தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

22 May 2026, 11:38 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சட்டத்திற்கு மாறாக சம்பளப்பட்டியல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், மே 22- திருப்பூர், வீரபாண்டி பகுதியில் பெயிண்டர் கட்டு மான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் குறைந்தபட்ச சம்பளச் சட்டத்திற்கு புறம் பாக சம்பளப்பட்டியலை பிளக்ஸ் பேனரில் அச்சிட்டு வைத்துள்ளனர். உடனடியாக இந்த சம்பளப்பட்டி யல் பேனரை அகற்ற வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சிஐ டியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.குமார் தலைமையில் வெள்ளி யன்று அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியூசி சார்பில் என்.சேகர், கணேசன், எல்பிஎஃப் சார்பில் ரங்கசாமி, அறிவழகன், ஐஎன்டி யுசி சார்பில் ரஜினி, எச் எம் எஸ் சார்பில் முத்து சாமி, சிஐடியு சார்பில் கணேசன், ரமேஷ், பொம்மு துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் பெயிண்டர் கட்டுமான அமைப்பு சாரா தொழிலா ளர் சங்கம் என்ற பெயரில் சிலர் சேர்ந்து கொண்டு கட்டுமான தொழிலாளர் சம்பளம் குறித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில் அரசாணை 2 டி -நம்பர் 94 (1) குறைந்தபட்ச கூலி சட்டத்திற்கு எதிராக, அக விலைப்படி (டி.ஏ)வை குறைத்து தட்டி எழுதி வைத் துள்ளனர். இதை உடனடியாக அகற்ற வேண்டும். தொழிலாளர் துறையும் காவல்துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அனைத்து துறை அதிகாரிகளையும் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேரில் சந்தித்து முறையிடுவது, சட்டத்திற்கு மாறாக சம்பளப் பட்டியல் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து பொறியாளர் சங்கம், பில்டர்ஸ் சங்கம் ஆகியோருக்கு கடிதம் எழுதி உட னடியாக பேச்சுவார்த்தை நடத்தி சமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டது.

பொதுத்தேர்வில் வெற்றி: மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு

கோவை, மே 22– கோவை, பெரியநாயக்கன்பாளையம் ஜடல்நாயுடு வீதி பகுதியில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், பத்தாம் மற்றும் பன்னி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் ஊக்கு விப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. மாணவர்களுக்கான பாரட்டு விழாவிற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பா ளையம் நகர்மன்ற உறுப்பினர் நவ. சிவ ராஜன் தலைமை ஏற்று, மாணவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இதில், மாணவர்களின் எதிர்காலக் கனவு கள், உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் சமூகக் கடமைகளை நினைவூட்டும் விதமாக இவ் விழா அமைந்திருந்தது. பிள்ளைகள் அடுத்த கட்ட இலக்கை நோக்கிச் சரியாகப் பய ணிக்க இந்த ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்ததாக, நிகழ்வில் பங் கேற்ற பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரி வித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளைச் செயலாளர்கள் ஆர்.கருப்பு சாமி, எஸ்.இன்பவள்ளி, கே.வெங்கிடசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு, மே 22- திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நட மாட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பக வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகின் றன. குறிப்பாக, யானைகள் அதிகளவில் உள் ளன. இதைப்போல், திம்பம், தாளவாடி பகுதி யில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன. சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் தடுப்புச்சுவரிலும், சாலையோர மும் சிறுத்தை நடமாடுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையில் சிறுத்தை நடமாடியது. அதேபோன்று அங் குள்ள தடுப்புச்சுவரிலும் சிறுத்தை படுத்தி ருந்தது. இந்நிலையில், வியாழனன்று இரவு திம்பம் மலைப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சிறுத்தை ஒன்று மெது வாக நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சிய டைந்து, தனது வாகனத்தை சற்று தொலை வில் நிறுத்திவிட்டார். அந்த சிறுத்தையும் வாகன ஓட்டிக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் தொடர்ந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் சிறுத் தையை வாகனத்தில் பின் தொடர்ந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சிகள் அனைத்தையும் வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதி விட்டுள்ளார். திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டி கள் கீழே இறங்க வேண்டாம் எனவும், வாக னத்தை மெதுவாக ஓட்டி செல்லவும் வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரிக்கை

நாமக்கல், மே 22- தமிழகத்தில் கோவில்களில் கட்டண தரி சனத்தை ரத்து செய்து அனைவரும் சமம் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என கொமதேக கோரிக்கை விடுத்துள்ளது. கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் பல் வேறு கோவில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடக்கிறது. ஆண்ட வனை தரிசிக்கின்ற சன்னிதானத்தில் அனை வரும் சமம் என்ற உன்னதமான நோக்கத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்கும் முதல் படியாக கட்டண தரிசன ரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பல கோவில்களில் கட்டண தரிசனத்திற்காக ரசீதுகளை அச்சடிப்பதிலே கூட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப் பதை செய்திகளாக பார்த்திருக்கிறோம். லஞ்சமும், ஊழலும் இல்லாத அரசை நடத்துவோம் என்றும், சமூக நீதியை நிலை நாட்டுவோம் என்றும் ஆட்சி அமைத்தி ருக்கின்ற தமிழ்நாட்டினுடைய முதல மைச்சர் பக்தர்கள் வழிபடுகின்ற கோவில் களில் இருந்து அதை தொடங்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறோம். இதை முன்னுதாரணமாக கொண்டு திருப்பதி போன்ற வெளிமாநில கோவில்களுக்கும் கட் டண தரிசனம் இல்லாத வழிபாட்டிற்கு நாம் கோரிக்கை வைக்க முடியும் என அவர் தெரி வித்துள்ளார்.

ஆன்லைன் மூலம் போதை மாத்திரை: 3 பேர் கைது

கோபி, மே 22- கோபிசெட்டிபாளையம் அருகே ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் சாலையில் சிலர் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோபி காவல் துறையினர் பாரியூர் சாலைப்பகுதியில் வியாழனன்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 100 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தனியார் இணையதளம் மூலம் ஆன்லைனில் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து, அந்தியூர் வட்டம் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆர்.கோபிநாத், பவானி வட்டம், அத்தாணி பகுதியை சேர்ந்த சி.பாலாஜி மற்றும் அதேபகுதியை சேர்ந்த தர்ஷன்ராஜ் (22) ஆகியோரை கைது செய்தனர்.

மறுகுடியமர்வு திட்டத்தை முறையாக செயல்படுத்தக்கோரி போராட்டம்

உதகை, மே 22- மறுகுடியமர்வு திட்டத்தை முறையாக செயல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி, திட்டப் பயனாளி கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், ஓவேலி பேரூ ராட்சிக்குட்பட்ட ஆத்தூர் கிராமத்தில் உள்ளவர்க ளுக்கு, ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட வடவயல் கிரா மத்தில் மாற்றிடம் வழங்கப்பட்டது. இதில் மறுகுடிய மர்வு திட்டத்தின் கீழ் சிலருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோருக்கு வீடுகள் ஒதுக் கப்படவில்லை. வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் பயனாளிகள் கேட்ட மூன்று சென்ட் நிலத்துக்கு மாற் றாக ஒன்றரை சென்ட் நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு வரு கின்றன. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப் படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, குறைகளை களைந்து முழுமைப்படுத்தி அனைவருக் கும் வீடுகள் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோட்டாட்சியர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டிராக்டரில் சிக்கி 11 மாத குழந்தை உயிரிழப்பு

ஈரோடு, மே 22- சிவகிரி அருகே தந்தை இயக்கிய டிராக்டரில் சிக்கி 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த மாரப்பம் பாளையம் மேற்குவளான் தோட்டத்தை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் உழவு வேலை பார்ப்பதற்காக தனது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை எடுத்துக் கொண்டு, வியாழனன்று வயலுக்கு செல்ல முயன் றார். அப்போது டிராக்டரின் அருகே தனது 11 மாத பெண் குழந்தை பொன் பரணிதா இருப்பதை கவ னிக்காமல் ஞானசேகர் டிராக்டரை இயக்கியுள்ளார். இதில் டிராக்டர் மோதியதில் குழந்தை பரணிதா படு காயமடைந்தார். இதையடுத்து, ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்தது. இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாய் மௌனிகா அளித்த புகாரின்பேரில், சிவகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கோவை மேயர் நேரில் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

கோவை, மே 22- கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட் பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் வெள்ளியன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மாநகராட்சி பொது நிதியின் கீழ், கண பதி புதூர் முதல் வீதியில் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட் டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியையும், வி.என்.எஸ்.நகர் பகுதியில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் திரும்பக் கட்டுதல் பணியையும் மேயர் நேரில் பார்வையிட்டார். மேலும், கொரத்தோட்டம் பகுதியில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்பக் கட்டுதல் பணி, கணபதி கார்டன் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத் தில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் வி.என்.எஸ்.நகர் முதல் சின்னசாமி நகர் வரை கால்வாயின் குறுக்கே ரூ.39.70 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுதல் பணிக ளையும் அவர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மார்க்கெட்டில் எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல், மே 22- நாமக்கல், திருச்செங்கோடு சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி மார்க்கெட்டில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பி னர் திலீப் வியாழனன்று நேரில் ஆய்வு மேற்கொண் டார். அப்போது வியாபாரிகள் கூறுகையில், மார்க்கெட் டில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் வாடகை கட்ட ணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். ரூ.130 வசூலிக்க வேண்டிய இடத்தில் ரூ.200 வரையும், ரூ.180 வசூலிக்க வேண்டிய இடத்தில் ரூ.250 வரையும் வசூ லிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து திலீப் பேசுகையில், “இனி அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தை மட்டுமே வியாபாரிகள் செலுத்த வேண்டும். அதற்கு மேல் யாருக்கும் கூடுதல் தொகை வழங்க தேவையில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

குடியிருப்புக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்கக்கோரி மனு

உதகை, மே 22- மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குள் வனவிலங்கு கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவர்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி மட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்குள் நாள்தோறும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் யானைகள் நுழையும் வழியில் பாதுகாப்பு ஏற்பாடு களை நிரந்தரமாக அமைத்து தர வேண்டும். மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுமார் ஆறு இடங்களில் சோலார் மின் விலக்குகள் அமைக்க வேண்டும். அகழி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி தேவர்சோலை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் யூனஸ் பாபு தலை மையில், அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் தேவராஜிடம் வியாழனன்று மனு அளித்தனர்.

பிறந்த ஒரே நாளில் பெண் சிசு உயிரிழப்பு

ஈரோடு, மே 22- ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனை யில் பெண் சிசு, பிறந்த ஒரே நாளில் உயிரி ழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கஸ்தூரி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள் ஜோதி (34). இவருடைய மனைவி ரேவதி (28). இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ரேவதி மீண்டும் கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து அவரை பிரசவத்துக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் கடந்த மே 19 ஆம் தேதியன்று அனுமதித்தனர். தொடர்ந்து, புத னன்று காலையில் ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலை யில், வியாழனன்று அதிகாலை குழந்தை மூச்சு, பேச்சு இல்லாமல் மயக்க நிலையில் இருந்தது. உடனே இதுகுறித்து மருத்துவ ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந் தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந் துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்த ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்ப வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் விபத்து

உதகை, மே 22- கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானதில், 21 பேர் காயமடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சென்னை, தாம்ப ரத்தில் இருந்து குழந்தைகள் உள்பட 21 பேர் வேனில் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தனர். வேனை ரஞ்சித் (35) என்பவர் ஓட்டினார். மூன்று நாட்கள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, மீண்டும் கோத்தகிரி வழியாக புதனன்று சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குஞ்சப்பனை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை யின் பக்கவாட்டு பகுதியில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பய ணித்த குழந்தை உட்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 18 பேர் லேசான காயம டைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப் புத் துறையினர், வேனில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப் பாளையம், கோத்தகிரி அரசு மருத்துவமனை களுக்கு அனுப்பி வைத்தனர்.

ரயில் போக்குவரத்து மாற்றம்

சேலம், மே 22- ஈரோடு - திருப்பூர் பிரிவில் உள்ள பெருந்துறை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக வரும் மே 24-ம் தேதி ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து மதியம் 1.00 மணிக்கு புறப்படும் 16843 எண் கொண்ட திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில், மே 24 அன்று ஈரோடு சந் திப்புடன் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது. பராம ரிப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்த ரயில் ஈரோடு சந்திப்பிலிருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், வழக்க மான எக்ஸ்பிரஸ் ரயிலின் அனைத்து ரயில் நிலையங்களி லும் நின்று செல்லும். அதேபோல், நாகர்கோவில் சந்திப்பிலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் 16321 எண் கொண்ட நாகர்கோவில் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், மே 24 அன்று ஈரோடு சந் திப்புடன் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். பராம ரிப்புப் பணிகள் முடிந்தவுடன், இந்த ரயில் ஈரோடு சந்திப்பிலி ருந்து கோயம்புத்தூர் சந்திப்பு வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இந்த ரயில், வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயிலின் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.