விஷ ஜந்துக்கள் நடமாட்டம்: சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
4 Nov 2026, 12:03 am
<p><strong>விஷ ஜந்துக்கள் நடமாட்டம்: சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்</strong></p><p>கோவை, நவ.3-கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட சின்னார்பதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>ஆழியாறு பூங்கா அருகே அமைந்துள்ள இப்பள்ளி, பழங்குடி மாணவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மாணவர்கள் கல்வி பயில்வதற்காக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் தமிழக அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி மாணவர்கள் உட்பட மொத்தம் 62மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மூன்று ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பள்ளி வளாகத்திற்கு இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால்,மலைப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள், விஷப்பாம்புகள் உள்ளிட்டவனவிலங்குகள் பள்ளி வளாகத்திற்குள்அடிக்கடி வருகிறது. இதனால் பள்ளியில் பயிலும் குழந்தைகளின்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகஅப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும்,இங்கு வரும் சிலர் பள்ளி வளாகத்தில்அமர்ந்து மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை பள்ளி வளாகத்திற்குள் வீசி செல்கின்றனர். இதனால் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மாணவர்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வளாகத்தை சுற்றி பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.</p>
