தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் கல்லூரி மாணவர் கொலை: சிபிஎம், தீஒமு கண்டனம் போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க வலியுறுத்தல்

14 Aug 2026, 9:19 pm
கோவையில் கல்லூரி மாணவர் கொலை: சிபிஎம், தீஒமு கண்டனம் போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க வலியுறுத்தல்

கோவையில் கல்லூரி மாணவர் கொலை: சிபிஎம், தீஒமு கண்டனம்

போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க வலியுறுத்தல்

சென்னை, ஆக.14 -கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்கவேண்டுமென வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்

பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:கோவை மாவட்டம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் அமுதன் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். இந்தகொடூரக் கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மாணவரை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் கொடிய சம்பவம் தற்செயலாக நடந்த தில்லை. இதற்கு முன்பாக தொடர்ச்சியாக சிறிதும் பெரிதுமாக இரண்டு தாக்குதல்கள் மாணவர்களுக்குள்நடந்திருக்கிறது.

போதைப்பொருள் புழக்கமே காரணம்...

மாணவர்களின் இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு மிக அடிப்படையாக கல்லூரி யில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மாநில அரசும் காவல்துறையும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் என்று இதைச் சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல. இவர்கள் கும்பலாக செயல்படுவதற்கும் தயக்கமின்றி தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும் கஞ்சாவும் போதைப் பொருட்களுமே உந்துதலாக இருந்து வருகிறது.

கல்லூரி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, கொலை செய்யப்பட்ட மாணவர் தங்களிடத்தில் கல்வி கற்க வந்தவர் என்கிற மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. மாணவர் மறைவுக்கு பின்புகூட பெற்றோரை ஆறுதல் படுத்தக்கூட கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை. மாணவரின் பெற்றோர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் உள்பட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்

கோவை மாவட்டத்தில் போதை கலாச்சாரத்தோடு இணைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவையில் கடந்த 10 நாட்களில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது.

இந்த உண்மையை மறைத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே, கோவையைசூழ்ந்து வருகிற இந்த போதை சார்ந்த வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும், போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிப்பதற்கும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி நிர்வாகங்கள் பணம் குவிக்கும் நோக்கத்தோடு மாணவர்களை சேர்க்காமல், சமூக பொறுப்புணர்வுகொண்ட குடிமக்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்கிறசமூக அக்கறையுடன் கல்வி நிர்வாகங்கள் நடந்து கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்டபிரிவுகளின் கீழ் செட்டிபாளையம் காவல்துறை வழக்கு பதிந்து இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து விசாரணை முடியும் வரை பிணையில் வெளிவராத வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.அமுதனின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும், சட்டப்படி தீருதவியும் வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்க போர்க்கால அடிப்படையில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மா நிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.