கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
24 Sept 2026, 12:15 am

டிஜிட்டல் கைது: முதியவரிடம் ரூ.48 லட்சம் மோசடி

ஈரோடு, செப்.23-டிஜிட்டல் கைது எனக்கூறி ஈரோட்டை சேர்ந்தமுதியவரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கச்சேரி வீதியை சேர்ந்தவர் தேவிபிரசாத் (63). இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர்,தேவிபிரசாத் அடையாள அட்டையை வைத்து சிம் கார்டு வாங்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அதிா்ச்சியடைந்த தேவிபிரசாத், சிபிஐ அதிகாரி எனக்கூறிய நபரிடம் வழக்கில் இருந்து விடுவிக்க என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் கூறும் வங்கிக்கணக்கில் உடனடியாக ரூ.48 லட்சத்தை செலுத்தினால் வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என கூறியுள்ளார். இதை நம்பிய தேவிபிரசாத், அந்த நபர்கூறிய வங்கிக்கணக்குக்கு ரூ.48 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து, நடந்தவை குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தேவிபிரசாத் தெரிவித்தபோது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செவ்வாயன்று புகாரளித்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:ரூ. 6 லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையம், செப்.23-மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டநிலையில், கணக்கில் வராத ரூ, 6 லட்சத்து 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.மேட்டுப்பாளையம் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செவ்வாயன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 10 பேர் கொண்ட குழுவினர் நகராட்சி அலுவலகத்தினுள் சென்று ஒவ்வொரு அறையாகசோதனை நடத்தினர். நகராட்சி ஆணையாளர் அமுதா, நகர்மன்ற தலைவர் மெகரீபா பர்வீன் மற்றும் நகராட்சி பொறியாளர் உள்ளிட்டோரின் அறைகளில் சோதனை நடத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.கணினிகளையும் ஆய்வு செய்தனர்.

மாலை நான்கு மணியளவில் தொடங்கிய நிலையில்,இரவு 10.30 மணியளவில் நகராட்சி பணியாளர்களிடமிருந்து ரூ.1.38 லட்சம் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் சில அலுவலர்களின் செல்போனில் “கூகுள் பே” மூலமாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரூ.4.68 லட்சம் பணப்பரிவர்த்தனை என மொத்தமாக ரூ.6.06 லட்சம் கணக்கில் வராத பணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண் கொலை: ஒருவர் கைது

கோவை, செப்.23-கோவையில் 2 சவரன் தங்கச்சங்கிலிக்காக பட்டப்பகலில் பெண்ணை கொலை செய்தவரை காவல் துறையினர்கைது செய்தனர்.

கோவை, குனியமுத்தூர் வெற்றிலைக்காரர் வீதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (54). மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மகள் வீட்டிலிருந்தோ அல்லது வீட்டின் அருகே உள்ள இட்லி கடையிலிருந்தோ உணவு வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த குனியமுத்தூர் போலீசார் உடலை மீட்டுகோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சந்தேகமரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், வீட்டிலிருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போனதும், பிரேதப் பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து தடயவியல் துறையினர் வீட்டில் கிடைத்த வளையல் துண்டுகளை சேகரித்தனர். அவை வீட்டில் பயன்படுத்தப்பட்ட வளையல்களுடன் பொருந்தாதது தெரியவந்ததைத் தொடர்ந்து, போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது, வீட்டின் அருகே இட்லி கடைநடத்தி வந்த விஜயலட்சுமி (42) என்ற பெண் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரணைநடத்தியதில், வீட்டில் தனியாக இருக்கும் விஜயலட்சுமியை நோட்டமிட்டு, மதிய நேரத்தில் வீட்டுக்குள் சென்று 2 சவரன் சங்கிலியை திருடியதாகவும்,இதனை அவர் பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து புதனன்று கைது செய்யப்பட்ட விஜயலட்சுமி நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பேருந்து மீது ஜீப் மோதி விபத்து

உதகை, செப்.23-உதகை - மஞ்சூர் சாலையில் அரசுப்பேருந்து மீது ஜீப் மோதியதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து அதிகரட்டிக்கு பயணிகளுடன் அரசுப் பேருந்து செவ்வாயன்று சென்று கொண்டிருந்தது. உதகை - மஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஜீப் அரசுப்பேருந்து மீது மோதியது. இதில்,ஜீப் ஓட்டுநரான ராஜா (35) என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக தங்கம் கடத்தல்: 2 பேர் கைது

கோவை, செப்.23-சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் 1,571 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்தஇரு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சார்ஜா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்துவரும் பயணிகள் அவ்வப்பொழுது தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வருவது தொடர்கிறது. இந்நிலையில் திங்களன்று இரவு கோவை வந்த ஸ்கூட் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைஅதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதில் வந்த இரு பயணிகள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததால் அவர்களிடம்நடத்திய சோதனையில் அவர்கள் இருவரும் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. சிங்கப்பூரை சேர்ந்த கேசவன் (31) என்ற பயணியிடம் சங்கிலி மற்றும் கட்டியாக 835 கிராம் தங்கமும்,தஞ்சாவூரை சேர்ந்த வீரப்பன் ரங்கசாமி என்ற பயணியிடம் 736 கிராம்தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இரவாகிவிட்ட காரணத்தால், அவர்கள் இருவரும் கோவைதலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாயன்று நேர்நிறுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டதை அடுத்து, இருவரும் கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேளாண் பல்கலைக்கழக அறிவிப்பு

கோவை, செப்.23– தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாகஉள்ள பி.எஸ்சி பட்டப்படிப்பு இடங்களை நிரப்புவதற்கானநேரடி மாணவர் சேர்க்கை, வரும் வியாழனன்று (இன்று) காலை 9:00 மணிக்கு கோவை பல்கலைக்கழகவளாகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

அதன்படி, ஏற்கனவே விண்ணப்பித்து தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள், துணைக்கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில்நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். அதேவேளையில், பொதுக் கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெற்றவர்களுக்கோ அல்லது படிப்பை நிறுத்தியவர்களுக்கோ இதில் பங்கேற்க அனுமதியில்லை. கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் மட்டுமே கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.1,500, இதர பிரிவினர் ரூ.3,000 செலுத்த வேண்டும். தனியார் கல்லூரிகளுக்கான ஆண்டு கல்விக்கட்டணம் சுமார் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வகுப்புவாரியான காலியிட விவரங்கள் வெளியிடப்பட்டது.கூடுதல் விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 ஆகியஎண்களையோ, ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளலாம்.

சாலை விபத்தில் மாணவர் உயிரிழப்பு

தருமபுரி, செப்.23-தருமபுரியில் நடைபெற்ற சாலை விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், ராமாபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் மணிஷ் (16). இவர், பண்டஅள்ளி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது,அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மணிஷின்வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மணிஷ், செவ்வாயன்று உயிரிழந்தார். இதுகுறித்து இண்டூர்காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், செப்.23-நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில் 7 வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில்,மாவட்ட ஆட்சியர் மதுபாலன் செவ்வாயன்றுஅப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

வீதி வீதியாக ஆய்வு செய்த ஆட்சியர், வீடுகளின் வெளியே தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவும், சாலைகளில் கழிவுநீர்தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், டெங்கு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றவும் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக வடுகம் பகுதியில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் விழிப்புணர்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவனின் மாதிரி பரிசோதனையில் முதற்கட்ட முடிவு நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், முழுமையான முடிவுக்குப் பிறகே டெங்கு பாதிப்பு குறித்து உறுதி செய்ய முடியும், என்றார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 3 பகுதிகள் தீவிர கண்காணிப்பு பகுதிகளாக கண்டறியப்பட்டு சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டு, அவர்களும் குணமடைந்துள்ளனர். வடுகத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பொறியாளர்கள் மூலம் மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

காயத்துடன் சுற்றி வந்த குட்டி யானை உயிரிழப்பு

கோவை, செப்.23-வாளையாறு புதுப்பதி கிராமத்தில், காலில் காயத்துடன் சுற்றி வந்த குட்டி யானை உயிரிழந்தது.

கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகம் சோளக்கரை சுற்றுப் பகுதியில்கடந்த 18-ஆம் தேதி கேரளக் காட்டிலிருந்து 3 பெண் யானைகளுடன் நுழைந்த குட்டி யானை, காலில் காயத்துடன்நடக்க முடியாமல் சிரமப்பட்டது. வனத்துறையினர் டிரோன்கேமராக்கள் மூலம் அக்குட்டியை தொடர்ந்துகண்காணித்து வந்தனர். யானைக் கூட்டமஉடனிருந்ததால் மருத்துவக்குழுவால் அருகில் செல்ல முடியவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று இரவு தனியாக நின்ற குட்டி யானை, புதனன்று காலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உதவி வனப்பாதுகாவலர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது குட்டி யானையின் உடலில்ஆழமான துளைக் காயங்கள் இருந்ததுதெரியவந்தது. காட்டில் உள்ள வேட்டையாடும் வனவிலங்கு தாக்கியதாலேயே குட்டியானை உயிரிழந்திருக்கலாம்முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரூ. 6.54 லட்சம் ஆன்லைன் லஞ்சப் பணம் பறிமுதல்!

அவிநாசி, செப். 23-அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் செவ்வாயன்று அதிரடி சோதனை நடத்தினர். 7 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வில், அதிகாரிகளின் செல்போன் மற்றும் யுபிஐ கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.இதில், கணக்கில் வராத ரூ. 6,53,767 ஆன்லைன் பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் அரவிந்த் கணக்கில் ரூ. 5,53,767-ம், மற்றும் செல்வகுமார் என்பவரது கணக்கில் ரூ. 1 லட்சமும் லஞ்சமாகப்பெறப்பட்டது உறுதியானது.இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட 11 முக்கிய ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் கைது: முதியவரிடம் ரூ.48 லட்சம் மோசடி

ஈரோடு, செப்.23-டிஜிட்டல் கைது எனக்கூறி ஈரோட்டை சேர்ந்த முதியவரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கச்சேரி வீதியை சேர்ந்தவர் தேவிபிரசாத் (63). இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், தேவிபிரசாத் அடையாள அட்டையை வைத்து சிம் காா்டு வாங்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அதிா்ச்சியடைந்த தேவிபிரசாத், சிபிஐ அதிகாரி எனக்கூறிய நபரிடம் வழக்கில் இருந்து விடுவிக்க என்ன செய்ய வேண்டும்எனக்கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் கூறும் வங்கிக்கணக்கில் உடனடியாக ரூ.48 லட்சத்தை செலுத்தினால் வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய தேவிபிரசாத், அந்த நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு ரூ.48 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து, நடந்தவை குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தேவிபிரசாத் தெரிவித்தபோது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செவ்வாயன்று புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

மின்தடை அறிவிப்பு

உடுமலை, செப். 23- மடத்துக்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு வேலைகள் செய்வதால் 24ஆம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கண்ணாடிப்புதூர், ரெட்டியபாளையம், நீலம்பூர், குளத்துபாளையம் மற்றும் நல்லூர் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் – பழனி – கோவை வழித்தடத்தில் ‘மெமு’ ரயில்களை இயக்க கோரிக்கை

உடுமலை, செப். 23-திண்டுக்கல் - பழனி - மடத்துக்குளம் - உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பயணிகள் ரயில் சேவை இல்லாததால் மாணவர்கள், தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இவ்வழித்தடத்தில் 4 ‘மெமு’ ரயில்களை இயக்க ஒன்றியரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இப்பகுதியில் இருந்து கோவைக்கு தினசரி பணி, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், திண்டுக்கல்லில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு அதிகாலை ரயில் சேவை இல்லாததால், மக்கள் நெரிசல்மிக்க பேருந்துகளையே நம்பியிருக்கும் சூழல் நிலவுகிறது.

எனவே, திண்டுக்கல்லில் அதிகாலை 5.00 மணிக்கு புறப்பட்டு, பழனி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக காலை 8.30 மணிக்கு கோவை அடைய வேண்டும். கோவையில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.00 மணிக்குத் திண்டுக்கல் சென்றடைய வேண்டும். திண்டுக்கல்லில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.00 மணிக்குக் கோவை சேர வேண்டும். கோவையில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.00 மணிக்குத் திண்டுக்கல் அடைய வேண்டும். இத்தகைய ரயில் சேவை தொடங்கப்பட்டால் வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவர்நோயாளிகள் பெரிதும் பயனடைவர்.மேலும், குறைவாக பயன்படுத்தப்படும் இவ்வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்குவது ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாயை ஈட்டித் தரும். எனவே, பயணிகள் நலன் கருதி இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மனைவியை கொலை செய்தவர் கைது

ஈரோடு, செப்.23-சொத்து தகராறில் மனைவியை கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கஞ்சநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள்,மகன் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் நிலையில், ராஜேந்திரன் மற்றும் பழனியம்மாள் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், ராஜேந்திரன் பெயரில் உள்ள நான்கரை ஏக்கர் தோட்டத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு பழனியம்மாள் கேட்டு வந்ததாகவும், இதற்கு ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகாறு ஏற்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையேசெவ்வாயன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து பழனியம்மாளை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ராஜேந்திரன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தொடர்ந்து, பழனியம்மாளின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ராஜேந்திரனை கைது செய்த போலீசார், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.