முந்தய பக்கம்

கோவை சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!

yesterday
கோவை சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!
<p>கோவையில் 6 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில், தாய்க்கு ஆயுள் தண்டனையும் அவரது ஆண் நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த அருண் - திவ்யா தம்பதியருக்கு அபிஷேக் என்ற 6 வயது மகன் இருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு, திவ்யா தனது ஆண் நண்பரான ராஜாதுரையுடன் சேர்ந்து சிறுவன் அபிஷேக்கை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், முதல் குற்றவாளியான ராஜாதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார். மேலும், சிறுவனின் தாய் திவ்யாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையுடன் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram