தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

6 Jul 2026, 9:59 pm
​​​​​​​கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மலைவாழ் மக்களின் பெயரில் வங்கிக் கடன் பெற்று மோசடி: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை, ஜூலை 6- மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர் களது பெயர்களில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலை வாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடை அடுத்த கோபனாரி பகுதி யில் வசித்து வரும் நித்தியா என்ற பெண்மணி அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தனது குழந்தைகளின் படிப்பிற்காக கடன் தேவைப்படுவ தாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறி மலைவாழ் மக்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றையெல்லாம் கொண்டு வங்கிகளில் கடன் வாங்கி அதனை செலுத்தாமல் தங்களை கடன்காரர்களாக மாற்றிவிட்டதாக அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகை யில், தங்கள் மக்கள் பலருக்கும் எழுத படிக்காது தெரியாது. எனவே தங்களை பயன்படுத்தி நித்தியா என்ற பெண் எங்க ளது ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு எண் ஆகிய வற்றையெல்லாம் வாங்கி பல்வேறு கடன்களை பெற்று அதனை செலுத்தாமல் தங்களை கடன் காரர்களாக மாற்றி விட்டனர். அதனால் அந்த பைனான்ஸ் நிறுவனத்தினர் மற்றும் வங்கியினர் எங்களிடம் கடனை செலுத்துமாறு கூறி நான் தோறும் வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை யினரிடம் புகார் அளித்த பொழுதும் தற்பொழுது வரை நடவ டிக்கை இல்லை என்றும் அந்த பெண்மணியிடம் ஏராளமா னோர் ஏமாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

ரயிலில் சிறப்பு தீவிர டிக்கெட் பரிசோதனை: 301 பேர் பிடிபட்டனர்; ரூ.2.64 லட்சம் அபராதம் வசூல்

சேலம், ஜூலை 6- கோவை - சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர டிக்கெட் பரிசோதனையில், டிக்கெட் இன்றி பயணித்த 301 பேரிடம் இருந்து ரூ.2,64,010 அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. கோவையில் இருந்து சில்சார் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண். 15627) ஞாயிறன்று இரவு சிறப்பு தீவிர டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவையிலிருந்து சேலம் நோக்கி ரயில் சென்று கொண்டி ருந்தபோதே இந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டு, ரயிலில் இருந்த அனைத்து பயணிகளிடமும் டிக்கெட்டுகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னா லால் அவர்க ளின் அறிவுறுத்தலின்படியும், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஒய். சரவணக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் வர்த்தகப் பிரிவை சேர்ந்த சுமார் 16 டிக்கெட் பரிசோதனை ஊழி யர்கள் அடங்கிய சிறப்புக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் உடனடி யாக பொதுப் பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும், டிக்கெட் இல்லாமல் மற்றும் செல்லுபடியாகாத டிக்கெட்டுக ளுடன் பயணம் செய்த 301 பயணிகளுக்கு விதிகளின்படி அப ராதம் விதிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.2,64,010 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணிகள் பயணம் செய்வதால், முறையாக டிக்கெட் முன் பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படு வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதன் அடிப்படையிலேயே இந்த சிறப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. பயணிகளின் சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், அனுமதியின்றி பயணிப்பவர்களை கண்ட றிந்து அபராதம் விதிக்கும் இதுபோன்ற தீவிர டிக்கெட் பரி சோதனைகளை சேலம் கோட்டம் தொடர்ந்து மேற்கொள் ளும் என்று சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

5 தலைமுறையாக சாகுபடி செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்குக: தருமபுரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

தருமபுரி, ஜூலை 6- நூற்றாண்டுகளாக தாங்கள் சாகுபடி செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், வனத்துறையினர் வரி விதிப்பதை கைவிடக் கோரியும் தரும புரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணனிடம் போடரஅள்ளி ஊராட்சி கிராம மக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டத்திற்குட்பட்ட போடரஅள்ளி ஊராட்சியில் வாழைத்தோட்டம், முத்தாளம் பள்ளம், எட்டிமரத்துக்குழி, ஆலமரத்துக் கொட்டாய், முருக்கம்பட்டி உள்ளிட்ட 11 கிரா மங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங் கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் 3,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர். மிகவும் பின்தங்கிய சூழலில் உள்ள இவ்விவசாயிகள், கடந்த 100 ஆண்டுகளுக் கும் மேலாக ஐந்து தலைமுறைகளாக இந் நிலங்களை மட்டுமே தங்களது வாழ்வாதார மாக நம்பியுள்ளனர். காடுமேடாக இருந்த நிலங்களை தங்களது கடின உழைப்பால் விளைநிலங்களாக மாற்றியுள்ளனர். இப் பகுதி மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் மின் இணைப்பு, குடிநீர், குடும்ப அட்டை, பள்ளி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தாங்கள் அனுபவித்து வரும் நிலங்க ளுக்கு பட்டா வழங்கக் கோரி பல ஆண்டுக ளாக மனு அளித்து வரும் நிலையில், தற் போது இந்நிலங்கள் வனத்துறைக்கு சொந்தமானவை எனக் கூறி விவசாயிகளை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும், நிலத்தில் உள்ள மாமரங்கள் உள்ளிட்ட இதர பயிர்களுக்கு வரி செலுத்தக் கோரி வனத்துறையினர் நிர் பந்தித்து வருகின்றனர். எனவே, காலம் காலமாகச் சாகுபடி செய்து வரும் தங்களது அனுபவ நிலங்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகளை அச்சுறுத்தி வரி விதிக்கும் வனத்துறையினரின் போக்கைக் கைவிடச் செய்ய வேண்டும் என வலியுறுத் தியுள்ளனர்.

900 சவரன் நகை திருட்டு

கோவை, ஜூலை 6- கோவையில் தொழிலதிபரின் வீட்டில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 900 சவரன் தங்க நகைகள் மாயமான விவகாரத் தில், மருமகனான மருத்துவர் உட்பட மூவர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் அளித்த புகாரின்படி, குடும்பத் தகராறுக்கு பிறகு வீட்டை காலி செய்து சென்ற மருமகன் டாக்டர் விக்னேஷ் லாக்கர் சாவியை ஒப்படைக்க மறுத்துள்ளார். பின்னர் லாக்கரை திறந்து பார்த்தபோது, ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 900 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், டாக்டர் விக் னேஷ், அவரது தாய் வாசுகி மற்றும் சகோதரி டாக்டர் ஜீவிதா ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டா வழங்க தாயகம் திரும்பியோர் மனு

ஈரோடு, ஜுலை 6- தாயகம் திரும்பிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். தாயகம் திரும்பிய குடும்பத்தினர் மற்றும் வடுகப்பட்டி, அரச்சலுார் கிராமத்தில் வாஞ்சிநாதன் குடியிருப்புவாசிக ளுக்கும் வடுகப்பட்டி கிராமத்தில், 250 வீட்டுமனை இடம் தேர்வு செய்யப்பட்டது, அனைத்து வேலைகளும் முடியும் நிலையில் சட்டமன்ற தேர்தல் வந்தது. இதனால் அப்பணி நிறுத்தப்பட்டது. அதேசமயம் தேர்தல் முடிந்த பிறகு, உத்தேச கோரிக்கையை முடித்து பட்டா வழங்க ஆணை தருகிறோம் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மொடக்குறிச்சி வடடாட்சியரை அணுகினால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் பெற்றுத்தரும்படிகூறப்படுகிறது. எனவே, விரைவாக எங்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மயான வசதி செய்து தர கோரிக்கை

ஈரோடு, ஜுலை 6- அந்தியூர் அருகே வசிக்கும் மக்கள் மயான வசதி செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு கொடுத்தனர். அந்தியூர் அருகே கரட்டூர், கொத்தங்காடு நாடார் காலனி, கரட்டூர்மேடு தம்மங்கரடு பகுதியினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கரட்டூர் முதல் கொண்டையம்பாளையம் செல்லும் வழியில் உள்ள நீர் ஓடை கரையை மயானமாக பல தலைமுறையாக பயன் படுத்துகிறோம். இந்த ஓடையில் பாலம் கட்டுமான பணி நடந்து, மயானம் இருந்த இடத்தில் பாலப்பணியை முடித்துள்ளனர். இதனால் மயானம் இல்லாத நிலை ஏற் பட்டுள்ளது. இவ்விடத்துக்கு கிழக்கே ஓடை புறம்போக்கு, 25 சென்ட் உள்ளது. அதை மயானமாக பயன்படுத்த முயன்ற தற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அங்கு பாலம் கட்டுமானப் பணி தொடங்கியது முதல், இப்பிரச்னை குறித்து மனு வழங்கி யும் நடவடிக்கை இல்லை. ஆகவே, எங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும், என வலியுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.