மக்கள் பணத்தில் உருவான டர்ப் மைதானம் தனியார் லாப வேட்டைக்கா? வாலிபர் சங்கம் கண்டனம்!
15 Jun 2026, 12:28 am
<p><strong>மக்கள் பணத்தில் உருவான டர்ப் மைதானம் தனியார் லாப வேட்டைக்கா? வாலிபர் சங்கம் கண்டனம்!</strong></p><p>கோவை, ஜூன் 14- கோவை மாநகராட்சி பகுதி யில் மக்களின் வரிப்பணத்தில் கட் டப்பட்ட அதிநவீன விளையாட்டு மைதானம் (Turf) தனியாருக்கு விட்டு, வணிக நோக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாலிபர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா, செயலாளர் எம்.தினேஷ் ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதா வது, கோவை மாநகராட்சி முத் தண்ணன்குளம் பகுதியில், உள் ளூர் இளைஞர்களின் விளையாட் டுத் திறனை மேம்படுத்தும் நோக் கிலும், அவர்களின் ஆரோக்கிய மான எதிர்காலத்திற்காகவும் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன புல்வெளி கால்பந்து மைதானம் அமைக்கப் பட்டது. பொதுமக்களின் வரிப்பணத் தில் உருவாக்கப்பட்ட இந்த மைதா னம், அப்பகுதி ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களின் பயன்பாட்டிற் கான பொதுச் சொத்தாக விளங்கி யிருக்க வேண்டும். ஆனால், மாந கராட்சி நிர்வாகம் இந்த மைதா னத்தை “KOVAI ADDA” என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத் துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வசம் சென்றுள்ள இந்த அரசு மைதானத்தில் தற்போது பொதுமக்களிடம் இருந்து, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் ஒரு மணிநேரத்திற்கு ஆயிரம் ரூபா யும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் ஆயிரத்து இருநூறு ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கார ணமாக, திறமையிருந்தும் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும் பத்து இளைஞர்கள் இந்த மைதா னத்தை எட்டிப் பார்க்கக்கூட முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் விளையாட் டுத் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சமூகத்தை உரு வாக்கவும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மைதானம், தற்போது தனியார் நிறுவனத்தின் லாபம் ஈட்டும் கருவியாக மாற்றப்பட்டி ருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கமாகும். எனவே, கோவை மாநகராட்சி, “KOVAI ADDA” நிறுவனத்துடன் செய்துள்ள வணிக ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மைதா னத்தை முழுமையாக கோவை மாந கராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அல்லது, குறிப்பிட்ட நேரங்களில் (உதாரணமாக காலை/மாலை வேளைகளில்) இளைஞர்கள் இலவசமாக பயன் படுத்தும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வா கம் இந்த நியாயமான கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்றத் தவறினால், மக்கள் பணத்தில் உருவான பொதுச் சொத்தை தனி யாரின் லாப வேட்டையிலிருந்து மீட்டெடுக்க, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநகராட்சி அலுவ லகம் முன்பாக பெரிய அளவிலான நேரடி போராட்டங்களில் ஈடுபடு வோம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
