தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவை அருகே கிணற்றில் கை, கால் கட்டப்பட்ட பெண் சடலம் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

17 Jun 2026, 12:32 pm
கோவை அருகே கிணற்றில் கை, கால் கட்டப்பட்ட பெண் சடலம் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் செயல்படாத தனியார் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து கை, கால் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் கோபிராசிபுரம் பகுதியில் செயல்படாமல் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் சிறுமுகை போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் முன்னிலையில் கிணற்றுக்குள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது கிணற்றில் இருந்த சாக்குப் பையில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது.

பின்னர் சாக்குப் பையை கயிறு கட்டி வெளியே எடுத்து சோதனை செய்தபோது, அதற்குள் பெண் ஒருவரின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததுடன், சடலத்துடன் கல் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சடலத்தை மீட்ட சிறுமுகை போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பெண்ணைக் கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருக்க சடலத்தை சாக்குப் பையில் கட்டி கிணற்றில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண் யார், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.