாராபுரம் வட்ட கிளைத்தலைவர் எம்.பீர்ஜாபர், அவிநாசி வட்ட கிளைத்தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன், காங்கேயம் வட்ட கிளைச்செயலாளர் பி.ராஜன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலச்சங்க மாவட்டத் தலைவர் டி.துரைசாமி, ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் வி.பி.பாலகிருஷ்ணன், ஏஐபிடிபிஏ மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், மின் ஓய்வூதியர் நல அமைப்பின் திருப்பூர் வட்டச் செயலாளர் ஆர்.நாகராஜன், ஏஐபிஆர்பிஏ சங்க கோட்டச் செயலாளர் ஏ.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் நிறைவுரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி நன்றி கூறினார். இந்த தர்ணாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து 12 அம்ச கோரிக்கைகளை பிரதமருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தவெகவுக்கு ஏமாந்து வாக்களித்து விட்டோம் கட்சியினரிடம் பெண் வாக்காளர் குமுறல்

திருப்பூர், செப்.30 –தவெகவுக்கு ஏமாந்து வாக்களித்து விட்டோம் என தாரபுரத்தில் தவெக நிர்வாகிகளிடம் பெண் வாக்காளர்கள் குமுறும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் தவெகவுக்கு ஆதரவாக செவ்வாயன்று வாக்கு சேகரித்தார். வீடு, வீடாக நடந்துசென்று தவெகவுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்ட அவரிடம், அங்கிருந்த பெண்கள் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் கூறுகையில், “எங்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுவது இல்லை.விவசாயத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதும் இல்லை. இப்படி இருக்கும்போது நாங்கள் யாரை நம்பி வாக்களிப்பது? ஏற்கனவே வாக்களித்து ஏமாந்து போய்விட்டோம்’’ என்றார்.

உடனே குறுக்கிட்ட முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன்,“நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டார். இன்னும் 20 நாட்களில் பைப்லைன் போடப்படும். தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும். அணையில்இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படும். முதல்வர் விஜய் இங்கு பிரச்சார கூட்டத்திற்கு வர உள்ளார். அப்போது இதுபற்றி அறிவிப்பார் என்றார். உடனே அந்த பெண், “இப்படித்தான் ஏற்கனவே தவெகவுக்கு ஏமாந்து வாக்களித்து விட்டோம். சாப்பிடுவதற்கு இலையை போட்டு, சாப்பாடும் பரிமாறிவிட்டு, சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பே இலையை வழித்து எடுத்து சென்று விட்டார்கள். இனியும் நாங்கள்எப்படி ஏமாற முடியும்’’ என்றார். இப்படி தடாலடியாக வாக்குவாதம் செய்த காரணத்தால், எதுவும் பேச முடியாமல் ராஜவர்மன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதேபோன்று, வாக்கு கேட்க சென்ற தவெக நிர்வாகிகளிடம், ஏற்கனவே உங்கள் கட்சியில் நின்று தோற்றுப்போன வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்காமல், பதவியை ராஜினமா செய்துவிட்டு வந்தவருக்கு நீங்கள் எப்படி வாய்ப்பு அளிக்கலாம். நீங்களும், திமுக, அதிமுக கட்சிகள் மாதிரித்தான் உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என பேசுகிற வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் பல்கலைக்கழக கலவரம்: ஈரோடு மாணவர் தவிப்பு

ஈரோடு, செப்.30-பஞ்சாப் பல்கலைக்கழக கலவரத்தால், சொந்த ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவரை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் தந்தை கண்ணீர் மல்க மனுஅளித்தார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வெள்ளோட்டம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன்பரத், பஞ்சாபில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அங்கு விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இதனால்பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற முடியாமலும், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமலும் மாணவர் பரத்விடுதியிலேயே தவித்து வருகிறார். இதுதொடர்பாக மாணவன் பரத் தனது தந்தைக்கு வாட்ஸ்அப் வழியாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பல்கலைக்கழக வளாகத்தில் நிலவும் பதற்றமான சூழலை விளக்கி, சொந்தஊருக்குவர முடியாமல் சிக்கி தவிப்பதாக கூறியுள்ளார். மேலும்,உடனடியாக தன்னை மீட்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து மாணவனின் தந்தை மோகன்ராஜ், திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், தனது மகனை மீட்டு பாதுகாப்பாகதமிழகத்திற்கு அழைத்து வரவும், தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித்தரவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அங்கு பயிலும் சக தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

காபி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

உதகை, செப்.30-கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காபி விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், தேவாலா, சேரம்பாடி, காந்தல்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக காபி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு அறுவடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், விவசாயிகள் காபி பழங்களையும், காபி கொட்டைகளையும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக காபிக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பொருளாதார சிரமங்களை சந்தித்து வந்தனர். தற்போது உள்நாட்டு மற்றும் உலகசந்தைகளில் காபிக்கான தேவை அதிகரித்திருப்பதால், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, காபி பழம் கிலோஒன்றுக்கு ரூ.43.30 வரை விற்பனையாகி வருகிறது.அதேபோல், பதப்படுத்தப்பட்ட காபி கொட்டைகள் கிலோ ரூ.210 வரை விலை பெற்று வருகின்றன. விலைஉயர்வால் காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால்காபி சாகுபடியை மேலும் விரிவுபடுத்த முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கேரட் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம், செப்.30-மேட்டுப்பாளையம் மலைக்காய்கறி சந்தையில் கேரட் விலை கடும் வீழ்ச்சியால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மலை காய்கறிகளின் சந்தை செயல்பட்டுவருகிறது. இந்த காய்கறி சந்தை ஏல மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முள்ளங்கி, நூல்கோல், டர்னீப், சவ்சவ் உள்ளிட்ட பல்வேறு வகை மலை காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. மண்டிகளில் குவியும் மலைக்காய்கறிகள் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வியாபாரிகள்அதனை வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளத்திற்குஇக்காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே கேரட் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வழக்கமாக தினசரி 50 முதல் 60 லோடுகள் வரை லாரிகளில் கொண்டு வரப்படும் நிலையில்தற்போது 90 முதல் 100 லோடு வரை கேரட்விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகம் மற்றும்தொடரும் வெயிலின் தாக்கத்தால் கேரட்டின் நிறம்மற்றும் தரம் குறைந்துள்ளது போன்ற காரணத்தால் கடந்த சில தினங்களாக கேரட்விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

தரமான கேரட் கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையாகி வந்த நிலையில், தற்போது கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரைமட்டுமே விற்பனையாகி வருவது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.

அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி, செப்.30-மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அசத்திய தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில்நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகளில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்று அசத்தினர். அந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணன், பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ்களைவழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் எம்.பாலசுப்ரமணியம், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) சி.லவிஷா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இன்று ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’ துவக்கம்

நாமக்கல், செப்.30-நாமக்கல்லில் அக்டோபர் 1 முதல் 18-ஆம்தேதி வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது என என பாரதி புத்தகாலயப் பதிப்பாளரும், கண்காட்சி ஒருங்கிணைப்பாளருமான கே.நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாரதி புத்தகாலயத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு,தமிழகம் முழுவதும் 100 நகரங்களில் ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமணமண்டப வளாகத்தில் இப்புத்தகத் திருவிழாநடைபெறுகிறது.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பகங்களின் சிறார் இலக்கியம், அறிவியல், நாவல்,கவிதை, போட்டித் தேர்வு நூல்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடியும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புச் சலுகையாக 15 சதவீதம்தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, கதை சொல்லும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதோடு, உள்ளூர் எழுத்தாளர்களுடன் மாலை நேரக் கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அக்.1 இல் விஞ்ஞானி ஐயப்பன் ‘நீங்களும் விஞ்ஞானிதான்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். வாசிப்பு பழக்கத்தை ஒரு இயக்கமாக மாற்றும் நோக்கில் நடைபெறும் இத்திருவிழாவில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கு.கருணாநிதி, புத்தக ஆர்வலர் எம்.ஆர்.முருகேசன், கல்வி செயற்பாட்டாளர் ஏ.டி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.