கோவைச் சிறையிலிருந்து தப்பிய கைதி! தேடும் பணி தீவிரம்; 4 போலீசார் சஸ்பெண்ட்
31 Oct 2026, 11:32 pm

கோவைச் சிறையிலிருந்து தப்பிய கைதி! தேடும் பணி தீவிரம்; 4 போலீசார் சஸ்பெண்ட்

கோயம்புத்தூர், அக். 31 - கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்டவர், சிறை வாசலில் இருந்து தப்பிச் சென்றார்.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் ராகவன் (30). இவரை வழிப்பறி வழக்கில், கடந்த ஜூன் மாதம் பெங்களூரு போலீசார் கோவையில் கைது செய்தனர். ஆனால், அவர்களை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், ஏமாற்றிவிட்டு ராகவன் தப்பிச் சென்றார். இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதனிடையே, ராகவனை வெள்ளியன்று கைது செய்த அன்னூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பதற்காக நள்ளிரவில் கோவை மத்தியச் சிறைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், சிறையின் முதல்நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்ற நிலையில், சிறைச்சாலைக்குச் செல்லும் பிரதான நுழைவு வாயிலில் சோதனைக்காகக் காத்திருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென ராகவன் போலீசாரை ஏமாற்றிவிட்டுத் தப்பிச் சென்றார்.

சிறை வளாகம் முழுவதும் தீவிரமாகத் தேடியும் இரவு முழுவதும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராகவனைப் பிடிக்க மூத்த காவல்அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. டிரோன் கண்காணிப்பு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தல் மற்றும் தீவிர வாகனச் சோதனைகள் மூலம் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கைதியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் அலட்சியமாகச் செயல்பட்டதாக காவல்துறையினர் 4 பேர்தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் 17 சிறைவாசிகள் தப்பிச்சென்ற அதிர்ச்சி நீங்குவதற்குள் கோவை சிறை வளாகத்திலேயே கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.