தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை!

6 May 2026, 12:57 am
கோவையில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை!

கோவையில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை!

கோவை, மே 5- கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 10 சட்டமன்ற தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடை பெற்று முடிந்தது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர் தல் வாக்குப் பதிவு கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த பத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கள் சுயேச்சைகள் என மொத்தம் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் கோவை தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல் லூரிக்கு கொண்டு வரப்பட்டு ஸ்ட்ராங் ரூம்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது.

தேர்தலில் பதி வான வாக்குகள் எண்ணும் பணிகள் திங்களன்று நடைபெற்றது.

இதையொட்டி தொழில்நுட்ப கல்லூரியில் மாநகர காவல் ஆணையர் கண்ணன் தலைமை யில் மூன்றடுக்கு 3 அடுக்கு பாது காப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், நுண் பார்வையாளர் கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் காவல்துறை பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனு மதிக்கப்பட்டனர்.

ஒரு தொகுதிக்கு ஒருவர் என பத்து தொகுதிகளுக்கும் மொத்தம் பத்து தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

திங்க ளன்று காலை 8 மணிக்கு வாக்கு என்னும் பணி தொடங்கியது.

முத லில் தபால் வாக்குகள் எண்ணப்பட் டன.

உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர் அந்தஸ்திலான அதிகாரிகள் மேற்பார்வையில் தபால் வாக்கு கள் எண்ணப்பட்டன.

அதை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு வாக்குப் பதிவு எந்திரங்க ளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியது.

மாவட்ட தேர்தல் அதிகாரி பவன் குமார் தலைமையில் தொகுதி பார்வையா ளர், அரசியல் கட்சிகளின் முகவர் கள் உள்ளிட்டோர் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம்களில் சீல் அகற்றப் பட்டு திறக்கப்பட்டது.

பின்னர் அங்கு இருந்து ஒவ் வொரு எந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகள் எடுத்து வரப்பட்டு வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

முகவர்கள் முன்னி லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காட்டப்பட்டு சீல் அகற் றப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் முகவர்களுக்கு உடனடியாக காட்டப்பட்டது.

காலை முதல் இரவு வரை நடை பெற்ற வாக்கு எண்ணிக்கை அமை தியான முறையில் நடைபெற்று முடிந்தது.

10 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு 11,674 ஓட்டுகள் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நோட்டாவுக்கு மொத்தம் 11,674 வாக்குகள் பதிவா னது.

இது கடந்த சட்டமன்ற தேர்தல் களை விட மிகவும் குறைவாகும், இந்த தேர்தலில் கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளை யம், சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கிடவு ஆறு தொகுதிக ளில் நோட்டாவுக்கு 4 இலக்கத்தில் வாக்குகள் பதிவானது.

கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நான்கு தொகுதிகளில் மூன்று இலக்கத்தில் நோட்டாவுக்கு வாக்குகள் போடப்பட்டு உள்ளன.

கோவை வடக்கு 1,020, கோவை தெற்கு 759, சிங்காநல்லூர் 1,346, கவுண்டம்பாளையம் 2,116, தொண் டாமுத்தூர் 1,000, சூலூர் 1,353, மேட்டுப்பாளையம் 839, கிணத்துக் கடவு 1,717 பொள்ளாச்சி 849, வால் பாறை 675 என்று கோவை மாவட்டத் தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி களையும் சேர்த்து நோட்டாவுக்கு 11,674 ஓட்டுக்கள் வாக்குகள் விழுந்த உள்ளது.

அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதி யில் 2,116 வாக்குகளும், குறைந்த பட்சமாக வால்பாறை தொகுதியில் 675 வாக்குகளும் நோட்டாவுக்கு விழுந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நோட்டாவுக்கு 18,637 வாக்குகள் கிடைத்து இருந்தது.

ஆனால் இந்த தேர்தலில் 10 சட்ட மன்ற தொகுதிகளிலும் சேர்த்து 11,674 வாக்குகள் மட்டுமே கிடைத்து இருக்கிறது.

இது கடந்த தேர்தலை விட 6,963 வாக்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.