முந்தய பக்கம்

போதைக்கெதிராக ‘ப்ரீ பெனால்டி கிக்’

18 Jul 2026, 10:18 pm
போதைக்கெதிராக ‘ப்ரீ பெனால்டி கிக்’
<p><strong>போதைக்கெதிராக ‘ப்ரீ பெனால்டி கிக்’</strong></p><p>கோவை, ஜூலை 18– கோவையில் வாலிபர் சங் கம் சார்பில், ‘போதைக்கு நோ (NO), கால்பந்துக்கு கோ (GO)’ என்ற ப்ரீ பெனால்டி கிக் நிகழ்ச்சி நடைபெற்றது. போதைக்கெதிராக தொடர் இயக்கத்தை முன்னெடுத்து வரும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர், உலக கால் பந்து தொடர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், புது முயற்சியாக, ‘போதைக்கு நோ (NO), கால் பந்துக்கு கோ (GO)’ என்ற போதைக்கெதி ரான இயக்கத்தை கோவையில் சனியன்று மேற்கொண்டனர். இந்நிகழ்வில், ஃப்ரீ பெனால்டி கிக் மூலம் கோல் அடித்தவர்க ளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. முன்ன தாக, போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். இந்நிகழ்விற்கு, வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, நிர்வா கிகள் முத்துமுருகன், பிரவீன் குமார், மாண வர் சங்க மாவட்டத் தலைவர் பாவேல், நிர் வாகிகள் பிரசாந்த், பிஸ்மில்லா கான் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram