மூளைச்சாவு ஏற்பட்ட முதியவரின் உடலுறுப்புகள் தானம்
6 Jul 2026, 1:04 am
<p><strong>மூளைச்சாவு ஏற்பட்ட முதியவரின் உடலுறுப்புகள் தானம்</strong></p><p>கோவை, ஜூலை 5– சாலை விபத்தில் சிக்கி, மூளைச் சாவு ஏற்பட்ட 75 வயது முதியவரின் உட லுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கோவை மாவட்டம், கவுண்டம் பாளையத்தை அடுத்த டி.வி.எஸ் நகர் சாலை, கோ-ஆப்ரேட்டிவ் பகுதியை சேர்ந்தவர் நா. கோபாலகிருஷ்ணன் (75). இவர் கடந்த ஜூலை 4 ஆம் தேதி யன்று ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பல னின்றி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட் டது. இதையடுத்து, உடலுறுப்பு தானத் தின் முக்கியத்துவம் குறித்து மருத்து வர்கள், அவரது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்தனர். தங்களின் துயரமான சூழ்நிலையிலும், மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் உயரிய நோக்கில் அவரது குடும்பத்தினர் உடலுறுப்பு களை தானம் செய்ய சம்மதம் தெரி வித்தனர். தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுத லின்படியும், கோவை அரசு மருத்துவ மனையின் முதல்வரின் ஆலோசனை யின்படியும், கோபாலகிருஷ்ணனின் ஒரு சிறுநீரகம் மற்றும் இரண்டு கருவிழி கள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாகப் பெறப்பட்டன. இதைய டுத்து அவரது உடலுக்கு, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p>
