தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விமான நிலைய விரிவாக்க ஆய்வு அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

12 Jun 2026, 10:20 pm
விமான நிலைய விரிவாக்க ஆய்வு அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

விமான நிலைய விரிவாக்க ஆய்வு அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

கோவை, ஜூன் 12- சூலூர் அடுத்துள்ள சின்னியம்பாளையம் பகுதியில் சர்வ தேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகளை பார்வையிட வந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயர் அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, தங்களின் 16 ஆண்டுகால வேதனைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர்.

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டத் திற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில், விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் வெள்ளியன்று நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி பொது மக்கள், விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிலம் எடுக் கும் போது தங்களின் வாழ்வாதாரமும், காலம் காலமாக வசித்து வரும் குடியிருப்புகளும் முழுமையாக பாதிக்கப்பட லாம் என்ற அச்சம் நிலவுவதாக அதிகாரிகளிடமும் எம்.எல்.ஏ. விடமும் கவலை தெரிவித்தனர். விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தங்களின் பகுதிக்கு தேவையான வளர்ச்சித் திட்டம் தான் என்றாலும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், உரிய மாற்று ஏற்பாடுகளுடன் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், கடந்த 16 வருடங் களாக இந்த விமான நிலைய விரிவாக்க பிரச்சனையால் தங்களின் நிலங்களை விற்கவோ அல்லது வேறு அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியாமல் பெரும் பாதிப் புக்குள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர். மேலும், ஒரு ஏக்கருக்கு அரசு தற்போது நிர்ணயம் செய்துள்ள இழப் பீட்டுத் தொகை மிகவும் குறைவாக உள்ளதால், தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப நிலத்திற்கு உரிய நியாயமான விலையை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் எனவும், இதற்காக உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து முறைப்படி ஆவணங்களை சரிபார்த்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாக வலியுறுத்தினர்.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளையும், ஆதங்கத்தையும் கேட்டறிந்த சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் மற் றும் அதிகாரிகள், நில நிர்வாக பாதிப்புகள் மற்றும் சந்தை விலைக்கேற்ப இழப்பீடு நிர்ணயம் செய்வது குறித்து உடன டியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என் றும், பொதுமக்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக் காத வகையில் உரிய முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.