தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவை செம்மொழி பூங்கா நவ.26 ஆம் தேதி திறப்பு

15 Nov 2025, 4:09 pm
கோவை செம்மொழி பூங்கா நவ.26 ஆம் தேதி திறப்பு
<p><strong>கோவை செம்மொழி பூங்கா நவ.26 ஆம் தேதி திறப்பு</strong></p> <p>கோவை, நவ.15- கோவை செம்மொழி பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்த &nbsp;நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சர் கே.என்.நேரு, நவ.26 ஆம் தேதி &nbsp;முதல்வர் திறந்து வைப்பார் என உறுதியளித்தார். கோவை செம்மொழி பூங்கா பணிகள் குறித்து நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு &nbsp;சனியன்று நேரில் ஆய்வு செய்தார். &nbsp;இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், பணிகளை &nbsp;விரைவுபடுத்த உத்தரவிட்டுள் ளோம். ஒரு வாரத்தில் பணிகள் &nbsp;முழுமையடையும். 23 பிரிவுகளா கப் பிரிக்கப்பட்ட பணிகளில் 4 &nbsp;மட்டுமே பாக்கியுள்ளன. பிளே ஏரியா, வாட்டர் கார்டன், பெய்டு பே &nbsp;ஏரியா உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. மற்ற அனைத்து பணி களும் முடிந்துவிட்டன. இம்மாத இறுதியில் (நவ.26 இல்) முதல்வர் &nbsp;பூங்காவை திறந்து வைப்பார். மொத்தம் 167.25 கோடி ரூபாய் &nbsp;ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், &nbsp;கூடுதலாக ரூ.47 கோடி ஒதுக்கப் பட்டு, ரூ.214.25 கோடியில் பணிகள் &nbsp;நடைபெற்று வருகிறது, என்றார். இதைத்தொடர்ந்து பூங்கா வில் மரங்கள் நடவில்லை எனும் &nbsp;கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், &nbsp;&ldquo;அரிதான மரங்கள் நடப்பட்டுள் ளன. ஆயிரம் வகை ரோஜாக்கள் உள்ளன. உலகில் எங்கும் இல் லாத பூக்கள், செடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மரங்கள் நடவு &nbsp;தொடர்கிறது. விரைவில் வளர்ந்து விடும்&rdquo; என்றார். தூய்மைப் பணியா ளர்கள் பணி நிரந்தரம் குறித்து பதில ளிக்காத அமைச்சர், மீண்டும் கேட் கப்பட்டதற்கு, &ldquo;இன்று (சனி யன்று) காலை முதல்வர் 6 திட்டங் களை அறிவித்துள்ளார். ரூ.17 லட் சத்தில் வீடு, மூன்று வேளை உணவு, &nbsp;குழந்தைகள் கல்வி மானியம், மருத் துவ வசதி என அனைத்தும் வழங் கப்பட்டுள்ளது. அவர்களை கவ னிக்கவில்லை என சொல்ல &nbsp;முடியாது. பல இடங்களில் தனி யார்மயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் முடிவெ டுக்க வேண்டிய விவகாரம், என் றார். பீகார் தேர்தல் வெற்றி தமிழ கத்தில் எதிரொலிக்கும் என பாஜக &nbsp;கூறுவதற்கு, &ldquo;பாஜக வேறு &nbsp;என்ன சொல்லும்? உண்மையில் &nbsp;நாங்கள்தான் ஜெயிப்போம். அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்&rdquo; என பதிலளித்தார். தவெக தலை வர் விஜய், தமிழகத்தில் யாரும் ஓட்டு போட முடியாத நிலை வரும் &nbsp;எனக் கூறியது குறித்து, &ldquo;பெரிய &nbsp;அரசாங்கம் உள்ளது. ஒவ்வொரு &nbsp;பூத்துக்கும் பி.எல்.ஓ. போடப்பட் டுள்ளது. 68,000 பேர் பணியாற்று கின்றனர். தேர்தல் ஆணைய அங் கீகரித்த பூத் ஏஜெண்டுகள் உள்ள னர். 90% விண்ணப்பங்கள் நேரடி யாக ஏற்கப்பட்டுள்ளன. இன்னும் 17-18 நாட்கள் உள்ளன. முதல்வர் மாவட்ட ஆட்சியர்களிடம் நேரடி யாகப் பேசி நடவடிக்கை எடுக் கிறார்&rdquo; என்றார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சி யர் பவன்குமார் க. கிரியப்பனவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.