தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

6 Oct 2026, 11:24 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு, அக்.6-ஆப்பக்கூடல் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரகட்டுமானப் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்என திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஆப்பக்கூடல் பகுதியில் ஏர்டெல் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டுமனைக்காக அனுமதிக்கப்பட்ட இடத்தில் இப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்துபேரூராட்சி நிர்வாகத்தில் முறையிடப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனம் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். அதில், இங்கு ஜியோ நிறுவனம் அமைத்துள்ள கோபுரத்தால் ஏற்பட்டுள்ள கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் ஏர்டெல் நிறுவனமும் ஒரு டவர் அமைத்து வருகிறது. தாங்கள் நடவடிக்கை எடுத்து மக்களை காக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா செயலாளர் ஆர்.பிரகாஷ் உடனிருந்தார்.

வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்

உதகை, அக்.6-கோத்தகிரி அருகே வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்புஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிராமத்துக்குள் நுழைந்த மூன்று காட்டெருமைகள், இருசக்கர வாகனம் மற்றும் கார்களை சேதப்படுத்தின. இதனால் கிராம மக்கள் மிகுந்தஅச்சமடைந்தனர். இதனால் காட்டெருமைகளை உடனடியாக அடர்ந்தவனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கைவிடுத்தனர். ஆனால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

பருவமழையை நம்பி, சாகுபடிப்பணியில் விவசாயிகள்!

உதகை அக்.6-நீலகிரியில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டாலும், வடகிழக்கு பருவமழையை நம்பி, விவசாயிகள் நிலத்தை உழுதுசாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை சாகுபடியும், அதற்கு அடுத்தபடியாக சுமார் 30,000 ஏக்கரில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும்பூண்டு சாகுபடியும் நடைபெறுகிறது. தேயிலைக்கு விலை இல்லாததால், கடந்த 10 ஆண்டுகளாக மலை காய்கறிகள் மற்றும் மாற்று விவசாயத்தின் மீது பொதுமக்களின் கவனம் திரும்பியுள்ளது. தோட்டக்கலைத் துறையினரும் காய்கறி சாகுபடிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். நீலகிரியில் ஒரு சில நேரங்களை தவிர பெரும்பாலான நேரங்களில் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்துவந்ததால் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

நடப்பாண்டில் கோடை மழை, தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை 32 சதவீதம் குறைவாக பெய்துள்ளதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் நீர்நிலைகள் வறண்டு விட்டன. இந்நிலையில், நீலகிரி மற்றும் கோவைஉட்பட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என்று நம்பி, தற்போது விவசாயிகள் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக நிலத்தை சீர் செய்து, டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிறுமி உயிரிழப்பு

தருமபுரி, அக்.6-தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் சரவணன் (54). இவர் ஞாயிறன்று தனதுஇருசக்கர வாகனத்தில் அவரது மகள் சகானா (18), உறவினரின் மகள் சஸ்டிகா (4) ஆகியோருடன், பொம்மிடி - பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் சென்றுள்ளார். திருவள்ளுவர் சாலை அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தனது இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது, இருளப்பட்டி பீரங்கி நகரை சேர்ந்த பிரதீப் (25) ஓட்டிவந்த இருசக்கரவாகனத்துடன் மோதியது. இதில் பிரதீப் மனைவி கிருபா (21), அவரது மகன்கள் வெற்றி (4), சந்தோஷ் (2), சகானா (18), சஸ்டிகா(4) உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதில், சஸ்டிகா திங்களன்று உயிரிழந்தார்.

வடிகால்களை தூர்வாரமார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

உடுமலை, அக்.6– உடுமலைப்பேட்டையில் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.மழைக்காலத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெரும்ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இப்போதே வடிகால்களை தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வான்று சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன்,கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் முழங்கால் அளவிற்கு தேங்கியது. குறிப்பாக, நாள்தோறும்ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்துநிலையம், தளி சாலை, பழைய பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர்தேங்கியது.இதனால் பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முக்கியசாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டது.

வெறும் ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்கே நகரின் பிரதானப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, நகரின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாய நிலை ஏற்படும். மழைநீர் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாததும், கழிவுநீர்ஓடைகள் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் அடைபட்டு போய் இருப்பதுமே இந்த திடீர் வெள்ளப்பெருக்கிற்கு முதன்மை காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ”ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து ஊர் மூழ்கியபிறகு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, மழைக்காலம் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதே நிரந்தர தீர்வாக அமையும்” என்று பொதுமக்கள்தெரிவிக்கின்றனர்.

சிபிஎம் கோரிக்கை

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு விடுத்துள்ள அறிக்கையில், ”உடுமலை நகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளை நகராட்சி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்யவேண்டும். அடைப்பு ஏற்பட்டுள்ள வடிகால்களை உடனுக்குடன் சீரமைத்து, ஓடைகளை தூர்வாரி மழைநீர் தடையின்றிவெளியேற செய்ய வேண்டும். குறிப்பாக பேருந்து நிலையம், தளி சாலை போன்ற மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே நகரின் அனைத்து வடிகால்களையும் தூய்மைப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பையும்தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய நகராட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

மானிய விலையில் விதைகள், உரங்கள்

உடுமலை, அக்.6-உடுமலைப்பேட்டை வேளாண்மைத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, உடுமலைப்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையம், சாலையூர் துணை வேளாண்மை விரிமையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு விதைகள் மற்றும் உயிர் உரங்கள் கையிருப்பில் உள்ளது. இதன்படி, மக்காச்சோளம்,சோளம், உளுந்து, கொண்டைக்கடலை, பாசிப்பயறு உள்ளிட்ட விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் மானியவிலையிலவிற்பனைக்கு உள்ளன. எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் மற்றும் உயிர் உரங்களை மானிய விலையில் பெற்று, வேளாண் உற்பத்தியில் பயன்படுத்தி பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷக்கடி மருந்துகள் தடையின்றி கிடைக்க விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை!

உடுமலை, அக்.6– பாம்பு உள்ளிட்ட நச்சுயிரினங்கள் கடித்தால் உயிரை காப்பாற்றும் மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடையின்றி கிடைப்பதை தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க உடுமலைஒன்றியக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடுமலைஒன்றியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால், வீடுகளிலும் விளைநிலங்களிலும் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள், குழந்தைகள், பெண்கள் என கிராமப்புற மக்கள் தொடர் ஆபத்தைசந்தித்துவருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் விஷக்கடிக்கு ஆளாகும் மக்கள் அருகிலுள்ள ஆரம்பசுகாதார நிலையங்களை நாடும்போது, அங்கேயே உயிர்காக்கும் மருந்துகள் உடனடியாக கிடைக்க வேண்டும். மருந்து இல்லாத சூழலில் தொலைதூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஏற்படும் காலதாமதம்,பாதிக்கப்பட்டவரின் உயிரையே பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, கிராமப்புற மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனப்பகுதியைஒட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கான மருந்துகள் எப்போதும் போதுமான அளவில் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும், மருந்துகளின் இருப்பையும் காலாவதி தேதியையும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வதுடன், அவசர சிகிச்சை அளிக்க மருத்துவப் பணியாளர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, உயிரிழப்புகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைமுறையானதாகும். உடுமலை ஒன்றியம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் வனப்பகுதியைஒட்டியுள்ள அனைத்து கிராமப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் விஷக்கடி மருந்துகள் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பணமோசடி குறித்து புகார்

உதகை, அக்.6-ஆன்லைன் டாஸ்க் செய்ய வைத்து, குன்னுரை சேர்ந்தவரிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆன்லைன் டாஸ்க் மோசடி (Online Task Scam) என்பது பகுதிநேர வேலை (Part-time job) தருவதாகக்கூறி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் ஒரு ஆபத்தான இணையவழி மோசடியாகும். இதில் கோடிக்கணக்கில் பணம் இழப்பு ஏற்படாவிட்டாலும், ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கில் பலர் பணத்தை இழக்கிறார்கள். இந்த வகையில்குன்னூர் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்போது ரூ.ஒரு லட்சத்தை இழந்துள்ளார். குன்னூர் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேஸ்புக் மூலம் பொருட்களை வாங்கி விற்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் அவருக்கு டெலிகிராம் மூலம் ஒரு லிங்க் அனுப்பி இந்த லிங்கில் உள்ள பொருட்களை வாங்கி விற்பனை செய்தல் மற்றும் செய்தால் உங்களுக்கு பணம் வரும் என்று கூறியுள்ளனர். அதன்படி, அவர் செய்துள்ளார். அவருக்கு விருச்சுவல் கணக்கில் பணம் இருப்பதாக காட்டியுள்ளது, அந்த பணத்தை எடுக்க, கூடுதலாக பணம் கட்ட வேண்டும் என அந்த நபர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி அவர் ரூ. 1 லட்சம் வரை ஆன்லைன் மூலம் கட்டியுள்ளார். அதன் பின்னரும் அவரால் பணத்தை எடுக்க முடியாதால் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், நீலகிரி குற்றப்புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

தருமபுரி, அக்.6-பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ம.கேசவன் (35). இவர், நல்லம்பள்ளி அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்,இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியின் வீட்டிற்கு பெற்றோர் வீட்டில் இல்லாததை அறிந்து சென்று, மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தருமபுரி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின்கீழ் கேசவனை திங்களன்று இரவு கைது செய்தனர்.

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைச்சர் வன்னியரசு திடீர் ஆய்வு

கோவை, அக்.6-ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களுக்கு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு திங்கள், செவ்வாய் இரண்டு நாள் திடீர் ஆய்வுமேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

டாப்ஸ்லிப், கோழிகமுத்தி, எருமப்பாறை, கூமட்டி, நெடுங்குன்றம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு நேரில்

சென்ற அமைச்சர் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது எருமப்பாறை பகுதி மக்களுக்கு விரைவாக மின்சார வசதி ஏற்படுத்தித் தர வனத்துறை அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் பகுதிக்கு அமைச்சர் சென்றபோது, அப்பகுதி மக்கள் தங்களின் பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்தும், ஆரத்தி எடுத்தும், தாங்களே தயாரித்த மலர்க்கொத்துகளை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, அப்பகுதியில் பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைக்கவும், புதிய குடியிருப்புகள் கட்டித் தரவும் உத்தரவிட்ட அமைச்சர், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தாட்கோ மூலம் சிறு கடன் உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கவும், சாலை வசதி மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தவும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.ஆய்வின் போது, மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடிய நிலையில், அமைச்சரும் அவர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி தனதுமகிழ்ச்சியைவெளிப்படுத்தினார்.

கோவை விமான நிலைய புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

கோவை, அக்.6-கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய இயக்குநராக செவ்வாயன்று எஸ்.தர்மராஜ் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். விமான நிலையத்தில் பயணிகளுக்கான அதிநவீன வசதிகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், மேற்கு மண்டலத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோவையில் விமான நிலையஉள்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்த முழு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக விமான நிலைய விரிவாக்கத்திற்காக இதுவரை சுமார் 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 27 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. விரிவாக்கப் பணிகளின் அங்கமாக வாகன நிறுத்துமிடம் மற்றும் சரக்கு கையாளும் முனையத்தின் பரப்பளவை அதிகப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகளை கூடுதலாக இயக்கும் பொருட்டு பல்வேறு முன்னணி விமான நிறுவனங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்படும். உள்ளூர் தொழில் அமைப்புகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து சரக்குப் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் டிஜி யாத்ரா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.