தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

துபாயில் தேஜஸ் விமானம் விழுந்து விபத்து உயிரிழந்த விமானப்படை வீரருக்கு கோவை ஆட்சியர் அஞ்சலி

23 Nov 2025, 3:44 pm
துபாயில் தேஜஸ் விமானம் விழுந்து விபத்து உயிரிழந்த விமானப்படை வீரருக்கு கோவை ஆட்சியர் அஞ்சலி
<p><strong>துபாயில் தேஜஸ் விமானம் விழுந்து விபத்து உயிரிழந்த விமானப்படை வீரருக்கு கோவை ஆட்சியர் அஞ்சலி</strong></p> <p>கோவை, நவ.23 - சூலூரில் இருந்து துபாய் சென்று சாகசம் செய்த தேஜஸ் விமானம் விழுந்த விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர் உடலுக்கு சூலூர் விமானப்படை தளத்தில் கோவை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இந்தியா உட்பட 115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிலையில், வெள்ளியன்று விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. இதில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து &nbsp;சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக &nbsp;போர் விமானத்தின் விமானி நமன்சி யால் (37) பறந்து சென்று சாகசம் செய் தார். அப்போது திடீரென வானில் இருந்து வந்த விமானம் தரையை நோக்கி பறந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி நமன் சியால் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சூலூர் விமானப்படை தளத்தில் சியால், கமாண்டராக பணியாற்றி வந்தார். விபத்து நடந்த விமானத்தை கண்காட்சியில் இடம்பெறுவதற்காக கோவையில் இருந்து துபாய் வரை அவர் இயக்கியதாக தெரிகிறது. அவரது உயிரிழப்பால் சூலூர் விமானப்படை தளம் சோகமயமாக காட்சி அளிக்கிறது. சூலூர் விமானப் படை குடியிருப்பில் நமன் சியால் தனது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். அவ ருடைய மனைவியும் விமானப்படை அதிகாரி தான். தற்பொழுது விமானப் படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். 7 வயது பெண் குழந்தை இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். &nbsp;இதனிடையே, நமன் சியால் உடல் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, ஞாயிறன்று சூலூர் விமானப் படைத்தளத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அவரது &nbsp;உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.