தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

]விமான நிலையத்தில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு

4 Nov 2026, 12:18 am
]விமான நிலையத்தில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு

விமான நிலையத்தில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு

கோவை, நவ.3-கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் பறவைகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை,பெங்களூரு, தில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கியநகரங்களுக்கும், ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினசரி நேரடி விமான சேவைகள்இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான நிலையஓடுபாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகள், தெருநாய்கள் சுற்றித்திரிவது விமானங்களின் பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டுக்கு பெரும் சவாலாகமாறியுள்ளது. கடந்த காலங்களில் இங்கு பறவைகள் மோதி விமானங்கள் சேதமடைந்த சம்பவங்களும், விமான சேவைகள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. தற்போதுஓடுபாதை அருகே பறவைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதால், பணியாளர்கள் ஒலி எழுப்பும் வெடிகளை வெடித்து அவற்றை விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து விமான நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், விமானங்களை எவ்வித இடையூறுமின்றி இயக்குவதற்கு ஓடுபாதையை சுற்றிலும் பறவைகள், விலங்குகளின் நடமாட்டம்இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அண்மைக்காலமாக ஓடுபாதை பகுதிகள் மட்டுமன்றி, முனையத்தின் நுழைவாயில், புறப்பாடு மற்றும் வருகைப்பகுதிகளிலும் தெருநாய்களும் புறாக்களும் அதிகளவில்

காணப்படுகின்றன. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மோசமான வானிலைக்கு இடையே பறவைகளின் நடமாட்டமும் கூடுதல் அச்சுறுத்தலாக உள்ளது. எனவேவிமான நிலைய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து துரித தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தன.

இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கையில், விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இறைச்சிக்கடை உரிமையாளர்களும், பொது

மக்களும் இறைச்சிக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதாலேயே அவற்றை உண்பதற்காக பறவைகளும், நாய்களும் பெருமளவில் குவிகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உரிய தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். அதேநேரத்தில், விமானநிலையத்தில் உள்ள சுகாதாரமற்ற நிலையில் கழிவறைகள் உள்ளதாகவும், குடிநீர் குழாய்கள் சுத்தமில்லாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.