பிட்காயின் டிரேடிங் பெயரில் ரூ.27 லட்சம் மோசடி: 5 பேர் கைது
15 Jul 2026, 10:58 pm
<p><strong>பிட்காயின் டிரேடிங் பெயரில் ரூ.27 லட்சம் மோசடி: 5 பேர் கைது</strong></p><p>கோவை, ஜூலை 15- கோவையில் ஆன்லைன் மற் றும் பிட்காயின் டிரேடிங் என்ற பெய ரில் பொதுமக்களிடம் லட்சக்கணக் கில் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி யாகக் கைது செய்துள்ளனர். துபாயில் பணியாற்றி வரும் கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் என்பவரை சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், ஆன்லைன் மற்றும் பிட்காயின் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இதனை நம்பிய அவரிடமி ருந்து சுமார் 27 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாயை அக்கும் பல் மோசடி செய்துள்ளது. இது குறித்து ஸ்ரீனிவாச பெருமாள் அளித்த புகாரின் அடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வசந்த், அஜல், ஜனகன், பரத் மற்றும் உதய குமார் ஆகிய ஐந்து பேருக்கும் இந்த மோசடியில் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பரத் என்பவர் பொதுமக்க ளின் அடையாள ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தி 250-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை மோசடிக் காக பயன்படுத்தியது அம்பலமா னது. மேலும், உதயகுமார் என்பவர் பொதுமக்களின் வங்கிக் கணக்கு களை பெற்று வெளிநாட்டு நபர்க ளுக்கு மோசடிக்காக அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப் பட்டுள்ள இந்த கும்பல் மீது ஏற் கனவே 9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளதும் அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களை தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், இவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பிற நபர்கள் குறித்தும் விரிவான விசாரணையை மேற்கொண்டு வரு கின்றனர்.</p>
