கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
20 Mar 2026, 2:55 pm

கோவை - சென்னை இன்டர்சிட்டி ரத்து

சேலம், மார்ச் 20- ஜோலார்பேட்டை – தொட்டம்பட்டி ரயில் நிலையங்க ளுக்கு இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி கள் வரும் மார்ச் 24-ஆம் தேதி நடைபெற உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் கோவையில் இருந்து இயக்கப் படும் முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. மார்ச் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து காலை 06.20 மணிக்குப் புறப்பட வேண்டிய கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12680) மற்றும் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 02.30 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை – கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் (12679) ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இதுதவிர, அரக்கோணம் – சேலம் மெமு (MEMU) மற்றும் ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்றுப் பாதையில் இயங்கும் ரயில்கள்: கோவை – கே.எஸ்.ஆர் பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ் பிரஸ் (22666) அன்றைய தினம் சேலத்தில் இருந்து தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும். இதனால் திருப்பத்தூர், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலை யங்களில் இந்த ரயில் நிற்காது. இதேபோல் பெங்களூரு – கோவை டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் (22665) ரயிலும் ஓசூர், தருமபுரி வழியாக இயக்கப்படும். மேலும், நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி எக்ஸ்பிரஸ் (16340) திண்டுக்கல் – காட் பாடி இடையே திருச்சி, விருத்தாச்சலம் மற்றும் விழுப் புரம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதியம் 02.15 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20643), மார்ச் 24 அன்று 2 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்குப் புறப்படும். அதேபோல், கோவையில் இருந்து மதியம் 03.15 மணிக்குப் புறப்பட வேண்டிய கோவை – சென்னை கோவை எக்ஸ்பிரஸ் (12676), அன்று 2 மணி நேரம் தாமதமாக மாலை 05.15 மணிக்குப் புறப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் – டாடா நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வழியில் சுமார் ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

புத்தக மறுசுழற்சி இயக்கம் துவக்கம்

கோவை, மார்ச் 20- கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக உலக மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு படித்ததை பிறருக்கு படிக்கக் கொடுப்போம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி புத்தக மறுசுழற்சி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவர் இரா.பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மார்ச் 18 உலக மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு படித்ததை பிறருக்கு படிக்கக் கொடுப்போம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி 12 நாள் இயக்கமாக இந்த புத்தக மறுசுழற்சி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் விலை உயர்ந்த புத்தகங்களை வாங்க முடியாமல் ஏராளமான மாணவர்கள் வாய்ப்பை இழக்கிறார்கள். மற்றொரு பக்கம் பயன்படுத்தாமல் பலரிடம் தேங்கிக் கிடக்கின்றன. இவர்களை இணைக்கும் பாலமாக புத்தக மறுசுழற்சி இயக்கம் செய்யப்படும். நல்ல நிலையில் இருக்கும் பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் தொடர்பான புத்தகங்கள், கையேடுகள், கல்வி உபகரணங்கள் ஆகியவை கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்கள் வழியாக திரட்டப்பட்டு இலவசமாக வழங்கப்படவுள்ளது. திரட்டப்பட்ட புத்தகங்கள் மார்ச் 30 ஆம் தேதி மேட்டுப்பாளைம் முதன்மை சாலையில் கவுண்டர் மில்ஸ் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் மதியம் 3 மணியளவில் காட்சிப்படுத்தப்படும். தேவைப்படுவோர் புத்தங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதிகளில் சேர அழைப்பு

உதகை, மார்ச் 20- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு விளையாட்டு விடுதி களில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளை யாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. 2026-27 ஆம் ஆண்டுக் கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 1.7.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 1.7.2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப் படும். முதுநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படிப்பில் சேர்வதற்காக இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். இளநிலை படிப்பின்போது சர்வதேச மற்றும் தேசிய அளவி லான போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிக ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த விடுதி சேர்க்கைக்கு www.sdat.gov.in இணைய தளம் மூலமாக மார்ச் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். சிறப்பு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் வரும் மார்ச் 30 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறு கிறது. அதன்படி தடகளம், பளு தூக்குதல், ஜூடோ, வாள் விளையாட்டு, கையுந்துபந்து, கால்பந்து (ஆண்கள்) ஆகி யவை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கி லும், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து மற்றும் கால்பந்து (பெண்கள்) ஆகியவை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கிலும், ஹாக்கி, கபாடி ஆகியவை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கி லும் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீப்பிடித்து எரிந்த கார்

கோவை, மார்ச் 20- கோவை, ஆவாரம்பா ளையம் பகுதியை சேர்ந்த வர் ஸ்ரீரங்கபதி. இவர் தனது காரில் வெள்ளியன்று அவி நாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். சின்னியம் பாளையம் அருகே வந்த போது, காரின் முன் பகுதி யில் திடீரென புகை வந்துள் ளது. இதனை சுதாரித்துக் கொண்டு ஓட்டுநர் காரை நிறுத்தி கீழே இறங்கிய நிலையில், கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதுகு றித்து தகவலறிந்து வந்த பீளமேடு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத் தனர். இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

14 ஆண்டுகளாக மலைப்பகுதியில் கணக்கீட்டாளர் பணி பதவி உயர்வு பெற்றும் பணியிட மாறுதல் மறுக்கும் அவலம்

ஈரோடு, மார்ச் 20- சத்தியமங்கலம் மலைப்பகுதியில் 14 ஆண்டு காலமாக பணிபுரியும் மின்வாரிய பணியாளருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டும் பணியிட மாறுதல் செய்யப்படாத அவலம் நீடிக்கிறது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின்பகிர்மான வட்டம், சத்தியமங்கலம் கோட்டம், கடம்பூர் பிரிவு அலுவலகத்தில் பி.ராஜேந்திரன் மற்றும் பி.மாரிமுத்து ஆகியோர் கணக்கீட்டா ளராக கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த னர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக மலைப் பகுதியில் பணியாற்றி வந்த நிலையில், சத்திய மங்கலம் வடக்கு மற்றும் புங்கம்பள்ளி பிரிவு அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் அளிக்கப் பட்டது. பணியிட மாறுதல் பெற்றிருந்த நிலை யில் கூட பல ஆண்டுகளாக பணி விடுப்பு செய்யப் படாமலேயே குடும்பத்தை பராமரிக்க இயலாம லும், குழந்தைகளின் கல்வி உட்பட அவர்கள் சார்ந்த நலன் குறித்து கவனிக்கப்பட இயலாத நிலையிலேயே பணியாற்றி கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்டது. மறு நியமன பணி இட ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்ட போது, ராஜேந்திரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தங்கள் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்று வோம், அதேசமயம் வாரியப் பணியில் உற்சாத்துட னும், மனநிறைவுடனும் ஈடுபடுவோம் என்று எண் ணியிருந்தனர். ஆனால், ராஜேந்திரன் புங்கம் பள்ளி பிரிவு அலுவலகத்திற்கும், மாரிமுத்து கடம் பூர் பிரிவிற்கும், தற்காலிக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவ்வுத்தரவால் பணியா ளர்கள் மனரீதியாக கடுமையான பாதிப்பிற் குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து சத்தியமங்கலம் செயற்பொறியா ளரிடம் மனு கொடுத்து பேசப்பட்டது. தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பணியாளர்கள், தங்கள் குடும்பத்தை பாதுகாக்க வும், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படாமலி ருக்கவும், வாரிய பணியை நல்ல முறையில் நிறை வேற்றவும் பணியாளர்களின் தற்காலிக பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தப் பட்டது. ஆயினும் மறு உத்தரவு வழங்க மறுக்கப் படுகிறது. இந்நிலையில் ஈரோடு மண்டல தலைமை பொறியாளரிடம் முறையீடு செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு 14 ஆண்டுகளாக மலை யில் பணியாற்றி வந்தோரை மீண்டும் மலையில் பணி செய்ய நிர்பந்திப்பதும், கணக்கீட்டு ஆய்வா ளராகப் பதவி உயர்வு பெற்றும் பணியாளர் பற் றாக்குறையின் காரணமாக மீண்டும் கணக்கீட் டாளர் பணியை மேற்கொள்ளச் செய்வதும் மின் வாரியத்தில் நிலவும் அவலங்களில் ஒன்றாகும்.

ரூ.2.39 கோடி மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகள் பறிமுதல்

நாமக்கல், மார்ச் 20- நாமக்கல்லில் தேர்தல் பறக்கும் படை யினரின் வாகன சோதனையில், ரூ.2.39 கோடி மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படையினர் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் லில் தோட்டக்கலைத்துறை அலுவலர் வெற்றிவேல், சிறப்பு காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் நாமக்கல் சாலையில் வியாழனன்று இரவு வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் கல்லூரி அருகே நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டிற்கு வந்து கொண்டிருந்த டெலிவரி வேனை நிறுத்தி சோதனையிட் டனர். அந்த வேன் சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், வியாபாரிகளிடமிருந்து தங்கம், வெள்ளி, வைர நகைகளை வாங்கி மற்ற ஊர்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், சோதனையில் ரூ.2 கோடி 39 லட்சம் மதிப் புள்ள தங்கம் வெள்ளி வைரம் இருந்தது தெரியவந்தது. அதில் எங்கே கொண்டு செல்ல வேண்டும் என்ற முகவரியும் இருந் தது. மேலும், துப்பாக்கி ஏந்திய பாதுகாவ லர்களுடன் இந்த வேன் வந்தது என்பது குறிப் பிடத்தக்கது. இதனையடுத்து பறக்கும் படையினர் இந்த நகைகளை கைப்பற்றி திருச்செங் கோடு கோட்டாட்சியர் லெனின் வசம் ஒப்ப டைத்தனர். இந்த நகைகள் எங்கிருந்து வந்தது? எங்கு கொண்டு போய் டெலிவரி கொடுக்க வேண்டும் என்ற விவரம் இருந்தது. ஆனால், ஒன்றிய, மாநில வரித்துறையின ருக்கு சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் வரி செலுத்திய ஆவணங்கள் ஏதுமில்லை. இதன் காரணமாக நகைகள் பறிமுதல் செய்யப் பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய, மாநில வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய விசார ணைக்கு பிறகுதான், இந்த நகைகள் வரி செலுத்தப்பட்டவையா? இல்லையா? என்பது தெரிய வரும். இதனிடையே, நகைகளை கொண்டு வந்த பாபு என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில் ரூ.72 லட்சம் பறிமுதல்

ஈரோடு, மார்ச் 20- ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை யினரால் ரூ.72 லட்சம் ரொக் கம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பறக்கும் படை மற்றும் நிலையான கண்கா ணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர். ரூ.50 ஆயிரத் திற்கு மேல் உரிய ஆவணங் கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமு தல் செய்யப்பட்டு வருகி றது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.72 லட்சத்து 53 ஆயிரத்து 530 பறிமுதல் செய்யப்பட் டது. இதில் ஆவணங்களை காட்டியதால் ரூ.46 லட்சத்து 49 ஆயிரத்து 90 திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 440 அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு மையங்கள் ‘ஒரு ஷிப்ட்’ மட்டுமே

சேலம், மார்ச் 20- ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கணி னிமயமாக்கப்பட்ட ரயில் பய ணச்சீட்டு முன்பதிவு மையங் களின் (PRS Centres) செயல் பாட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமை ரம்ஜான் பண் டிகை கொண்டாடப்படு வதை ஒட்டி, ஞாயிற்றுக்கிழ மைகளில் பின்பற்றப்படும் வேலை நேரத்தை போலவே இன்று ஒரு ஷிப்ட் மட்டுமே முன்பதிவு மையங்கள் இயங்கும். இதன்படி, காலை 8 மணி முதல் மதி யம் 14.00 மணி வரை மட்டுமே பொதுமக்கள் ரயில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். மதியம் 2 மணிக்கு மேல் முன்பதிவு மையங்கள் செயல்படாது என்பதால், பயணிகள் இந்த நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பய ணத்திட்டங்களை மேற் கொள்ளுமாறு சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக் கேல் தெரிவித்துள்ளார்.

தொழிலாளியை கட்டி வைத்து தாக்குதல்

ஈரோடு, மார்ச் 20- பெருந்துறை அருகே தொழிலாளியை கட்டிவைத்து தாக்கிய மில் உரிமையா ளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஜம்பை, பாரதி நகரை சேர்ந்தவர் மயில்சாமி (52). அதேபகுதியை சேர்ந்த குமார், மூர்த்தி ஆகிய இருவரும் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், தண்ணீர்பந்தல் பாளை யத்தில் தேங்காய் நார் மில் நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், மில்லில் வெல்டிங் வேலை இருப்பதாக மயில்சாமியை கடந்த மார்ச் 16 ஆம் தேதியன்று அழைத்துள்ளனர். அதன்பேரில் அங்கு சென்ற மயில்சாமி, இரவு 7 மணி வரை வேலை செய்துள்ளார். இதன்பின் மீதமுள்ள வேலைகளை மறு நாள் வந்து செய்து தருவதாக கூறியுள் ளார். அதை ஏற்க மறுத்த குமார், மூர்த்தி ஆகிய இருவரும், பணியை முடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறியதாக தெரி கிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த மயில் சாமியை, மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ள னர். இதுகுறித்த புகாரின்பேரில் குமார், மூர்த்தி ஆகியோர் மீது காஞ்சிக்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.