தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் 5.24 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி ஆட்சியர் பவன்குமார் நேரில் ஆய்வு!

14 Jul 2026, 10:42 pm
கோவையில் 5.24 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி ஆட்சியர் பவன்குமார் நேரில் ஆய்வு!
<p><strong>கோவையில் 5.24 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி ஆட்சியர் பவன்குமார் நேரில் ஆய்வு!</strong></p><p>கோவை, ஜூலை 14 - கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 36 ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 5,24,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் 35,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் பணியை ஆட்சியர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், ”சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான நாற்றுகளை வளர்க்கவும் இந்த நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆனைமலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட 12 ஒன்றியங்களில் உள்ள நர்சரிகளில் வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லி, மா போன்ற பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இவை 6 அடி உயரம் வளர்ந்த பிறகு வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லிக்காய், மாங்கனி உள்ளிட்ட மரக்கன்றுகளை சாலையோரங்களில் நடுதல், ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடுதல், அரசு அலுவ லகங்களில் மரக்கன்றுகள் நடுதல், கல்வி நிறுவனங்களில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளுக்கு நடவு செய்ய பயன்படுத்தப்படவுள்ளன என்றார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.