கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
21 Jun 2026, 2:15 am

கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர் கைது

தருமபுரி, ஜூன் 20- மாரண்டஅள்ளி அருகே கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத் தனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த பிக்கல் நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (35). பாத்திர வியாபாரம் செய்து வந்த இவர், சனியன்று மாரண்ட அள்ளி ஹோண்டா ஷோரூமில் புதியதாக இரு சக்கர வாகனம் எடுக்க ரூ.31 ஆயிரம் முன்தொகையாக செலுத்தினார். அப்போது, 9500 ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது. உடனடியாக ஷோரூம் மேலாளர் ரஞ்சித், மாரண்டஅள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் விரைந்து வந்த காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், ரூபாய் நோட்டுக்களை சோதனை செய்ததில் 19 ஐநூறு ரூபாய் நோட்டுக்களும் கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், அங்கமுத்துவை கைது செய்து, தருமபுரி சிறையில் அடைத்தனர்.

17 வயது சிறுவன் அதிவேகத்தில் காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதி விபத்து

கோவை, ஜூன் 20- கோவையில் 17 வயது சிறுவன் தாறுமாறாக, அதிவே கத்தில் காரை ஓட்டி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2 ஆவது கிராஸ் சாலையில் அதிவேகமாக வந்த வோல்ஸ்வேகன் போலோ கார் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியது. மேலும், சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த காரை நிறுத்த முற்பட்டபோது, அங்கிருந்த விஜயகுமார் என்பவரது வீட்டின் கேட் மீது கார் மோதி, வீட்டின் இரும்பு கேட் பலத்த சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய மூன்று இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளனர். அந்த மூன்று இளைஞர்களையும் பிடித்து, சாய்பாபா காலனி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 3 பேரும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் என்பதும், கார் எடுத்து ஊர் சுற்றி இருப்பதும் தெரியவந்தது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சிறுவர்களின் பெற்றோரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய வீடு இடிந்து விபத்து: தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு!

நாமக்கல், ஜூன் 20- நாமக்கல் மாநகரம் பழைய முன்சீப் கோர்ட் தெருவில், பழைய வீட்டை இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். இப்பகுதியை சேர்ந்த அம்சவள்ளி என்பவருக்கு சொந்தமான பழமையான வீட்டை, அலங்காநத்தத்தைச் சேர்ந்த உதயா (22), மணி (30) ஆகிய தொழிலாளர்கள் வெள்ளியன்று இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர் கள் மேற்கூரையில் ஏறி டிரில்லர் இயந்திரம் மூலம் உடைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் தவ மணி தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மணி உடனடியாக மீட்கப் பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உதயாவை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடிப் படுகா யங்களுடன் மீட்டனர். அவர் சிகிச்சைக்காக நாமக்கல் தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்ப வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர், ஜூன் 20– தமிழகத்தில் அரசு மானியத்துடன் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத் திட்டங்கள் பற்றி திருப்பூர் மாவட்ட தொழில் மையம் அவிநாசி திருப்பூ ரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துகிறது. அவிநாசியில் ஜூன் 23 செவ்வாயன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரையும், திருப்பூரில் அதே நாள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடத்தப்படுகிறது. சுய தொழில் தொடங்க முனையும் வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள் இம்முகாமில் பங்கேற்று அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 8925534022, 8925534025 மற்றும் 8925534024 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மணிஷ் நார ணவரே கூறியிருக்கிறார்.

நெடுஞ்சாலையில் காகிதக்கூழ் கொட்டி விபத்து

அவிநாசி, ஜூன் 20- அவிநாசி அருகே லாரியிலிருந்து காகி தக்கூழ் கலவை சாலையில் சிதறி வழுக்க லாக மாறியதால், பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி அருகே சேவூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை காகிதக் கூழ் கலவையை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மங்கலம் நோக்கிச் சென்றது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, அலட்சியமாக கொண்டு செல்லப் பட்டதால், அவிநாசி – மங்கலம் சாலையில் உள்ள வேகத்தடைகளைக் கடக்கும்போது லாரியிலிருந்து காகிதக்கூழ் கலவை சாலை யில் பெருமளவில் கொட்டியுள்ளது. லாரி சென்ற வேகத்தில், குரும்பபாளையம் பகுதி யில் இருந்து மங்கலம் வரை சுமார் 20 கிலோ மீட்டருக்கும் மேலான தூரத்திற்குச் சாலை முழுவதும் இந்தக் கழிவுகள் பரவிச் சிதறிக் கிடந்தன. அதிகாலை நேரத்தில் கொட்டிய இந்த காகிதக் கூழ், சாலையில் ஒருவித வழுக்கல் தன்மையை ஏற்படுத்தியது. இத னால், இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் நிலைதடுமாறி விபத்துக் குள்ளாதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சேவூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் கழிவுகளை கொட்டிச்சென்ற லாரியை கண்டறிய, அப்ப குதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசுப்பள்ளியில் அரசியல் கட்சித் தலைவரின் புகைப்படம்: இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு

ஈரோடு, ஜூன் 20- சென்னிமலை அரசுப்பள்ளியில் அனுமதி யின்றி அரசியல் கட்சித்தலைவரின் புகைப் படம் வைக்கப்பட்டதற்கு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை நகரத் தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமி ழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நபர்கள், வியாழனன்று பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து, அக்கட்சியின் தலைவருடைய (முதலமைச்சர்) புகைப்படத்தை சட்டத்திற்கு புறம்பாக மாட்டியுள்ளனர். இது மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர சுப்பள்ளி வகுப்பறைகளில் எந்தெந்த தேசிய தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் புகைப் படங்கள் வைக்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை தெளிவான விதிகளை வகுத் துள்ளது. கல்வி கற்கும் பொதுவான இடத் தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தலை வரது புகைப்படத்தை வைப்பது கல்வித் துறை விதிகளுக்கு எதிரானது மட்டுமல்லா மல், பள்ளி வளாகத்திற்குள் தேவையற்ற அர சியல் ஆதிக்கத்தை உருவாக்கும் செயலா கும். மேலும், வெளி நபர்கள் பள்ளி வளாகத் திற்குள் நுழைந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மாணவர்களின் பாதுகாப்பிற் கும் கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது. எனவே, மாணவர் நலன் மற்றும் பொதுக் கல்வி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இவ் விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவ டிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் த.நவீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித் துள்ளார்.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; கைது

சேலம், ஜூன் 20- தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளியை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்ப டைத்தனர். சேலம் மாநகரத்தை சேர்ந்த 9 வயது பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரை பொதுமக்கள் பிடித்து சூரமங்க லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தமிழரசன் ஏற்கனவே பாலி யல் அத்துமீறல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த தும், தொடர்ந்து இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதும், காவல்துறை யினர் விசாரணையில் தெரியவந்தது. இத னைத்தொடர்ந்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தமிழரசனை கைது செய்தனர்.

குழந்தை இறந்த துக்கத்தில் கர்ப்பிணி தற்கொலை

தருமபுரி, ஜூன் 20- அரூர் அருகே 2 வயது குழந்தை உயிரி ழந்த துக்கத்தில், குழந்தையின் தாயாரான கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள டி.ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு மலை. இவரது மனைவி கலைச்செல்வி (28). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு கிரிஸ்மிதா (2) என்ற பெண் குழந்தை இருந்தது. கலைச் செல்வி தற்போது கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கிரிஸ் மிதா, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். குழந்தை இறந்த துக்கத்தில் கலைச்செல்வி இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில், வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல றிந்த கோட்டப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கலைச்செல்வி யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்நடைகளை வேட்டையாடும் புலி

உதகை, ஜூன் 20- நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, பாடந்தொரை அருகே உள்ள கனியம்பயல் பகுதியை சேர்ந்தவர் ஷிஹாபு. இவர் வழக்கம்போல தனது கறவை மாட்டை மேய்ச்சலுக்கு வெள்ளியன்று விட்டுள்ளார். அப்போது, புதரிலிருந்து வந்த புலி, மாட்டை தாக்கிக் கொன்று இழுத்துச் செல்ல முயன்றது. அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதை பார்த்த புலி மாட்டை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றது. இந்த வாரத் தில் இரண்டு கால்நடைகளை புலி தாக்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. புலி தாக்கிக்கொன்ற கால்நடைகளுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ள னர். மேலும், புலி நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப் பகுதி பொதுமக்கள், வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மதுபானக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகை

உதகை, ஜூன் 20- குன்னூர், வண்டிசோலை பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டில் 771 மதுபானக் கடைகள் மூடப் படும் என அறிவிக்கப்பட்டு, பல கடைகள் மூடப்பட்டன. ஆனால், மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை யில் குன்னூர் - கோத்தகிரி மாநில நெடுஞ் சாலையில், வண்டிச்சோலை பகுதியில் கோவில்கள், மகளிர் கல்லூரி, குடியிருப்பு கள், நியாயவிலைக் கடை அமைந்துள்ள பகு தியில் உள்ள மதுபானக் கடையை அதிகாரிகள் அகற்றுவதாக கூறினர். ஆனால், தற்போது வரை அந்த கடை மூடப்படாததால், ஆவேச மடைந்த அப்பகுதி பொதுமக்கள், சனியன்று மதுபானக் கடையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையை மூடாவிட்டால், ஜூலை 5 ஆம் தேதியன்று 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து, பல்வேறு போராட் டங்கள் நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுத் தனர்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:55.15/105 அடி நீர்வரத்து:302 கனஅடி நீர்திறப்பு:520 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:17.72/72 அடி நீர்வரத்து:30கனஅடி நீர்திறப்பு:650கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:64.39/160 அடி நீர்வரத்து:198.05கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:61.80/120அடி நீர்வரத்து:120கனஅடி நீர்திறப்பு:356கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:34.95/60அடி நீர்வரத்து:601கனஅடி நீர்திறப்பு:702கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:40.09/90அடி நீர்வரத்து:191கனஅடி நீர்திறப்பு:502கனஅடி