முந்தய பக்கம்

விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

13 Jul 2026, 10:37 pm
விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
<p><strong>விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு</strong></p><p>கோவை, ஜூலை 13- கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்களுக் கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக் காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதி யாக, நீலாம்பூர் மற்றும் சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் எந்த அள வில் உள்ளன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் திங்களன்று நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வின் போது, அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்கள் கலந்துரையாடினர். அப்போது, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக பொதுமக்களுக்கு உள்ள சந்தேகங்கள், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு குறைகளை ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பின ரும் பொறுமையுடன் கேட்டறிந்தனர். மக்களின் நியாய மான கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது சம் பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram