தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

31 May 2026, 10:52 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுமி வன்கொலை கைதி மீது தாக்குதல் சிறைக்கைதிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை, மே 31- கோவையில் சிறுமி வன்கொலை வழக்கில் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி மீது, தாக்கு தல் நடத்திய கைதிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே கடந்த மே 22 ஆம் தேதி யன்று 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் முக்கிய நபரான கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக் காவல்துறை யினரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, அவரது வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடி வடைந்ததை அடுத்து, கடந்த வியாழனன்று அவர் கோவை மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சனியன்று கோவை சிறை வளாகத்திற்குள் கைதி கார்த்திக்கை, சக கைதிகள் சிலர் சூழ்ந்து கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கார்த்திக் கின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு 5 தையல்கள் போடப் பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சக கைதிகளான நவீன் குமார், ஜீவானந்தம், மகாதேவன், கணேஷ் மற்றும் விஸ்வ நாதன் ஆகிய 5 பேர் மீது பந்தய சாலை காவல் நிலைய போலீ சார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக தாக்குதலில் ஈடுபட்ட 3 கைதி கள் உடனடியாக வெவ்வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நவீன்குமார் வேலூர் மத் திய சிறைக்கும், ஜீவானந்தம் கடலூர் மத்திய சிறைக்கும், மகாதேவன் திருச்சி மத்திய சிறைக்கும் அதிரடியாக மாற்றப் பட்டுள்ளனர்.

இன்று மின்தடை

அவிநாசி, மே 31- திருப்பூர் மாவட்டம், கருவலூர் துணை மின் நிலையத்தில் திங்களன்று (இன்று) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் கருவலூர், அரசப்பம்பாளை யம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்ப பாளையம், பெரியகாட்டுப்பாளையம் மற்றும் செல்லப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030க்குள் 15 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு முதல்வர் விஜய்யிடம் ஏஇபிசி மனு

திருப்பூர், மே 31- தமிழ்நாட்டின் ஆயத்த ஆடைத்துறையை 2030க்குள் 15 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற் கான, மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் கோரிக்கை மனு வழங்கினார். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஆ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோர், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்தனர். தமிழ்நாட்டின் ஆயத்த ஆடைத் துறையின் உலகளாவிய போட்டித்திறனை உயர்த்தவும், ஏற்றுமதி இலக்கை அடையவும் தேவையான கொள்கை பரிந்துரைகள் மற்றும் உள்கட்டமைப்பு தேவைகள் அடங்கிய விரிவான மனுவை முதலமைச்சரிடம் சக்திவேல் சமர்ப்பித்தார். ஆடைத் தொழிலாளர்களுக்கான குறைந்த வாடகை வீட்டு வசதி மற்றும் அவர்களுக்கு நலத்திட்டங்கள், ஏற்றுமதி சார்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்க ளுக்கு நிதி உதவி திட்டங்கள், நவீனமயமாக்கல், ஆட்டோ மேஷன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மூலதன மானியம், துறைமுக இணைப்பு மற்றும் சரக்கு போக்கு வரத்து உள்கட்டமைப்பு மேம்பாடு, கோவை விமான நிலை யத்தை சர்வதேச சரக்கு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொது சுத்திகரிப்பு நிலையங்க ளுக்கு ஆதரவு, ஒழுங்குமுறை அனுமதிகளை எளிமைப்படுத் துதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி முறையை வலுப்படுத் துதல், சர்வதேச பையர் செல்லர் மீட் மற்றும் உலகளாவிய பிராண்டிங் முயற்சிகளை ஊக்குவித்தல், மாநில அளவிலான ஆயத்த ஆடை மேம்பாட்டு வாரியம் மற்றும் திருப்பூர் பின்னல் ஆடை வளர்ச்சி இயக்கம் அமைக்க வேண்டும். பி.எம். மித்ரா பூங்கா திட்டத்தை விரைவாக செயல்படுத்துதல் மற்றும் செயற்கையிழை ஆடை உற்பத்தி உள்கட்டமைப்பு மேம்படுத் துதல், ஆடைத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்கு றையை சமாளிக்க பெரிய அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு முக்கியத்துவத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப பயன்பாட்டிற்கான தனித்த நிதி மற்றும் ஆதரவு திட்டங் கள் அமலாக்க வேண்டும். அதைத்தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை களுக்கென தனித்துறை உருவாக்கியுள்ள முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையை சக்திவேல் பாராட்டினார். தமிழ் நாடு அரசு இக்கோரிக்கைகளை சாதகமாக பரிசீலித்து, ஆயத்த ஆடைத் துறைக்கு முழுமையான ஆதரவை வழங் கும் என்று முதல்வர் உறுதியளித்தார்.

சாலை விபத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

திருப்பூர், மே 31- குண்டடம் பகுதியில் சரக்கு ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள சங்கபாளை யத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (55). இவர், குண்டடம் கால்நடை சந்தைக்கு நண்பருடன் சனியன்று வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண் டிருந்தார். சந்தை அருகே உள்ள தனியார் எண்ணெய் ஆலை எதிரே, சந்தைக்கு செல் லும் கால்நடை ஏற்றிச் சென்ற வாகனங்கள் சாலையை மறைத்திருந்ததால், எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத நிலை ஏற் பட்டுள்ளது. இதையடுத்து முன்னே சென்ற போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ வாகனம், விஸ்வநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படு காயமடைந்து சம்பவ இடத்திலேயே விஸ்வ நாதன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் காவல் துறையினர், விஸ்வநாதனின் சட லத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாராபு ரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம், மே 31– கோடைக்காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, போத்தனூர் மற்றும் திருவனந்தபுரம் இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் (தேவைக் கேற்ற ரயில்கள்) இயக்கப்பட உள்ளது. கோவை மாவட்டம், போத்தனூர் ரயில் நிலையத்திலி ருந்து ஜூன் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) மாலை 17.00 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, செங்கோட்டை வழியாக அடுத்த நாள் காலை 07.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும். மறு மார்க்கத்தில், திருவனந்தபுரம் நோர்த் நிலையத்திலிருந்து ஜூன் 03 மற்றும் 10 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) மதியம் 13.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 06.45 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்த டையும். இந்த சிறப்பு ரயில்கள் பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக் கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளை யம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங் கோட்டை, புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம் மற்றும் வர்க்கலா ஆகிய முக்கிய நிலையங்களில் இருபுறமும் நின்று செல்லும். இவற்றுக்கான முன்பதிவு ஜூன் 1 (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊருக்குள் செல்லாத பேருந்துகளால் மக்கள் அவதி

தருமபுரி, மே 31- காரிமங்கலம் ஊருக்குள் செல்லாமல், புறவழிச் சாலை வழியாக பேருந்துகள் செல்வதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் காரி மங்கலம் பேரூராட்சியும், ஊராட்சி பகுதி அடங்கிய கிராமங்கள் உள்ளன. சேலம், தருமபுரியிலிருந்து பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பெருமளவில் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல் லும். தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை என் பதால், பெரும்பாலன பேருந்துகள் ஊருக்குள் வரா மல், புறவழிச்சாலை வழியாக செல்கின்றனர். இத னால் வெளியூருக்கு வேலைக்கு செல்லும் பொது மக்கள், தருமபுரிக்கு வேலைக்கு சென்று வருவோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். சில பேருந்துகள் ஊருக்கு வெளியே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் காரிமங்கலம் ஊருக்குள் செல்ல ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங் களில் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குறிப் பாக, பெண்கள் ஊருக்குள் செல்ல முடியாமல் சாலை யிலேயே நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. இத னால் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. எனவே, புறவழிச் சாலை வழியாக செல்லும் பேருந்துகளை, காரிமங் கலம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

54 சவரன் கொள்ளை: 2 பேர் கைது

சேலம், மே 31- சேலத்தில் வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற வழக் கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாநகரம், சீலநாயக்கன்பட்டி இபி காலனி பகுதியை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் திருஞானம். இவரது வீட்டில், கடந்த 22 ஆம் தேதியன்று கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவில் இருந்த 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இச்சம் பவத்தில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் மற்றும் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சுதர் சன் ஆகிய இருவரை போலீசார் சனியன்று கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பால் ஏற்றி வந்த மினி லாரி விபத்து

கோவை, மே 31- பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் அலுவ லகத்திலிருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி, பெரியநாயக்கன்பாளை யம் அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளா னது. கோவை, பேரூர் பச்சாபாளையத்திலுள்ள ஆவின் அலுவலகத்தில் இருந்து பால் பாக்கெட்டுகளை சனி யன்று நள்ளிரவு ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரியை பேரூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (50) ஓட்டி வந்தார். மேட்டுப்பாளையம் சாலையில் ராம கிருஷ்ணா வித்யாலயா அருகே உள்ள மேம்பாலம் முன்பு சென்றபோது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. தகவலறிந்த பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் லாரியை மீட்டனர். விபத்தால் பால் பாக்கெட்டுகள் சாலையில் சிதறிக் கிடந்த நிலையில், அவை பின்னர் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இச் சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடிப்படை பிரச்சனைகள்: அமைச்சரிடம் சிபிஎம் மனு

அவிநாசி, மே 31- அவிநாசி பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து அமைச்சர் கமலியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வடுகபாளை யம் ஊராட்சியில் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தில், ஊராட்சி நிர்வாகத்திடம் பணம் செலுத்தப்பட்டு, இரண்டு மாதம் கடந்த நிலையிலும், குடிநீர் இணைப்பு வழங் காமல் இருந்து வருகின்றனர். எனவே, உடனடியாக குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி தர வேண்டும். 6 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீர மைத்து தர வேண்டும். அதேபகுதியில் 60 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கும் நிலை இருந்து வருகிறது. உடனடி யாக 400 மீட்டர் அளவிற்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கால்நடை பாதுகாப்புத்துறை அமைச்சர் கமலியிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று அளித்துள்ளனர். இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, கிளைச் செயலாளர் பழனிச்சாமி, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் கௌரிமணி, ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.