தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

19 Jul 2026, 10:32 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் இளம்பெண்: உறவினர்கள் மறியல்

ஈரோடு, ஜூலை 19- தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை யால் கருச்சிதைவு ஏற்பட்டு, இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலை யில், நீதி கேட்டு அவரது உறவினர்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அரச்சலூரை சேர்ந்தவர் மோகன்குமார் என்பவரின் மனைவி ஜி.சர்மிளா (31). 6 மாத கர்ப்பிணியான இவர், மூலப்பாளையம் அரு கேயுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோ தனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கணவர் மற்றும் தங்கையுடன் வழக்கமான பரிசோதனைக்கு சர்மிளா கடந்த ஜூலை 7 ஆம் தேதியன்று மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். அப்போது, செலுத்தப் பட்ட ஊசியால் சர்மிளாவுக்கு கால், கை வீங்கிய தால் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரை பரி சோதனை செய்த மருத்துவர்கள், கருச்சிதைவு ஏற் பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து ஊசி செலுத்திய மருத்துவமனை நிர்வா கத்திடம் முறையிட்டபோது அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மன வேதனையடைந்த பெண்ணின் உறவினர்கள் ஈரோடு மூலப்பாளையத்திலுள்ள மருத்துவமனை முன்பு அமர்ந்து சனியன்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கர்ப்பிணிக்கு அளித்த மருத்துவ சிகிச்சை விவரம், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் இழப்பீடு பெற்று தருவதோடு, மருத்துவமனை மற் றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு தாலுகா காவல் துறையினர், மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைய டுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

வால்பாறையில் அரசுப்பள்ளி தற்காலிகமாக மூடல்

கோவை, ஜூலை 19- மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று வால்பாறையில் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அதி கரிக்க மக்கள் பிரதிநிதிகள் முன்முயற்சி மேற் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனைமலை ஒன்றியக்குழு உறுப்பினர் வால்பாறை பரமசிவம் கூறுகையில், வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 94 அரசு பள்ளிகளும், அவற் றில் 62 அரசு தொடக்கப் பள்ளிகளும் செயல் பட்டு வருகின்றன. தற்போது பல தொடக்கப் பள்ளி களில் 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். வனவிலங்கு அச்சுறுத்தல், தேயிலை தோட்டத் தொழிலுக்கு மாற்றுத் தொழில் இல்லாததால் பல குடும்பங்கள் சமவெளிப் பகுதிக்கு பிழைப்பைத் தேடிச்செல்வது, சாலை வசதி, போக்கு வரத்து வசதி இல்லாமை போன்ற காரணங்களால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரு கிறது. இந்நிலையில், ரொட்டிக்கடை மற்றும் சின்கோனா பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் போனது. இதனையடுத்து, ஆசிரியர்கள் நேரில் சென்று சேர்க்கை பணியில் ஈடு பட்டதன் விளைவாக, ரொட்டிக்கடையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தனர். இருந்தபோதும், சின்கோனா பகுதியில் உள்ள பள்ளி யில் சேர மாணவர்கள் வரவில்லை. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அந்த அரசு தொடக்கப் பள்ளியை தற்காலிகமாக மூடியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இருந்தாலும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை தேர்வு செய்யாதது வருத்தமளிக்கிறது. வன விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு, புதிய தொழில் உருவாக்கம், சாலை, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுப்பதும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அரசு பள்ளிகளில் மாண வர் சேர்க்கையை அதிகரிக்க முன்முயற்சி எடுப் பதுமே இதற்கு தீர்வாகும் என்றார்.

அம்பேத்கர் சிலையை திறக்க வலியுறுத்தல்

சேலம், ஜூலை 19- ஒதியத்தூரில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை, அரசு விழா நடத்தி திறக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூரில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, சம்பவம் தொடர்பாக பட்டியலினத்தை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலை யில், நீலம் பண்பாட்டு மையத்தின் பொதுச்செயலா ளர் உதயா தலைமையிலான குழுவினர் அப் பகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியா ளர்களை சந்தித்த உதயா, அம்பேத்கர் சிலையை அரசு விழா நடத்தி திறந்து வைக்க வேண்டும். பொது மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், என்றார்.

தனியார் ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்து தொழிலாளி பலி

ஈரோடு, ஜூலை 19- சத்தியமங்கலம் அருகே பிளைவுட் தயாரிப்பு ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கருப்பகவுண்டர்பாளையத்தில் பிளைவுட் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இர்த்தீஸ் அலி (34), அபுல் உசேன் (34) உள்ளிட்ட தொழிலாளர்கள் வெள்ளியன்று நள்ளிரவு பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, பாய்லருக்கு செல்லும் எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் கொதித்த நிலையில் இருந்த எண்ணெய் இர்த்தீஸ் அலி மீது விழுந்தது. இதில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளியான அபுல் உசேன் லேசான காயங்க ளுடன் உயிர் தப்பினார். அவரது அலறல் கேட்டு வந்த சக தொழிலாளர்கள், அபுல் உசேனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த புன்செய் புளியம்பட்டி காவல் துறையினர், இர்த்தீஸ் அலி உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி அமைச்சரிடம் மனு

அவிநாசி, ஜூலை 19- வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி சட்டமன்ற உறுப்பினரும், கால்நடைத்துறை அமைச்சருமான கமலி-யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருணைபாளையம் கிளை சார்பில் ஞாயிறன்று மனு அளிக்கப்பட்டது. அதில், பெரிய கருணைபாளையம் முதல் சின்ன கருணைபாளையம் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்கக்கோரி துறைவாரியான அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெரிய கருணைபாளையம் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். மேலும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். பொதுக் கழிப்பிடத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவிநாசி - மங்கலம் சாலையிலுள்ள கழிவுகள் தரம் பிரிக்கும் கூடத்தில், தரம் பிரிக்காமல் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக, இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, கிளைச் செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சாமியப்பன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்க நிர்வாகி வீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரயில் சேவைகளில் மாற்றம்

சேலம், ஜூலை 19– கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித் தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவ தால், செவ்வாயன்று (நாளை) சில ரயில் சேவைக ளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற செவ்வாயன்று காலை 7.25 மணிக்கு திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் பயணி கள் ரயில் (எண்: 56809) கரூருடன் நிறுத்தப்படும். இந்த ரயில் கரூரிலிருந்து ஈரோட்டிற்கு செல்லாது. இதேபோல, ஈரோட்டிலிருந்து மதியம் 2 மணிக்கு செங்கோட்டை புறப்பட வேண்டிய விரைவு ரயில் (எண்: 16845), ஈரோட்டிற்கு பதிலாக கரூரிலிருந்து பிற் பகல் 3.05 மணிக்கு புறப்படும். இதனால் ஈரோடு - கரூர் இடையே இந்த ரயில் சேவை இயங்காது. மேலும், ஈரோட்டிலிருந்து காலை 8.05 மணிக்கு திருச்சி புறப்படும் பயணிகள் ரயில் (எண்: 56106) மூர்த்திபாளையம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப் படும். இந்த ரயில் மூர்த்திபாளையம் முதல் திருச்சி வரை செவ்வாயன்று இயங்காதென அறிவிக்கப் பட்டுள்ளது.

மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தை பெருக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் பேட்டி

கோவை, ஜூலை 19- மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தை பெருக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை, என அமைச் சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவையில் சனியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை சீரமைப்பதற்காக பலகட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. கேரளம் மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள நடைமுறைகளை பின்பற்றுவது குறித்தும், வெளிநாடுகளில் இருந்து தொழில் நிமித்தமாக வருபவர்களின் வசதிக்காக சில மாற்றங்கள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தை பெருக்கு வது என்ற வார்த்தையை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். அவ்வாறு வருமானத்தை பெருக்க வேண் டும் என்ற எண்ணம் அரசுக்கோ, முதலமைச் சருக்கோ கிடையாது. மதுவுக்கு அடிமையானவர் களை மீட்டெடுப்பதும், அடுத்த தலைமுறையினர் இந்த பிரச்சனையில் சிக்காமல் தடுப்பதுமே அரசின் உறுதியான நோக்கமாகும். மேலும், டாஸ்மாக் ஊழி யர்களுக்கான ஊதிய உயர்வு விவகாரத்தில் தற் போது முதல் படியில் ஏறியுள்ளோம். இதுதொடர் பான கோரிக்கைகள் படிப்படியாக பரிசீலிக்கப்ப டும், என்றார்.

பணம் கையாடல்: 2 பேர் கைது

திருப்பூர், ஜூலை 19- பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ரூ.1.50 லட்சம் கையாடல் செய்த மேற்பார்வையாளர் கள் 2 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தனியார் நூற்பாலை செயல் பட்டு வருகிறது. இதில் காரணம்பேட்டையை சேர்ந்த வருண்குமார் (23), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிரு சான் சாஹு (32) ஆகியோர் மேற்பார்வையாளர் களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நூற் பாலையின் வரவு-செலவு கணக்குகளை உரிமையா ளர் அண்மையில் ஆய்வு செய்துள்ளார். அப்போது, ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருவரும் ரூ.1.50 லட்சம் கையாடல் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் நூற்பாலை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட் டது. அதன்பேரில் சனியன்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்த னர்.

25 லட்சம் கிலோ தேயிலை விற்பனை

உதகை, ஜூலை 19- குன்னூரில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் 25 லட்சம் கிலோ தேயிலை விற்பனையானது. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை கள், ஆன்லைன் மூலம் ஒவ்வொரு வாரமும் சனி யன்று விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன் படி, இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 28 லட்சத்து 4 ஆயிரத்து 783 கிலோ தேயிலை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், வர்த்தகர்களின் பலத்த போட்டிக்கு இடையே 25 லட்சத்து 27 ஆயிரத்து 513 கிலோ தேயிலை விற்பனை செய்யப்பட்டுள் ளது. 2 லட்சத்து 77 ஆயிரத்து 269 கிலோ தேயிலை விற்பனையாகாமல் உள்ளது. கடந்த வார ஏலத்தில் சராசரி விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.114.01 கிடைத்த நிலையில், இந்த வாரம் கிலோவுக்கு 46 காசுகள் சரிந்து ரூ.113.55க்கு விற்பனையானது என்று தேயிலை வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

நாளை மின்தடை

திருப்பூர், ஜூலை 19- திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா மற்றும் வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்க ளில் செவ்வாயன்று (நாளை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பச்சாம் பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளை யம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ. அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக் காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம் பாளையம் (ஒரு பகுதி), கணக்கம்பாளையம் சிட்கோ மற்றும் வெங்கமேடு, சாமந்தன்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவி லிபாளையம், 15 வேலம்பாளையம். கணியாம் பூண்டி, வலையபாளையம், அனந்தபுரம், செம் மாண்டம்பாளையம் புதூர், முருகம்பாளையம், சோளிபாளையம், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காதென மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் ஆய்வு திடீர் ரத்து; பொதுமக்கள் ஏமாற்றம்

திருப்பூர், ஜூலை 19- முதலிபாளையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய வரு வதாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் வருகை ரத்து செய்யப்பட்டதால், மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் பகுதியில் உள்ள தாட்கோ பின்னலாடை தொழிற்பேட்டையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் கருதி ரூ.5 கோடியே 59 லட்சத்து 89 ஆயிரத்து 72 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆழ்துளைக் கிணறு, குடிநீர் வசதி, மின்விளக்கு, நுழைவு வாயில் முகப்புத் தோற்றம், அணுகு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இத்திட்டத் தில் அடங்கும். இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு ஞாயிறன்று காலை வருகை தருவதாக அரசு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, தாட்கோ ஊழியர்கள், பணியாளர்கள், அலு வலர்கள், காவல்துறையினர், பத்திரிக்கை யாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் காலை 9 மணி முதலே அமைச்ச ரின் வருகைக்காக காத்திருந்தனர். வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடும் அமைச்சரிடம் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை அளிக்க பொதுமக்கள் திரண்டிருந்தனர். எனினும், அமைச்சரின் வருகை ரத்து செய்யப்பட்ட தாக மதியம் 12 மணியளவில் அறிவிக்கப்பட் டது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அமைச்சர் வருகை ரத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ மாக எந்தவொரு தகவலும் வெளியிடப் படவில்லை. முதலிபாளையம் பகுதி மக்க ளின் நீண்டகால கோரிக்கையான இந்த மேம் பாட்டுப் பணிகள் விரைந்து நிறைவு பெற வேண்டும் எனவும், எதிர்வரும் காலங்களில் அமைச்சர் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் தெரி வித்தனர்.

பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற பட்டியலினப் பெண் மீது தாக்குதல்

கோவை, ஜூலை 19- பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற பட்டியலினப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சாதி ரீதியாக இழிவுபடுத்தி, தாக்கிய நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த பி.நித்யா (27) என்ற பெண், தனது கணவர் பாலமுருகனுடன் கடந்த 8 ஆண்டுகளாக கோவை வடவள்ளி, சுல்தானியாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளியன்று, நித்யா தனது உறவினருடன் அப்பகுதியிலுள்ள நாகம்மாள் கோவிலுக்கு வழிபட சென்றார். அப்போது அங்கு வந்த கோடீஸ்வரன் என்ற நபர், “இது எங்கள் சமூகத்திற்கு சொந்தமான கோவில், உங்களுக்கு உள்ளே வர அனுமதி இல்லை” என்று, சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், பின்தொடர்ந்து வந்த அவர், நித்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட நித்யாவின் கணவர் பாலமுருகன் மற்றும் குடும்பத்தினரை தாக்கியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வடவள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் கோடீஸ்வரன் மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வருவதால், உதவி காவல் ஆணையர் நிலையிலான உயர் அதிகாரியின் புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் த.நாகராஜ், மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளர் மணி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், சம்பந்தப்பட்ட கோடீஸ்வரனை உடனடியாகக் கைது செய்யக் கோரினர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடப் போவதாகவும் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.