தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் தொடரும் போதைக் கொலைகள் இளைஞர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

1 hour before
கோவையில் தொடரும் போதைக் கொலைகள் இளைஞர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

கோவையில் தொடரும் போதைக் கொலைகள் இளைஞர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பாக நடைபெற்ற மூன்று கொலைச் சம்பவங்களும், தகவல் அளித்த நபர் மீதான தாக்குதலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மது, போதைப்பொருள், குழு மோதல் மற்றும் பழிவாங்கும் மனநிலை ஆகியவை இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.

அதிர்ச்சியளிக்கும் வன்முறை சம்பவங்கள்

கிணத்துக்கடவில், நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி கையில் கத்தியுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம், சினிமா பாணி வன்முறை இளைஞர்களிடம் ஏற்படுத்தும் ஆபத்தான தாக்கத்தைக் காட்டுகிறது.இரண்டாவது சம்பவம் பீளமேட்டில், பிறந்தநாளுக்காக சென்னை சென்று திரும்பிய நவீன் என்ற இளைஞர், மது அருந்திய நிலையில் ஏற்பட்ட குழு மோதலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். “நம்ம ஏரியா, நம்ம ஆள்” என்ற குறுகிய குழு மனநிலையே இந்த துயரத்திற்கு சான்றாக உள்ளது. மூன்றாவதாக மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் தொடர்பாகத் தகவல் அளித்து, உயிருக்கு அஞ்சி விடுதியில் அடைக்கலம் கேட்ட அமுதன் என்ற மாணவர், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மாணவர்அளித்த தகவல் எதிர்தரப்பிற்கு எப்படி கசிந்தது என்பதும், கல்லூரி நிர்வாகத்தின் கண்காணிப்புக் குறைபாடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.அடுத்து, பெரியநாயக்கன்பாளையத்தில், கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் 40-க்கும் மேற்பட்ட வகையான போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உறுதிமொழி ஏற்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டும் போதைப்பொருளை ஒழித்துவிடாது. மாணவர்களிடம் விழிப்புணர்வு பேசிவிட்டு, அவர்களின் சுற்றுப்புறத்திலேயே போதைப்பொருள் கிடைக்க அனுமதிப்பது வெறும் கண்துடைப்பாகவே முடியும்.

அரசின் உடனடி நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும்?

போதைப்பொருள் தடுப்பை ‘கஞ்சா ஒழிப்பு’ என்ற அளவில் சுருக்காமல், விநியோக பின்னணியில் உள்ள முக்கிய நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். காவல்துறைக்குத் தகவல் அளிப்பவர்களின் முகவரியையும் அடையாளத்தையும்முழுமையாக ரகசியமாக பாதுகாக்க வேண்டும்.

யத்தில் உள்ள மாணவர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்குவதை கல்லூரிகளும் விடுதிகளும் உறுதி செய்ய வேண்டும். போதைக்கு அடிமையான இளைஞர்களை கைதிகளாகப் பார்க்காமல், அவர்களை மீட்க உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களை அதிகரிக்க வேண்டும்.போதை ஒழிப்பு என்பது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல; அது சமூகப் பாதுகாப்பு சார்ந்த விவகரம். கோவையில் மற்றொரு உயிர் பலியாவதற்கு முன், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தினேஷ்ராஜா,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கோவை மாவட்டச் செயலாளர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.