கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மாமன்றத்தில் சிபிஎம் வலியுறுத்தல்
17 Jun 2026, 10:21 pm

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மாமன்றத்தில் சிபிஎம் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 17 – கோவை மாநகராட்சியில் பத்தா யிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப்பணி யாளர்கள் பணியிடம் காலியாக உள் ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மக்களின் சுகாதாரத் தேவையை கருத்தில் கொண்டு உடனடி யாக அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோவை மாநக ராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழு தலை வர் வி.இராமமூர்த்தி வலியுறுத்தினர்.

கோவை மாநகராட்சி சாதாரண மாமன்றக் கூட்டம் விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் புதனன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்குவ தற்கு முன்பாக தற்போதைய முதல் வர் ஜோசப் விஜையின் புகைப்படம் மட்டுமே இருக்கைக்கு மேலே பொருத் தப்பட்டிருந்தது.

அப்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை பொருத்த திமுக கவுன்சிலர்களும், காமராஜர் புகைப்படத்தை பொருத்த காங்கிரஸ் கவுன்சிலர்களும முறை யிட்டனர். அப்போது இரு தரப்பு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக கவுன்சிலர்கள் காங்கிரஸ் ஒழிக என முழக்கங்களை எழுப்பினர். இரு தரப்பும் ஸ்டாலின் மற்றும் காமராஜர் புகைப்படத்தை அரங்கிற்குள் எடுத்து வந்தனர். 20 நிமிடங்கள் வரை இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில் மாநக ராட்சி ஆணையர் ரவி தேஜா தலை யிட்டு அரசாணைப்படி ஒரு முன்னாள் முதல்வர் படத்தை மட்டும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதை யடுத்து மேயரின் மேஜையில் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் வார்டுகளில் உள்ள குறை கள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்றக் குழு தலைவர் ராம மூர்த்தி கூறியதாவது; கோவை மாநக ராட்சியில் மட்டும் 9 ஆயிரத்து 325 பணி யிடங்கள் காலியாக உள்ளது.

மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணி யிடங்கள் தோற்று விக்க வேண்டும். ஏற்கனவே நீண்ட காலமான ஒப்பந்த பணியில் உள்ள தூய்மைப்பணியா ளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மேலும், பணி ஓய்வு பெறும் தொழிலா ளர்களின் குடும்பங்களில் இருந்து வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இது கோவை மாநகராட்சிக்கு மட்டுமல்ல தமிழகம் தழுவிய பிரச்சனை.

கோவை மாநக ராட்சியில் மட்டும் சுமார் பத்தாயிரம் இடங்கள் காலியாக உள்ளது என்றது என்றால், மாநிலம் முழுவதும் 5 லட்சத் திற்கும் மேல் பணியிடங்கள் காலியாக இருக்கும். எனவே, மாநில மக்களின் சுகாதார தேவையை உணர்ந்து புதிய அரசு, தூய்மைப்பணியாளர்களை நிய மிக்கவும், அவர்களுக்கான நியாமான கோரிக்கைகைளை உடனடியாக நிறை வேற்ற வேண்டும்.

இந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாமன்றத் தில் முன்மொழிந்துள்ளதாக தெரிவித் தார்.