மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,000 வழங்கிடுக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
29 Sept 2026, 1:38 am
<p><strong>மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,000 வழங்கிடுக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, செப்.28-குறைந்தபட்ச மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 6,000 வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 2 மாதங்களாக பாதிக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள மாதாந்திர உதவித்தொகையை எந்தவித தாமதமுமின்றி உடனடியாக வழங்க வேண்டும். 40 சதவீத பாதிப்பு உள்ளஅனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் எவ்வித அலைக்கழிப்புமின்றி நிதி உதவி வழங்க வேண்டும். அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவதைப்போல தமிழகத்திலும் குறைந்தபட்ச மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 6,000 வழங்கப்பட வேண்டும். முதலமைச்சர் ச.விஜய் தேர்தல் காலத்தில் அறிவித்தவாறு, வாக்குறுதி அளித்த ரூ. 3,000 உதவித்தொகையை உடனடி நிவா</p><p>ரணமாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலைவாய்ப்பை முழுமையாக உத்தரவாதம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இக்கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் கே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், ஒருங்கிணைப்பாளர்கள் விஜயராகவன், டி.இளையராஜா, ஜெயந்தி, எம்.மணி பாரதி, பாலு, பங்கஜவள்ளி, மாற்றுத்திறனாளிகள் சங்க பொறுப்பாளர் என்.ஜாகிர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.</p>
