தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவை அருகே தொல்லியல் அகழாய்வில் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடுகள், கடல் சங்கு மணிகள் கண்டெடுப்பு

24 May 2026, 9:07 pm
கோவை அருகே தொல்லியல் அகழாய்வில் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடுகள், கடல் சங்கு மணிகள் கண்டெடுப்பு

கோவை அருகே தொல்லியல் அகழாய்வில் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடுகள், கடல் சங்கு மணிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர், மே 24- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் கோவை அருகே மேற்கொண்ட அகழாய்வில் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடல் சங்கு மணிகள் உள்ளிட்ட அரிய தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து தமிழ்ப் பல் கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பெ.பாரதஜோதி கூறுகையில், “தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் கோவை மாவட்டம் பூலுவப்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள மோளப் பாளையத்தில் ஏற்கெனவே 2021, 2024 ஆம் ஆண்டுகளில் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் வீ.செல்வகுமார் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முனைவர் வீ.செல்வகுமார் தலைமையில் மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை தொல்லியல் அகழாய்வு மேற்கொண்டனர்.

மொத்தம் 96 சதுர மீட்டர் அளவுள்ள 2 அகழாய்வுக் குழிகளில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், 2 கரியமிலக் காலக் கணிப்பின் மூலம் இப்புதிய கற்கால இடம் பொ.ஆ.மு. (கி.மு.) 1600லிருந்து பொ.ஆ.மு. 1200 வரையான காலக் கட்டத்தைச் சேர்ந்தது என நிரூபிக்கப்பட்டுள் ளது.

இவை கீழடிக்கு 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

இந்த அகழாய்வில் தாழிகள் வடிவிலான குழி வீடுகளும், பல வகையான குழிகளும், குச்சி நடு குழிகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

மெருகேற்றப்பட்ட பானை ஓடுகளும், புதிய கற்காலக் கருவிகளும், குழிகளில் பானை களும், எலும்புகளும், தானியச் சான்றுகளும், அம்மிக்கற்களும் கிடைத்துள்ளன.

குழிகளைச் சுற்றி குச்சி நடுகுழிகள், குழிகளின் மீது கூரை அமைத்திருந்ததை வெளிப்படுத்துகின்றன.

கடற்சங்காலான பல வகை யான மணிகளும், சுடுமண் பொருள்களும், ஓர் அகல் விளக்கும், பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

சுமார் 2 - 3 வயதுக்கு உள்பட்ட இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆடு, மாடு, மான், ஆமை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்கள் அடுத்த கட்டமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த அகழாய்வில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாமல், பாரதியார் பல்கலைக்கழகம், கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள யு.சி. கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்” என்றார் பாரதஜோதி.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.