கோவை: 4,320 மாணவர்களுக்கு மடிக்கணினி
22 Jan 2026, 2:57 pm
<p><strong>கோவை: 4,320 மாணவர்களுக்கு மடிக்கணினி</strong></p>
<p>கோவை, ஜன.22- கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரி களை சேர்ந்த 4,320 மாணவ-மாணவிய ருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங் கப்பட்டுள்ளன. கல்வி அனைவருக்கும், உயர்வு ஒவ் வொருவருக்கும் என்ற உயரிய நோக்கில் வழங்கப்படும் இந்த மடிக்கணினிகள் உலக தரமான டெல், ஏசர் மற்றும் ஹெச்பி நிறு வனங்களுடையவை ஆகும். இவை நவீன காலத் தேவைக்கேற்ப இன்டெல் i3 மற்றும் ரைசன் 3 செயலிகள், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேகமான நினைவகம் போன்ற உயர் தர தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள் ளன. மேலும், மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகளுக்காக எம்.எஸ் ஆபிஸ் 365 மென்பொருளுடன், இன்றைய காலத்தின் கட்டாயமான செயற்கை நுண்ண றிவு அறிவைப் பெற ‘பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ’ (Perplexity Pro) மென்பொருளின் ஆறு மாத சந்தாவும் விலையில்லாமல் வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்க லைக்கழக இறுதி ஆண்டு மாணவர் முகம் மது ஆசிப் கூறுகையில், “உலகம் இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எட்டியுள்ளது. இக்காலத்தில் மாணவர் களுக்கிடையேயான தொழில்நுட்ப இடை வெளியை குறைக்கவும், கற்றல் வளத்தை மேம்படுத்தவும் முதலமைச்சர் இத்திட் டத்தை தந்துள்ளார். எங்களைப் போன்ற மாணவர்களின் ஆராய்ச்சிப் படிப்பிற்கு இந்த மடிக்கணினி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக ஒட்டுமொத்த மாணவ சமுதாயம் சார்பாக முதலமைச்சருக்கு நன் றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அதேபோல், வேளாண் பல்கலைக்கழக மாணவி ஹாரிணி கூறுகையில், “டிஜிட்டல் உலகில் உயர்கல்வி பயிலும் அனைவ ருக்கும் மடிக்கணினி அவசியம் என்றாலும், எல்லா மாணவர்களாலும் இதனை விலைக்கு வாங்க முடியாது. அந்த குறையை போக் கும் வகையில் அரசு இந்த உயர்தர மடிக் கணினிகளை வழங்கியுள்ளது. இது எங்கள் கற்றல் திறனை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பு மற்றும் இன்டர்ன்ஷிப் பெறுவதற் கும் பேருதவியாக இருக்கும்” எனத் தெரி வித்தார். கோவை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 4,320 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
