பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள்
18 hours before
<p><strong>பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள்</strong></p><p>கோவை, நவ. 7-ஆழியாறு சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், தனியார் பங்களிப்புடன் புதிதாகஅமைக்கப்பட்டுள்ள 15 மின் இணைப்புடன் கூடிய வீடு</p><p>களை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர், சனியன்று திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.ஆனைமலை வட்டம், சின்னார்பதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் மற்றும் மின் இணைப்பு கோரிக்கை இருந்து வருகிறது. இக்கோரிக்கை ஏற்று, தனியார்பெருநிறுவனங்களின் நிதியுதவியுடன் இத்திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த விழாவில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, என்எம்சிடி நிறுவனர் சங்கரநாராயணன், மற்றும் வால்காரோ நிறுவன பிரதிநிதி சுமித்ரா பானு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மலைவாழ் மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மேலும் மற்றொரு நிகழ்வில் ஆனைமலை வட்டம், அங்குலக்குறிச்சியில் இயங்கிவரும் 'தாய் அன்பாலயம்' ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில், மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று குழந்தைகளுக்குத் தீபாவளிவாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், குழந்தைகளுக்குஇனிப்புகளை வழங்கி அவர்களுடன் அன்போடு கலந்துரையாடினார்.</p>
