தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு சாலை வசதி மறுப்பு

29 Jun 2026, 12:25 am
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு சாலை வசதி மறுப்பு
<p><strong>கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு சாலை வசதி மறுப்பு</strong></p><p>கோவை, ஜூன் 28- கோவை விமான நிலைய விரி வாக்க திட்டத்திற்கு நிலம் கொடுத்த பலரும், முறையான சாலை வசதியின்றி அவதிக்குள் ளாகி வருவதால், இப்பிரச்சனை யில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திக ழும் கோவை விமான நிலையம், பயணிகள் மற்றும் சரக்கு போக்கு வரத்துக்கான ஒருங்கிணைந்த முனையமாக செயல்பட்டு வருகி றது. இங்கிருந்து உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் நாள் தோறும் இயக்கப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் பேசப்பட்டு வந்த விமான நிலைய விரிவாக்கப் பணி கள், தற்போது தொடங்கி நடை பெற்று வருகின்றன. இப்பணிக ளுக்காக 627 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற தொடங்கியுள் ளன. இந்நிலையில், அவிநாசி சாலை, லீ மெரிடியன் ஹோட்டலில் இருந்து எஸ்ஐஎச்எஸ் காலனி வழி யாக திருச்சி சாலைக்கு செல்லும் பொது பயன்பாட்டு சாலையை மறித்து, இந்த சுற்றுச்சுவர் கட்டப் படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, சின்னியம்பாளை யத்தை சேர்ந்த விவசாயிகள் கூறு கையில், விமான நிலையத்தின் புதிய முனையம் கட்டப்பட்டால், சிங்காநல்லூர் ரயில் நிலையம் ஒன்றரை கி.மீ. தூரத்திலேயே வந்து விடும் என்றும், அங்கிருந்து உடனடி யாக அவிநாசி சாலை மற்றும் விமான நிலையத்துக்கும் எளிதில் செல்ல 200 அடி சாலை மிகவும் அவ சியமாகும் என்றும் சுட்டிக்காட்டி னார். தற்போதைய நிலையில் நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களிடம் எஞ்சியுள்ள நிலங்களில் விவசா யம் செய்யவும், அங்கு குடியிருப் போர் அப்பகுதியை தொடர்ந்து பயன்படுத்தவும் முறையான சாலை வசதி தேவையென தெரி வித்தனர். மேலும், பொது பயன் பாட்டு சாலையான 200 அடி சாலை விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் பகுதிக்குள் சென்றுவிட்டால், தங்க ளது பகுதியை முழுமையாக பயன் படுத்த முடியாது. நிலம் கையகப்ப டுத்தியபோது மாவட்ட நிர்வாகம் மற்றும் விமான நிலைய ஆணை யம் உறுதியளித்தபடி, விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருபுறமும் 10 மீட் டர் அகலத்துடன் கூடிய சர்வீஸ் சாலையுடன் 200 அடி அகலத்தில் புதிய சாலை அமைத்துத் தரப்பட வேண்டும், என்றனர். மேலும், அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ரூ.2,300 கோடியும், விரிவாக்கப் பணிகளுக்காக ஒன்றிய அரசு ரூ.2,160 கோடியும் ஒதுக்கியுள்ளன. வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடைய வேண்டி யிருப்பதால், உடனடியாக 16 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த விரி வாக்க விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, அனைத்து தரப்பின ரின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி, உரிய முடிவெ டுக்க வேண்டும், என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.