கண்களை கட்டிக்கொண்டு.., கோவை சிறுவன் உலக சாதனை
27 Sept 2026, 11:47 pm
<p><strong>கண்களை கட்டிக்கொண்டு.., கோவை சிறுவன் உலக சாதனை</strong></p><p>கோவை, செப்.27–கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 4 மணி நேரம் ‘எலக்ட்ரிக்கல் கீபோர்டு’ வாசித்து கோவையை சேர்ந்த 11 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.</p><p>கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்.சித்தார்த்தன் (11). இவர் அப்பகுதியில் உள்ள பி.எம்.ஜி (PMG) மெட்ரிகுலேஷன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயதிலிருந்தே இசையின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், முறையான மற்றும் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், தனது அபார திறமையை வெளிப்படுத்தும் வகையில், கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 4 மணி நேரம் இடைவிடாமல் எலக்ட்ரிக்கல் கீபோர்டு வாசித்தார். இவரது இந்த இசை சாதனையை ‘இன்டர்நேஷனல் வேர்ல்ட் ரெக்கார்ட் குரோனிகிள்ஸ்’ (International World Record Chronicles - IWRC) அமைப்பு அங்கீகரித்துள்ளது. தொடர்ந்து, உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ்வழங்கி, சித்தார்த்தனை அந்த அமைப்பு பாராட்டி கௌரவித்துள்ளது. கடின உழைப்பாலும் தொடர் பயிற்சியினாலும் இந்த சாதனையை நிகழ்த்தி இளம்தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் சிசித்தார்த்தனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>
