தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையிலிருந்து 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

3 Nov 2026, 11:56 pm
கோவையிலிருந்து 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கோவையிலிருந்து 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கோவை, நவ.3–தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் கோவையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 200 பேருந்துகள் என மொத்தம் 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இப்பேருந்துகள் வரும் நவம்பர் 5 ஆம் தேதி காலை 6 மணி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்களுடன் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 1,210 பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக 350 பேருந்துகளும் இயக்கப்படும். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம்போல மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம்,திருப்பூர் வழித்தடங்களுக்கு 610 பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு பகுதிளுக்கு 110 பேருந்துகளும் புறப்படும். மேலும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், ஈரோடு, மதுரை மார்க்கமாக 110 பேருந்துகளும், சாய்பாபாகாலனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு 195 பேருந்துகளும் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்துத் தனியார் ஆம்னி பேருந்துகளும் கொடிசியா வளாகத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். கொடிசியாவிலிருந்து புறப்படும் சென்னை, பெங்களூரு பேருந்துகள் அவிநாசி சாலை வழியாகவும், தென்மாவட்டப்பேருந்துகள் சின்னியம்பாளையம், நீலாம்பூர் பைபாஸ் வழியாக திருச்சி சாலையை அடைந்தும் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அனைத்து நிலையங்களிலும் குடிநீர், சுகாதார வளாகம், மழைப் புகலிடக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.