தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கோவை மாவட்ட வரலாறு’ நூல் வெளியீடு

13 Jul 2026, 10:25 pm
‘கோவை மாவட்ட வரலாறு’ நூல் வெளியீடு
<p><strong>‘கோவை மாவட்ட வரலாறு’ நூல் வெளியீடு</strong></p><p>கோவை, ஜூலை 13- காரமடை எள்ளுமணல் முதல் காவிரியின் உப நதியான நொய்யல் கரை வரை பரவி விரிந்து கிடக் கும் மேற்கு மண்டலத்தின் தலைநகரமாம் கோவை, வெறும் தொழில் நகரம் மட்டுமல்ல; அது தொன்மை, கலை, பண்பாடு மற்றும் உழைப்பின் உறைவிடம். சங்க காலம் தொட்டு இன்று வரை தன் தனித்துவ மான வரலாற்றை தன் மடியில் சுமந்து நிற்கும் கோவை மாவட்டத்தின் அரிய வரலாற்றுத் தடங் களை இளைய தலைமுறைக்கு கடத்தும் நோக் கில், முனைவர் சசிகுமார் எழுதிய “கோவை மாவட்ட வரலாறு” நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடை பெற்றது. பீளமேடு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளா கத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்நிகழ் விற்கு, விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயு தம் வரவேற்றார். ஏ.வி. தொழில்குழுமத்தின் தலை வர் ஏ.வி.வரதராஜன் தலைமை வகித்து நூலை வெளியிட, மருத்துவர் டி.ஜெ. ரங்கநாதன் அதனைப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஏ.வி.வரதராஜன் பேசுகையில், இந்நூல் கோவையின் நிகழ்வுகளைத் தாண்டி, அதன் புவியியல் அமைப்பு, ஆறுகள், ஓடைகள் மற்றும் நதிகள் குறித்த ஆழமான விபரங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, ஜப்பானில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து, இந் நிலப்பரப்பு ஜவுளித்துறையில் உலகப் புகழ்பெற்ற தொழில் நகரமாக உருவெடுத்த வரலாற்றை மிகச் சுவாரஸ்யமாக விளக்குகிறது. சுருக்கமாகவும், அரிய தகவல்களுடனும் செதுக்கப்பட்டுள்ள இந்நூலை ‘கோவை களஞ்சியம்’ என்றே அழைக்க லாம். கோவையின் வேர்களைத் தேடும் ஒவ்வொரு வரும், குறிப்பாக இளைய தலைமுறையினர், கட்டா யம் வாசிக்க வேண்டிய வரலாற்றுப் பேழை இது” என்றார். இதனைத் தொடர்ந்து, கற்பகம் உயர் கல்விக் குழுமத்தின் கட்டடக் கலை, வடிவமைப்பு மற்றும் திட்டமிடுதல் துறையின் முதல்வர் பா.கதிரவன், சமூக ஆர்வலர் ராஜன் முரளிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புலவர் செந்தலை நா.கவுத மன் இலக்கிய நயத்துடன் சிறப்புரையாற்றினார். நிறைவாக, நூலாசிரியர் முனைவர் சசிகுமார் நெகிழ்வோடு ஏற்புரையாற்றினார். கோவை மாவட்ட அலையன்ஸ் அரிமா சங்க ஆளுநர் அரங்கநாதன் நன்றி கூற, சிவசக்தி வடிவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில், வாசகர்கள், இலக்கியவாதிகள் என திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.